ரோபோ சங்கரா இது..? ஆள் அடையாளமே தெரியாமல் மெலிந்துவிட்டாரே... போட்டோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி!

சென்னை: விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ரோபோ சங்கர்.

திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வந்த ரோபோ சங்கர், விஜய் டிவி மூலம் மக்களிடம் பிரபலமானார்.

அதன் பின்னர் அஜித், விஷால், சிவகார்த்திகேயன், விக்ரம், விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கேரக்டரில் நடித்து வந்தார்.

இந்நிலையில், இணையத்தில் வைரலாகும் ரோபோ சங்கரின் சமீபத்திய புகைப்படம் ஒன்று ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

 விஜய் டிவி பிரபலம் ரோபோ சங்கர்

விஜய் டிவி பிரபலம் ரோபோ சங்கர்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் படையப்பா படத்தில் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடிக்கத் தொடங்கியவர் ரோபோ சங்கர். ஆரம்பத்தில் பல படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் முகம் காட்டிய ரோபோ சங்கர், விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் ரொம்பவே பிரபலமானார். தொடர்ந்து ஜோடி நம்பர் 1 உட்பட பல கேம் ஷோக்களில் தனது காமெடிகளால் மக்கள் மனதில் இடம் பிடித்தார். அதனைத் தொடர்ந்து மீண்டும் சினிமா பக்கம் அடியெடுத்து வைத்த ரோபோ சங்கர், இப்போது முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

 திடீரென வைரலாகும் போட்டோ

திடீரென வைரலாகும் போட்டோ

மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாக சின்ன திரையில் கலக்கிய ரோபோ சங்கர், தனுஷுடன் மாரி, அஜித்தின் விஸ்வாசம், சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல், ஹீரோ, விஷாலுடன் இரும்பு திரை, விக்ரமுடன் கோப்ரா என முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடியனாக கலக்கினார். விஜய் டிவியின் நிகழ்ச்சிகள், சினிமா ப்ரோமோஷன் ஈவண்ட்ஸ் என எப்போதும் பிஸியாக இருக்கும் ரோபோ சங்கரின் சமீபத்திய போட்டோ ரசிகர்களையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

 ஆளே அடையாளம் தெரியலையே!

ஆளே அடையாளம் தெரியலையே!

இந்த போட்டோவில் உடல் எடை ரொம்பவே குறைந்து மிகவும் ஒல்லியாக இருக்கிறார் ரோபோ சங்கர். இயல்பாகவே நல்ல வெயிட்டாக இருக்கும் ரோபோ சங்கர், திடீரென உடல் மெலிந்து பார்க்கவே பரிதாபமாக ஒல்லியாக இருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனால், ரோபோ சங்கருக்கு ஏதும் உடல்நிலை சரியில்லையா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். அதேபோல், பழையபடி ஆக்டிவாக இல்லாமல் ரொம்பவே டல்லாக இருக்கிறார் ரோபோ சங்கர்.

 ரோபோ சங்கர் ரசிகர்கள் கவலை

ரோபோ சங்கர் ரசிகர்கள் கவலை

இணையத்தில் வைரலாகி வரும் ரோபோ சங்கரின் போட்டோவை பார்த்து அவரது ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ஒருசிலர் ரோபோ சங்கர் நலமாக தான் உள்ளார் என பதிவிட்டு வருகின்றனர். ஆனால் இன்னும் சிலரோ ரோபோ சங்கரின் முகம் ரொம்பவே வாடிவிட்டதாகவும், அவருக்கு ஏதேனும் உடல்நிலை சரியில்லை என்பது போல பதிவிட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அனுமதியில்லாமல் கிளி வளர்த்த விவாகரம் வைரலானது. அதற்காக அவருக்கு 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 விரைவில் மீண்டு வருவார்

விரைவில் மீண்டு வருவார்

ரோபோ சங்கரின் மகள் இந்திரஜாவும் தற்போது சினிமாவில் காமெடி வேடங்களில் நடித்து வருகிறார். விஜய்யின் பிகில் படத்தில் பாண்டியம்மா கேரக்டரில் நடித்து பிரபலமான இந்திரஜா, அடுத்ததாக கார்த்தி - அதிதி ஷங்கர் நடித்த விருமனில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதுமட்டும் இல்லாமல் ரோபோ சங்கரும் இந்திரஜாவும் அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை தங்களது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து வந்தனர். ஆனால், தற்போது வெளியான ரோபோ சங்கரின் போட்டோவை பார்த்த ரசிகர்கள், அவர் விரைவில் மீண்டு வருவார் என கமெண்ட்ஸ் போட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X