சோத்துல பூசணிக்காயை மறைக்கலாம்.. யானையை மறைக்க முடியுமா?.. கேம் சேஞ்சர் வசூல்.. ரசிகர்கள் கலாய்!
ஹைதராபாத்: ஷங்கர் இயக்கத்தில் கார்த்திக் சுப்புராஜின் கதையில் ராம்சரண் நடித்திருக்கும் திரைப்படமான கேம் சேஞ்சர் நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான அந்தப் படம் பெரும்பாலும் நெகட்டிவ் விமர்சனங்களையே பெற்றுவருகிறது. ஆனால் உலகளவில் முதல் நாளில் 186 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பாளர் தில் ராஜூ அறிவித்திருந்தார். ஆனால் அது அத்தனையும் பொய் என்று ரசிகர்கள் கலாய்க்க தொடங்கியிருக்கிறார்கள்.
இந்தியாவின் பிரமாண்ட இயக்குநர் என்று புகழப்படுபவர் ஷங்கர். ஆனால் அவருக்கு கடந்த சில வருடங்களாகவே போதாத காலம் என்றுதான் சொல்ல வேண்டும். அவர் இயக்கிய 2.0, இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களுமே மிகப்பெரிய தோல்வி படங்களாக அமைந்தன. அதனைப் பார்த்த ரசிகர்கள் ஷங்கருக்கு சரக்கு தீர்ந்துவிட்டது; அவர் டீசண்ட்டாக சினிமாவிலிருந்து ஒதுங்கிக்கொள்ளலாம் என்று ஓபனாகவே பேச ஆரம்பித்தார்கள். அதுவும் இந்தியன் 2 படத்தை எல்லாம் கலாய்த்து தீர்த்துவிட்டனர் ரசிகர்கள்.

கேம் சேஞ்சர்: சூழல் இப்படி இருக்க கொரோனா காலத்தில் நடந்த ஒரு Zoom மீட்டிங்கில் கார்த்திக் சுப்புராஜ் சொன்ன ஒன் லைன் பிடித்துப்போனதை அடுத்து அதனை டெவலப் செய்து கேம் சேஞ்சர் என்ற படத்தை உருவாக்கினார் ஷங்கர். இதில் க்ளோபல் ஸ்டார் என்று தெலுங்கு ரசிகர்களால் புகழப்படும் ராம்சரண் ஹீரோவாக கமிட்டானார். அஞ்சலி, கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்தப் படம் நேரடி தெலுங்கு படமாக உருவாகியிருந்தது.
நேற்று ரிலீஸ்: ஷங்கர் எப்படியாவது இந்தப் படத்தில் கம்பேக் கொடுத்துவிட வேண்டும் என்று முனைப்புடன் வேலை செய்ததாக திரைத்துறையிலிருந்து செய்திகள் வெளியாகின. ஷங்கர் கம்பேக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்புடன் நேற்று ரிலீஸான படத்தை பார்க்க ரசிகர்கள் சென்றார்கள். ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. வழக்கமான ஷங்கர் பட ஸ்டைலிலேயே இந்தப் படம் இருந்ததாகவும் ரசிகர்கள் கூறினார்கள். முக்கியமாக ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களில்கூட படத்துக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
இதெல்லாம் நியாயமா?: முக்கியமாக படத்தின் மேக்கிங்கை வறுத்தெடுத்துவிட்டனர் ரசிகர்கள். அட்லீ எப்படி தன்னுடைய படங்களிலிருந்து காட்சிகளை எடுத்து ஜவான் படத்தை உருவாக்கினாரோ அதேபோல் அவரது குருநாதரான ஷங்கரும் கேம் சேஞ்சர் படத்தை தன்னுடைய முந்தைய படங்களிலிருந்து சுட்டிருக்கிறார் என்று ஓபனாக அடித்தார்கள். அதுமட்டுமின்றி அரத பழசான ஸ்டைலிலிருந்து ஷங்கர் வெளியே வந்தால்தான் இனிமேல் அவருக்கு சினிமாவில் இடம் இருக்கும் என்றும் சினிமா ரசிகர்கள் கூறிவருகிறார்கள். இதன் காரணமாக ஷங்கர் உச்சக்கட்ட அப்செட்டில் இருப்பதாகவும் ஒரு தகவல் ஓடுகிறது.
பொய் சொன்ன தில் ராஜூ: இது ஒருபக்கம் இருக்க மறுபக்கம் இன்னொரு சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது. அதாவது இன்று கேம் சேஞ்சர் படத்தின் முதல் நாள் வசூல் குறித்த அறிவிப்பை வெளியிட்டார் தயாரிப்பாளர் தில் ராஜூ. அதில் கேம் சேஞ்சர் முதல் நாளில் 186 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த ரசிகர்களோ உச்சக்கட்ட அதிர்ச்சியாகினர்.
என்னது முதல் நாளே 186 கோடி ரூபாய் வசூலா என்று அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர். மேலும் 90 கோடி ரூபாய்வரைகூட இந்தப் படம் முதல் நாள் வசூலிக்கவில்லை; ஆனால் தயாரிப்பாளரோ யானையை சோற்றில் மறைப்பது போல் 186 கோடி ரூபாய் முதல் நாள் வசூல் என்று அள்ளி விடுகிறார். இதனால் ராம்சரண் Global Fraud Ramcharan என்று அழைக்கப்படுவார் என கூறி அந்த ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கிவருகின்றனர். அதேபோல் வாரிசு படத்தின் வசூலை எப்படி அள்ளிவிட்டாரோ அதேபோல் கேம் சேஞ்சர் படத்துக்கும் தில் ராஜூ வேலையை காண்பித்துவிட்டார் என்று ஓபனாக அடித்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











