twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விமர்சனமும், விளம்பரமும்..திரைப்படம் ஓட உதவுமா?..ஓவர் விளம்பரம் எரிச்சலில் ரசிகர்கள்

    |

    சென்னை: ஒருபடம் வருவதற்கு முன்னர் அது குறித்த விளம்பர வேலையை ஓராண்டுக்கு முன்னரே தொடங்கி விடுவது தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

    படம் வெளிவரும் முன் பலகட்டங்களாக அதை பிரபலப்படுத்த எடுக்கும் முயற்சிகள் யாரும் சிந்திக்க முடியாத அளவு இருக்கும்

    பிரபலங்கள் படங்களைப்பற்றி பேசுவது, சில நேரங்களில் நெகட்டிவ் கமெண்ட்ஸ் கூட விளம்பரத்திற்காக வரச்செய்வதும் நடக்கிறது.

    “வெந்து தணிந்தது காடு“…சுடசுட வெளியான ரிலீஸ் தேதி..குஷியில் ரசிகர்கள்!“வெந்து தணிந்தது காடு“…சுடசுட வெளியான ரிலீஸ் தேதி..குஷியில் ரசிகர்கள்!

    பூக்கடைக்கு விளம்பரம் தேவையா

    பூக்கடைக்கு விளம்பரம் தேவையா

    பூக்கடைக்கு விளம்பரம் தேவையா என்பார்கள், (இதற்கு அர்த்தம் கடைசி பேராவில் தெரியும்), ஆமாம் பூக்கடைக்கும் விளம்பரம் தேவை என்பதை சமீப கால திரைத்துறை விளம்பரங்கள் சொல்லாமல் சொல்கிறது. ஒரு படம் வருவதற்கு முன்னரே ஆரம்பிக்கும் அலப்பரைகளை பார்ப்போம். இவர்கள் யாரை குறி வைக்கிறார்கள் என்றால் சமூக வலைதளங்களில் எந்நேரமும் இருக்கும் நெட்டிசன்களே.

    மாட்டு வண்டி கட்டிகிட்டு

    மாட்டு வண்டி கட்டிகிட்டு

    திரையுலகம் பல காலக்கட்டங்களை பல வளர்ச்சிகளை கடந்து வந்துள்ளது. மாட்டுவண்டிகளில் குழாய் கட்டி, தட்டி கட்டி ஊர் ஊராக, கிராமம் கிராமமாக நோட்டீஸ் கொடுத்து படத்துக்கு விளம்பரம் தேடியது ஒருகாலம். படம் வருவது குறித்து பத்திரிக்கைகளில் வார, தின இதழ்களில் வரும் விளம்பரங்கள், செய்திகள் மூலம் தெரிந்துக்கொள்வார்கள்.

    வார இதழ்கள்தான் ஒரே செய்தி வரவு

    வார இதழ்கள்தான் ஒரே செய்தி வரவு

    திரைப்படம் வெளியாகும்போதும் படபிடிப்பு தளங்களில் நடிகர் நடிகைகளை பேட்டி எடுத்து வார இதழ்களில் செய்தி, புகைப்படம் போடுவதும் அதை வாங்கி ரசிகர்கள் பத்திரமாக வைத்து ரசிப்பதும் ஒருகாலம். முக்கியமான வார இதழ்கள் எழுதும் விமர்சனத்தை பார்த்து படத்துக்கு போன ரசிகர்கள் இருந்த காலம் உண்டு. வானொலியில் ஒலிச்சித்திரம், விளம்பரம் (எல்.ஆர்.நாராயணன் மிகப்பிரபலம்) மூலம் படம் வருவதையும் நடிகர் நடிகைகள் பேட்டிகளையும் ஒலிபரப்புவார்கள்.

    2010 வரை ஒரே நிலையில் சென்ற திரைத்துறை

    2010 வரை ஒரே நிலையில் சென்ற திரைத்துறை

    ஆனாலும் சுவரொட்டிகள், நோட்டீஸ்கள், பத்திரிக்கை விளம்பரங்கள் படம் வெளியாவதை வைத்து படம் வெளியாவது குறித்து அறிந்து கொள்வது 2010 ஆம் ஆண்டுவரைக்கூட இருந்தது. தொலைக்காட்சிகள் வரத்தொடங்கிய 90 களில் அவ்வப்போது நடிகர் நடிகைகள் பேட்டி, விளம்பரம் என லேசாக தலைக்காட்ட தொடங்கியது. அதேபோல் பட விமர்சனங்களை சில தொலைக்காட்சிகள் டாப் டென் என விமர்சிப்பார்கள். அதைக்காணவும் வாரந்தோறும் வாசகர்கள் காத்திருந்த காலம் உண்டு.

    மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்

    மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம்

    இதில் முக்கியமாக குறிப்பிட வேண்டிய விஷயம் எம்ஜிஆர், சிவாஜி தொடங்கி ரஜினி, கமல், அஜித், விஜய் வரை இக்காலக்கட்டத்தில் கொடிகட்டி பறந்தனர். அப்போதும் ரசிகர்கள் இடையே மோதல் தியேட்டரில் கூட்டம் அலைபாய்ந்தது. ஆனால் அன்றைக்கும் இன்றைக்கும் உள்ள வித்தியாசம் மலைக்கும் மடுவுக்கும் உள்ள அளவு உள்ளது.

    பார்வையாளரை குறிவைத்தே அனைத்தும்

    பார்வையாளரை குறிவைத்தே அனைத்தும்

    தற்போதைய காலக்கட்டத்தில் சமூக வலைத்தளங்கள் ட்விட்டர், ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம் என வளர்ச்சி அடைந்துவிட்டது. ஆனால் விளம்பர மோகம், படத்துக்காக போடப்பட்ட முதலீட்டைவிட பல மடங்கு அள்ளிவிடவேண்டும் என்கிற வெறி அனைத்தும் பார்வையாளர்கள் மீதே திணிக்கப்படுகிறது. படம் நன்றாக இருக்கிறதா இல்லையா என தெரியும் முன்னரே பார்வையாளரின் பாக்கெட்டிலிருந்து பணம் படம் எடுப்பவர்கள் கைக்கு போய் விடுகிறது.

    முன்னர் 100 நாள் ஓடினால் வெற்றி வசூல்..இப்ப ஒருவாரம் போதும்

    முன்னர் 100 நாள் ஓடினால் வெற்றி வசூல்..இப்ப ஒருவாரம் போதும்

    முன்னர் ஒருபடம் 100 நாள் ஓடினால் வசூல், தற்போது ஒருவாரம் ஓடினாலே படம் தயாரிப்புச் செலவைவிட பன்மடங்கு லாபம். இதற்கு பின்னால் உள்ள வணிகத்தைப்பற்றி எழுதினால் பல பக்கங்கள் எழுத வேண்டி இருக்கும். சுருக்கமாக சொன்னால் ஒரு படத்தை பார்க்க நிர்ண்யிக்கப்பட்ட கட்டணத்தை மக்களின் ஆசையைத்தூண்டி முதல் ஒருவாரத்திற்குள் பார்த்தால் தான் நீங்கள் ரசிகர் என்பது போன்ற சிந்தனையை உருவாக்கி அவ்வாறு பார்க்க வருபவர்கள் கூடுதல் விலைக்கு டிக்கெட் வாங்க வைக்கும் நிலைக்கு தள்ளுவதே தற்போதைய ட்ரெண்ட்.

    வருமானம் ஒரே வழி...இப்ப பல வழி

    வருமானம் ஒரே வழி...இப்ப பல வழி

    பத்தாண்டுகளுக்கு முன்னர்வரை ஒருபடம் வந்தால் அது தியேட்டரில் ஓடினால் வருமானம், கேசட்டுகள் இருந்தால் அதை மக்கள் வாங்கினால் பாடல் போட்டவருக்கு வருமானம். இதுத்தவிர வேறு வருமானம் இல்லை. டப் செய்யப்பட்டு பக்கத்து மாநிலங்களில் திரையிட்டால் கூடுதல் வருமானம் அவ்வளவே. ஆனால் இன்றைய நிலையை திரைப்படம் எடுப்பவருக்கு வரும் லாபம் சொல்ல முடியாத அளவு உள்ளது.

    அப்பப்பா எத்தனை வழிகளில் வரும்படி

    அப்பப்பா எத்தனை வழிகளில் வரும்படி

    காரணம் விரிவடைந்த மார்க்கெட், ஓவர்சீஸ் மார்க்கெட், விரைவடைந்த வியாபாரம். சமூக வலைதளங்களின் வளர்ச்சி காரணமாக ஒரு படத்தை எடுக்கும்போதே விளம்பரத்தை ஆரம்பித்து விடுகிறார்கள், ஏற்கெனவே சொன்னதுபோல் நெட்டிசன்கள், யூடியூப் பார்வையாளர்கள் தான் இவர்கள் குறி. படம் ஆரம்பித்த கொஞ்ச நாளில் படம் குறித்த புகைப்படங்களை கசிய விடுவது. அதை செய்தியாக்குவது.

