ஊ சொல்றியா மாமா பாட்டுல தான் சூப்பர்.. புஷ்பா2 பாட்டு வொர்த் இல்ல.. மாலைபோட்ட சாமி சொன்னதை கேளுங்க!
சென்னை: பான் இந்திய திரைப்படமாக வெளியான புஷ்பா முதல் பாகம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் வெற்றிபெற்றது.இந்த படத்தை தொடர்ந்து புஷ்பா 2 இரண்டாம் பாகம் நேற்று வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் ஊ சொல்றியா மாமா பாட்டுல தான் சூப்பர் என்று படம் பார்த்த ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கு டாப் நடிகர்களில் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனின் அட்டகாசமான நடிப்பில் வெளியானத் திரைப்படம் புஷ்பா. முதல் பாகத்தில் வெறும் கூலிக்காரனாக இருக்கும் புஷ்பராஜ், செம்மரக்கடத்தலில் ஜாம்பவனாக இருந்த ஜாலி ரெட்டிதீர்த்து கட்டிவிட்டு சிண்டிகேட்டுக்கு தலைவனாகிறார் என்பது போல் முதல் பாகம் முடியும். அதுமட்டுமில்லாமல், தெறிக்கவிட்ட வசனம், பாடல்கள், சண்டை காட்சிகள் என படம் முழுக்க அல்லு அர்ஜுன் சம்பவம் செய்து இருந்தார். ராஷ்மிகாவின் ஆட்டம்,காதல் என அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், படம் பாக்ஸ் ஆபிசில் நன்றாக கல்லா கட்டியது.

294 கோடி வசூல்: இதையடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் புஷ்பா 2 திரைப்படம் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் நேற்று வெளியாது. இதில், அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில், ராவ் ரமேஷ், சுனில், அனசுயா பரத்வாஜ் ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ் மற்றும் தாரக் பொன்னப்பா என பல நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். முதல் பாகத்தை போல இரண்டாம் பாகத்தில் சுவாரசியம் இல்லை என்று ரசிகர்கள் சொன்ன போதும், படம் முதல் நாளில், 294 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் அறிவித்துள்ளது.
சமந்தான் பெஸ்ட்: முதல் பாகத்தில் சமந்தா ஊ சொல்றியா மாமா.. பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருந்தார். அந்த ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் அவர் 5 கோடி ரூபாய் சம்பளமாக பெறப்பட்டதாக சொல்லப்பட்டது. அந்த பாடலுக்கு தமிழில் ஆண்ரியா பாடி இருந்தார். இந்த பாடல் தமிழ் மட்டுமில்லராமல், அனைத்து மொழிகளிலும் மிகப்பெரிய அளவில் டிரெண்டானது. முதல் பாகத்தை போல, இரண்டாம் பாகத்திலும் ஒரு பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என படக்குழு, நடிகை ஸ்ரீலீலா ஒரே ஒரு பாடலுக்கு கவர்ச்சியாக ஆடவிட்டது. ஆனால், அந்த பாடல் ரசிக்கும் படி இல்லை என்றும், ஊ சொல்றியா மாமா பாட்டுதான் சூப்பர், அதில் சமந்தாவின் ஆட்டம் தான் பெஸ்ட், புஷ்பா 2 பாட்டு வொர்த் இல்லை என்று ஐயப்ப சாமிக்கு மாலைபோட்டிருக்கும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











