பத்து தல இசைவெளியீட்டு விழா.. நயன்தாராவை மறக்காத சிம்பு.. நோட் பண்ணி கலாய்க்கும் பேன்ஸ்!
சென்னை : பத்து தல இசைவெளியிட்டு விழாவில் சிம்பு செய்த செயலை ரசிகர்கள் கண்டுபிடித்து அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.
பத்து தல திரைப்படம் இந்த மாதம் 30ந் தேதி திரையங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தை ஒபேலி என் கிருஷ்ணா இயக்கி உள்ளார்.
இதில், சிம்பு, கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

பத்து தல
பத்து தல திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், கௌதம், பிரியா பவானி சங்கர், ஒபேலி கிருஷ்ணா ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய சிம்பு, இத்தனை நாட்களாக கஷ்டத்தை எல்லாம் பாத்தாச்சு, என்னால பல கஷ்டத்தை நீங்க தாங்கியாச்சு, இனிமே நீங்க சந்தோஷமா இருக்கணும், சிரிக்கணும் அதுதான் என் ஆசை.

ரசிகர்களுக்கு நன்றி
நேரு ஸ்டேடியத்தில் எனக்காக இவ்வளவு பெரிய கூட்டம் வந்திருப்பதை பார்க்கும் போது, என்னை நேசிக்கும் என் ரத்தத்தை பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கு. சிம்புவின் சினிமா வாழ்க்கை முடிந்து விட்டது, சிம்பு இனிமே அவ்வளவு தான் என்று பலர் பேசிய போதும், அந்த நேரத்தில் என்னை தாங்கி பிடித்தது என் ரசிகர்கள் தான் அவர்களுக்கு என் நன்றி.

‘’லூசு பெண்ணே… லூசு பெண்ணே’’
ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் எனக்காக யாரும் சண்டை போட வேண்டாம், எனக்காக நீங்க சண்டை போட்டது போதும் இனிமே நான் என்ன செய்கிறேன் என்று மட்டும் பாருங்க என்று விழா மேடையில் அதிரடியாக பேசிய சிம்பு, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், வல்லவன் படத்தில் இடம் பெற்ற ''லூசு பெண்ணே... லூசு பெண்ணே'' பாடலை பாடி ஆடி இருந்தார்.

நயன்தாராவை மறக்காத சிம்பு
இந்த பாடலை சிம்பு எதார்த்தமாக பாட, இதனை கவனித்த ரசிகர்கள் சிம்பு இன்றும் நயன்தாராவை மறக்கவில்லை என்றும், இந்த பாட்டு நயன்தாராவுக்கா இல்லை ஹன்சிகாவுக்கா என ட்ரோல் செய்து வருகின்றனர். வல்லவன் படத்தில் நயன்தாராவும் சிம்புவும் இணைந்து நடித்தபோது தான் இருவரும் காதலித்ததாக செய்திகள் பரவியது. அதே போல, ஹன்சிகாவை காதலித்தார் அந்த காதலும் தோல்வி அடைந்தது. தற்போது நயன்தாரா, ஹன்சிகா இருவருக்கும் திருமணமாகிவிட்டது.


Click it and Unblock the Notifications