    இப்படித்தான் விளம்பரப்படுத்தப்படுகிறது

    இப்படித்தான் விளம்பரப்படுத்தப்படுகிறது

    பின்னர் கிலிம்ப்ஸ் என புகைப்படத்தை வெளியிடுவது. திடீரென படத்தில் நடிக்கும் நடிகை குறித்த பரபரப்பு செய்தியை பரப்புவது. படத்துக்கு தலைப்பே வைக்காமல் காலந்தள்ளுவது. பின்னர் ஒருநாள் தலைப்பு வெளியாகும் என அறிவிப்பது. திடீரென தலைப்பை அறிவிப்பது. படத்தில் நடிக்கும் நடிகர் எங்காவது நிகழ்ச்சியில் கலந்துக்கொள்வது. பின்னர் நாளை போஸ்டர் வெளியாகும் என செய்தி வெளியிடுவது. மறுநாள் போஸ்டர் வெளியிடுவது. இதற்காக ட்விட்டரில் லட்சக்கணக்கான ஃபாலோயர்ஸ் உள்ளவர்களை வைத்து ப்ரமோஷன் செய்வார்கள்.

    FDFS பைத்தியம் தான் இவர்கள் மூலதனம்

    FDFS பைத்தியம் தான் இவர்கள் மூலதனம்

    அவர்களும் சம்பந்தமில்லாததுபோல் காட்டிக்கொண்டு பரமோஷன் செய்வார்கள், நெட்டிசன்கள் இவர்கள் போடும் ட்வீட்டுக்காக காத்துக்கிடப்பார்கள். திடீரென ஷூட்டிங் ஸ்பாட் சீன்கள் ட்விட்டரில் வெளியாகும் அதையொட்டி விவாதம் போகும், அணில், ஆமைன்னு ரசிகர்கள் அடிச்சுக்குவாங்க. FDFS என முதல் நாள் முதல்காட்சி என்று 100 ரூபாய் டிக்கெட் 1500 ரூபாய்க்கு விற்கப்படும். நேரடியாக வாங்கினால் சில நாட்களுக்கு மட்டும் அதிக விலைக்கு விற்பனை இருக்கும்.

    பெரிய அளவில் விரிவடைந்துள்ள வியாபார தளம்

    பெரிய அளவில் விரிவடைந்துள்ள வியாபார தளம்

    இதுபோக ஸ்க்ரீனிங் என ஒரே நேரத்தில் 1000 தியேட்டர் வரை படம் ஓடும். இதனால் படம் சரியில்லை என பார்வையாளர்கள் தெரிந்துக்கொள்வதற்குள் (என்ன சரியில்லன்னு பார்க்கும் ஆட்களும் அதிகம்) போட்ட முதலீட்டை விட கொள்ளை லாபம் பார்த்துவிடுவார்கள். இவை அனைத்தும் இதை படிக்கும் நம் பாக்கெட்டிலிருந்துதான் போகிறது. அபிமானி, இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் இதுதான் ஒரே முதலீட்டுக்கான நம்பிக்கை.

    அடடா பேட்டிகள், அற்புதமான பேட்டிகள்

    அடடா பேட்டிகள், அற்புதமான பேட்டிகள்

    முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிட்டு வரும் (பெரும்பாலும் ரசிகர்கள் தானே) வேற லெவல், சூப்பர்னு சொல்லிட்டு போவாங்க, அழைத்துவரப்படும் விஐபிக்கள் வேறு வழியில்லாமல் சிறந்தப்படம்னு சொல்லிட்டு போவாங்க. விமர்சனம் எழுதுபவர்கள் நல்லபடியாக எழுத வைக்க முயற்சி எடுக்கப்படும். இதற்கு முன்னர் படம் எடுத்த இயக்குநர், நடிகர்கள் ஒன்றாக ஒவ்வொரு சானலாக போய் பேட்டி கொடுப்பார்கள். பேட்டி எடுப்பவர் டென்சிங் ஹிலாரியிடம் பேட்டி எடுக்கும் ரேஞ்சுக்கு எடுப்பார்.

    கொண்டாட்ட மனப்பான்மை அவர்களுக்கு வருமானம்

    கொண்டாட்ட மனப்பான்மை அவர்களுக்கு வருமானம்

    இப்படியாக ப்ரமோஷன் செய்து படத்தை கொண்டுவருவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. என்ன போட்டாலும் அதை கொண்டாடுவதும் லைக். ரீஷேர், ரீ ட்வீட் செய்வதும் தனது மதிப்பையே உணராத நெட்டிசன்கள் மட்டுமே இவர்கள் மூலதனம். விளம்பரத்தையே பலவாராக பிரித்து அதற்கு ரசிகர்களை பழக்கி அவர்களை பார்வையாளரகளாக மாற்றி படம் வெளிவரும்முன்னரே யுடியூப் உள்ளிட்டவைகள் மூலம் காசுபார்க்கும் அளவு திரைத்துறை வளர்ந்துள்ளது.

