டேய்..கொஞ்சமாவது பாவம் பாருங்கடா..தென்றல் வந்து என்னை தொடும் சீரியலை பார்த்து நொந்துபோன ஃபேன்ஸ்!

சென்னை : விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தென்றல் வந்து என்னை தொடும். இந்த தொடருக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

திங்கள் முதல் சனி வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் பவித்ரா ஜனனி, வினோத் பாபு ஆகியோர் லீட் ரோலில் நடித்து வருகின்றனர்.

பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரின் நேற்றைய எபிசோடைப் பார்த்து ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

தென்றல் வந்து என்னை தொடும்

தென்றல் வந்து என்னை தொடும்

தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் கடந்த ஆண்டு முதல் எபிசோடை தொடங்கிய போதே, சர்ச்சையில் சிக்கியது. அதாவது, அமெரிக்காவில் படித்துவிட்டு ஊர் திரும்பிய அபியின் கழுத்தில் ரவுடித்தனம் செய்து கொண்டு வெட்டியாக சுற்றி வரும் வெற்றி தாலியை கட்டி விடுகிறார். அபி என்னத்தான் அமெரிக்காவில் படித்த பெண்ணாக இருந்தாலும், கல் ஆனாலும் கணவன் புல் ஆனாலும் புருஷன் என்று அவருடன் குடும்பம் நடந்த சென்று விடுகிறார்.

கடுப்பான பெண்கள்

கடுப்பான பெண்கள்

இந்த எபிசோடு ஒளிபரப்பானதுமே சமூகவலைத்தளங்களில் பெண்கள் அப்படியே கொதித்துப் போனார்கள். யார் என்றே தெரியாத ஒரு ரவுடி தாலி கட்டிவிட்டான் என்பதற்காக, அந்த பெண் அவனுடன் வாழ்வதா ? என்னய்யா உங்க கதை, இப்போதுதான் பெண்கள் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி வருகிறார்கள், இது போன்ற சீரியல்களை எடுத்து பெண்களை மேலும் அடிமையாக்காதீர்கள் என்று பெண்கள் போர் கொடி தூக்கினார்கள்.

இதையடுத்து, பரபரப்பாக பல எபிசோடுகளை கடந்த இந்த சீரியலில், ரவுடியாக இருந்த கணவன் வெற்றியை தனது அன்பால் அபி மாற்றி உள்ளார். எலியும் பூனையுமாக இருந்த ஜோடி தற்போது ரொமான்ஸ் செய்து சாகடித்து வருகிறார்கள். அதுவும் இந்த சீரியலில் அபி புருஷ் என வெற்றியை கூப்பிடுவதை கேட்கும் போது... லவ் டுடே படத்தில் வரும், நீ அவன மாமாகுட்டினு கூப்பிடுவதும்... அவன் உன்னை கண்ணுக்குட்டினு கூப்பிடுவதும் என்று ஹீரோ பேசுவாரே அப்படி காமெடியாக உள்ளது.

மாமனார் மனதில் இடம்பிடிக்க

மாமனார் மனதில் இடம்பிடிக்க

இந்த சீரியலில் கணவன் மனைவி ஒரு வழியாக சேர்ந்த நிலையில், அபியின் குடும்பத்தில் அபியின் அப்பா தனது மகளுக்கு வெற்றி வலுக்கட்டாயமாக தாலி கட்டியதால் இன்னும் அவர் மீது ஆத்திரத்தில் இருக்கிறார். இதனால், மருமகனையும் மாமனாரையும் சேர்த்து வைப்பதற்காக அபி, வெற்றியை தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

அலப்பறை தாங்கமுடியல

அலப்பறை தாங்கமுடியல

இதில் கொடுமை என்னவென்றால், மாமனார் மனதில் இடம் பிடிக்க வெற்றி செய்யும் அலப்பறை தாங்கமுடியல, மாமனாருக்கு காதல் தோல்வி இருப்பதை தெரிந்து கொண்ட வெற்றி, அந்த காதலியின் வீட்டுக்கு சரக்கு வாங்கிக் கொடுத்து மாமனாரை அழைத்து செல்கிறார். காதலியை இவர் பார்ப்பதும்... அந்த அம்மா கண்ணை கசக்குவதும் கொடுமைடா சாமி... பாவம் அந்த மனுசனுக்கு வயசு அறுபதை தாண்டிய நிலையில் ரொமான்சே வரல.

கொஞ்சமாவது பாவம் பாருங்கடா

கொஞ்சமாவது பாவம் பாருங்கடா

இதுல கொடுமையே என்னானா? பேக்கிரவுண்டில் "ராசாவே வருத்தமா" மியூசிக் வேற என நேற்றை எபிசோடு முழுக்க கிரிஞ்ச் பண்ணி வெச்சி இருந்தாங்க. இதுல மருமகனும் மாமனாரும் ஹலமத்தி ஹபிபோ பாடலுக்கு குடித்துவிட்டு டான்ஸ் போட்டது இன்னும் கொடுமை. நேற்றைய எபிசோடை பார்த்த பலரின் மைண்ட் வாய் டேய்..கொஞ்சமாவது பாவம் பாருங்கடா என்பதாகத்தான் இருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X