Leo Poster - விஜய்க்கு இன்னொரு அட்லீயா லோகேஷ் கனகராஜ்?.. லியோ போஸ்டர் சுடப்பட்டதா?.. ரசிகர்கள் கேள்வி
சென்னை: Leo Poster (லியோ போஸ்டர்) லியோ படத்தின் போஸ்டர் வேறு படங்களிலிருந்து சுடப்பட்டிருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார் விஜய். ஏற்கனவே இவர்கள் இரண்டு பேரும் இணைந்து மாஸ்டர் என்ற மெகா ஹிட் திரைப்படத்தை கொடுத்தனர். எனவே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எக்கச்சக்கமாக இருக்கிறது. இதில் சஞ்சய் தத், அர்ஜுன், த்ரிஷா, கௌதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.

ஷூட்டிங் முடிந்தது: படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் முடிந்தது. இதனையடுத்து விஜய் தனது டப்பிங்கை நிறைவு செய்யவிருக்கிறார். அக்டோபர் 19ஆம் தேதி படம் ரிலீஸாக செப்டம்பர் 30ஆம் தேதி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன. மேலும் அப்போதே ட்ரெய்லரும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்தடுத்த அப்டேட்டுகள்: லியோ படத்தின் அப்டேட்டுகள் கடந்த ஜூலையிலிருந்து வரிசையாக வர ஆரம்பித்திருக்கின்றன. ஜூலை மாதம் சஞ்சய் தத் க்ளிம்ப்ஸ், ஆகஸ்ட் மாதம் அர்ஜுன் க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது. சூழல் இப்படி இருக்க சைமா விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ் இன்னும் ஒரு மாதத்துக்கு அடுத்தடுத்து லியோ அப்டேட்டுகள் வரும் என்று கூறி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தார்.
போஸ்டர்கள்: அதன்படி படத்தின் போஸ்டர்கள் வர ஆரம்பித்திருக்கின்றன. முதல் போஸ்டராக லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியானது. அதனையடுத்து லியோ படத்தின் கன்னட போஸ்டர் வெளியானது. நேற்று ஹிந்தி போஸ்டர் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் விஜய் ஆண்டனி மகள் உயிரிழந்ததால் அந்தப் போஸ்டர் இன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்படும்.
வரவேற்பும், விமர்சனமும்: லியோ படத்தின் போஸ்டர்களுக்கு ரசிகர்கள் தங்களது வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். அதேசமயம் கன்னட போஸ்டர் தொடர்பாக விமர்சனங்களையும் முன் வைக்க ஆரம்பித்திருக்கின்றனர். அதாவது லியோவிலிருந்து கடந்த 18ஆம் தேதி வெளியான போஸ்டர் கோல்ட் பர்ஸ்யூட் என்ற ஹாலிவுட் படத்திலிருந்தும், நேற்று முன் தினம் வெளியான இரண்டாவது போஸ்டர் ஆயுதம் என்ற படத்திலிருந்து சுடப்பட்டிருக்கிறது என்று லியோ போஸ்டர்களுடன் அந்தப் போஸ்டர்களையும் கம்பேர் செய்து ரசிகர்கள் பதிவிட்டுவருகின்றனர்.
மேலும் அட்லீதான் இப்படி காப்பி அடிப்பார். இப்போது லோகேஷும் அந்த ஜானருக்குள் சென்றுவிட்டாரா என கேள்வி எழுப்பும் ரசிகர்கள் ஒருவேளை விஜய்க்கு லோகேஷ் கனகராஜ் இன்னொரு அட்லீயாக மாறிவிட்டாரோ என்று சந்தேகம் எழுவதாகவும் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











