லிப் லாக்.. படுக்கையறை காட்சி.. சகலமும் இருக்கும் குஷி படத்தில் சமந்தாவை பார்த்து கதறும் பேன்ஸ்!
சென்னை: குஷி படத்தில் வரும் படுக்கை அறை காட்சியில் சமந்தாவை பார்த்துவிட்டு ரசிகர்கள் இணையத்தில் புலம்பி வருகின்றனர்.
நடிகர் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் தியேட்டரில் வெளியானத் திரைப்படம் குஷி.

இப்படத்தில் சரண்யா பொன்வண்ணன், லக்ஷ்மி, ரோஹினி, வெண்ணிலா கிஷோர் என பலர் நடித்துள்ளனர்.
குஷி: மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து, நவீன் யெர்னேனி மற்றும் யலமஞ்சிலி ரவிசங்கர் தயாரித்துள்ள, இப்படத்தை சிவா நிர்வாணா படத்தை இயக்கி உள்ளார்.சமந்தாவும் விஜய் தேவர்கொண்டாகும் காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால், திருமணமான பின் எதற்கு எடுத்தாலும் சண்டை பிரச்சனை வந்து கொண்டே இருக்கிறது. கடைசியில் என்ன ஆனது என்பதுதான் குஷி படத்தின் மொத்த கதை.

ரூ.70 கோடி வசூல்: அழகான காதல் திரைப்படமாக உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தில் சமந்தா விஜய் தேவரகொண்டா கெமிஸ்ட்ரி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. படத்தின் முதல் பாதியில் காதல், ரொமான்ஸ், லிப் லாக், படுக்கை அறை காட்சி என இளம் வயதினருக்கு ஏற்றப்படமாக இருக்கிறது. குஷி படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் உலக அளவில் ரூ.70 கோடியை வசூலித்துள்ளது.
கதறி அழும் பேன்ஸ்: இந்நிலையில், குஷி படத்தில் இருந்து சமந்தா விஜய் தேவரகொண்டாவின் படுக்கை அறை காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது. இதைப்பார்த்து டென்ஷனான சமந்தாவின் தீவிர ரசிகர்கள், வல்லவன் படத்தில் சிம்பு கதறி அழும் வீடியோவை இணைத்து வெளியிட்டு ...டேய் விஜய் தேவரகொண்டா இதெல்லாம் ரொம்ப ஓவருடா என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











