Leo Scene Leak - ஹைனாவுடன் விஜய் சண்டை இப்படித்தான் இருக்கும்.. லீக்கான லியோ சீன்.. ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை: Leo Scene Leak (லியோ காட்சி லீக்) லியோ படத்தில் ஹைனாவுக்கும் விலங்குக்கும் விஜய்க்கும் நடக்கும் சண்டை காட்சி லீக்காகியிருக்கிறது.

விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் நாளை வெளியாகவிருக்கிறது. படத்தை சுற்றிய அத்தனை பிரச்னைகளும் ஓய்ந்திருக்கின்றன. குறிப்பாக லியோவுக்கு கேட்டை சாத்திய ரோகிணி திரையரங்கமும் லியோ திரைப்படம் திரையிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர்.

 Fans are shocked as the scene of Leo has been leaked

கொஞ்சம் அப்செட்தான்: துணிவு படத்துக்கு கொடுத்த அதிகாலை காட்சி அனுமதியால் ஒரு இளைஞர் உயிரிழந்ததால் லியோ படத்துக்கும் அந்த அனுமதி கிடைக்கவில்லை. படத்தயாரிப்பு நிறுவனம் எவ்வளவோ முட்டி மோதியும் காலை 7 மணி காட்சிக்கான அனுமதியும் கிடைக்கவில்லை. எனவே படத்தின் முதல் காட்சி 9 மணிக்கு திரையிடப்படுகிறது.

வசூல் சாதனை?: படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கி ஒருவாரம் வரை பல தியேட்டர்கள் ஹவுஸ்ஃபுல் ஆகியிருப்பதாக தெரிகிறது. சிங்கிள் ஸ்க்ரீன் தியேட்டர்கள், மல்டி ப்ளெக்ஸ் தியேட்டர்கள் என அனைத்திலும் ரசிகர்கள் குழும இருப்பதால் படம் முதல் வாரத்தில் பெரும் வசூல் சாதனை படைத்து விக்ரம், பொன்னியின் செல்வன் 1,2, ஜெயிலர் ஆகிய படங்களின் சாதனையை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹைனா: படத்தின் ட்ரெய்லரில் மிகப்பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்திய விஷயங்களில் ஒன்று ஹைனா (கழுதைப் புலி) விலங்குடன் விஜய் சண்டையிடும் காட்சி. அதனை லோகேஷ் எப்படி காட்சிப்படுத்தியிருப்பார் படத்தில் எந்த மாதிரியான சூழ்நிலையி இந்தக் காட்சி வரும் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு இருக்கின்றனர். குறிப்பாக கழுதைப் புலியை தமிழ் திரைப்படத்தில் பயன்படுத்தியிருப்பது இதுவே முதன்முறை என பெரும்பாலானோர் கூறுகின்றனர்.

காட்சி லீக்: இந்நிலையில் லியோ படத்தில் ஹைனாவுக்கும், விஜய்க்கும் நடக்கும் சண்டை காட்சி லீக்காகியுள்ளது. அந்தக் காட்சியில் விஜய் வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட்டோடு பனி படர்ந்த வெளியில் இருக்க ஹைனா அவரை பார்த்து துரத்துகிறது. லீக்கான காட்சி மொத்தம் 13 நொடிகள் ஓடுகின்றன. இது தியேட்டரிலிருந்துதான் எடுக்கப்பட்டிருக்கிறது. இதனை பார்த்த ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் என்னது இது இதற்காகத்தான் வெறித்தனமாக வெயிட் பண்ணிக்கொண்டிருந்தோம் இப்படி பொசுக்குனு லீக் ஆகிடுச்சே என்று சோகத்துடனும் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X