    பூக்கடை விளம்பரம் மூலமும் காசு பார்க்கும் கலை

    பூக்கடை விளம்பரம் மூலமும் காசு பார்க்கும் கலை

    இப்ப சொல்லுங்க பூக்கடைக்கு விளம்பரம் தேவையா என்றால் அந்த விளம்பரத்தின் மூலமும் பூ விற்பதை விட காற்றில் காசு எடுக்கிறார்கள் என்பதே உண்மை. இதில் புளு சட்டை மாறன் போன்ற பல விமர்சகர்கள் உள்ளனர். இதில் 90% பேர் எந்த படம் வந்தாலும் அதில் உள்ள பாசிட்டிவ் பற்றி மட்டும் பேசுவார்கள். அந்தப்படத்தால் சமூகத்தில் ஏற்படும் நிகழ்வு பற்றி..மூச் அப்புறம் நாளைக்கு கூப்பிட மாட்டார்கள் என்பதால் விமர்சனம் பாசிட்டிவ் பற்றி மட்டுமே பேசும்.

    புளூ சட்டை மாறன் விமர்சனம்

    புளூ சட்டை மாறன் விமர்சனம்

    அடுத்து புளு சட்டை மாறன் போன்ற சிலர். படத்தை விமர்சிப்பார்கள் அதை ரசிகர்கள் கண்டுக்கொள்ளவா போகிறார்கள், நெட்டிசன்களே பெரிய விமர்சகர்கள் ஆயிற்றே. ஆனாலும் ஆரம்ப காலக்கட்டத்தில் புளு சட்டை மாறன் விமர்சனம் பெரிதும் கவனிக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் விமர்சனத்தைத் தாண்டி உருவக்கேலி அளவுக்கு இறங்கியவுடன் திரைத்துறையினர் பகீரங்கமாக மேடையில் திட்ட ஆரம்பித்துவிட்டனர்.

    விமர்சனத்தையும் விமர்சிக்க தெரிந்த நெட்டிசன்கள்

    விமர்சனத்தையும் விமர்சிக்க தெரிந்த நெட்டிசன்கள்

    புளுசட்டை மாறனா எப்பவுமே நெகட்டிவாகவே பேசுவார் என்று சினிமா எடுப்பவர்கள் தம்மை தேற்றிக்கொண்டனர். இன்னும் சிலர் இவர் ஏதாவது திட்டினால் நமக்கு விளம்பரம் தான் விடு, எப்படியோ படத்தை பற்றி பேசுகிறாரே என்று நினைக்கத்தொடங்கிவிட்டனர். விமர்சனம் என்கிற பெயரில் சில நல்ல படங்களைக்கூட தேவையில்லாமல் விமர்சிக்கிறாரே என புளு சட்டைமாறன் விமர்சனத்தை விரும்பி பார்ப்பவர்களே விமர்சனம் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

    Recommended Video

    Suriya Vamsam தான் 90's Kids Motivational படம் | Sarathkumar *Kollywood | Filmibeat Tamil
    எப்படியோ படம் விமர்சிக்கப்பட்டாலும் வசூல் வருதா அது போதும்

    எப்படியோ படம் விமர்சிக்கப்பட்டாலும் வசூல் வருதா அது போதும்

    மொத்தத்தில் விளம்பரமோ, விமர்சனமோ ஒரு படத்தை ஓட வைக்கிறதா என்றால், படம் ஓடுதோ, விமர்சனத்துக்குள்ளாகுதோ, மேலே சொன்னமாதிரி பலவித டெக்னிக்குகளை வைத்து வசூலை பார்த்து விடுகிறார்கள், அப்புறம் என்ன ஆபரேஷன் சக்சஸ் பேஷண்ட் ஃபெயிலியர் கதைதான். இதற்கு சமீபத்தில் வந்து பெரும் விமர்சனத்துக்குள்ளான ஒரு முக்கிய நடிகரின் படத்தை சொல்லலாம். விமர்சனம் அதிகம், வசூல் அதைவிட அதிகம். இவர்களுக்கு தேவை 2 வது மேட்டர்தான். இவை அனைத்தும் முக்கிய படங்களுக்கு நடக்கும், சிறிய படங்கள் அவர்களால் முடிந்த அளவுக்கு முயற்சிப்பார்கள். முடியாத படங்கள் ஓடிடிக்கு வரும்.

    English summary
    There is a trend in Indian cinema that a lot of reviews and advertisements play a vital role in promoting movies..
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X