ஆறு மணிக்காக காத்திருக்கும் ரசிகர்கள். ஒன்றல்ல இரண்டு சம்பவங்கள் காத்திருக்கு.

சென்னை : இன்று மாலை 6 மணிக்கு இரண்டு முக்கிய அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். ஒன்று இயக்குனர் நெல்சன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டது மற்றொன்று உதயநிதி ஸ்டாலின் பதிவிட்ட ட்விட்டர் பதிவு.

விஜய் நடிக்கும் பீஸ்ட் படம் ஏப்ரல் 13 ஆம் தேதி ரிலீஸ்க்கு தயாராகியுள்ளது. நெல்சன் படத்தை இயக்கியுள்ளார்.

ரெட் ஜெயிண்ட் மூவிஸ் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்ட்டில் இன்று மாலை ஆறு மணிக்கு அவர்கள் தரப்போகும் தகவலைப் பற்றி சூசகமாக அறிவித்துள்ளனர்.

 Beast or Rajini 169

Beast or Rajini 169

நெல்சன் வெளியிட்ட அறிவிப்பு நிச்சயம் விஜய் நடித்த பீஸ்ட் படத்தைப் பற்றிய அறிவிப்பாக இருக்குமென பெரும்பாலான ரசிகர்களால் நம்பப்படுகிறது. அது நிச்சயம் ட்ரெய்லர் வெளியீட்டை பற்றியதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் சில ரசிகர்கள் அது நெல்சன் அடுத்து இயக்கி ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தை பற்றியதாக கூட இருக்கலாம் என கிசுகிசுக்கப்படுகிறது. அதனால் விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலாக ஆறு மணிக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

 ரெட் ஜெயிண்ட் மூவிஸ்

ரெட் ஜெயிண்ட் மூவிஸ்

உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் இன்று மாலை ஆறு மணிக்கு ஒரு முக்கிய அறிவிப்பு வரும் என பதிவிட அது கமல்ஹாசன் நடித்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தின் Theatrical rigthts பற்றியதாக இருக்கலாம் என கணிக்கப்படுகிறது. இன்னொரு சாரார் அது நிச்சயம் அவர் நடிக்கும் மாமன்னன் படத்தை பற்றிய அறிவிப்பாக இருக்கலாமென யூகித்து வருகின்றனர்.

 பீஸ்ட் ஆடியோ லான்ச் தடை

பீஸ்ட் ஆடியோ லான்ச் தடை

விஜய் நடித்து நெல்சன் இயக்கும் படமான பீஸ்ட் ஆடியோ வெளியீடு மிக பிரம்மாண்டமாக வெளியிட படக்குழு நினைத்ததாக முதலில் சொல்லப்பட்டது. ஆனால் அது திடீரென நிறுத்தப்பட்டது. அதற்கு காரணம் அரசியல் தான் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் நடிகர் விஜய் அரசியல் சாணக்கியன் பிரசாந்த் கிஷோரை சந்தித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக சொல்லப்படுகிறது. இது தெரிந்து உதயநிதி ஸ்டாலின் சன் பிக்சர்ஸ் கலாநிதிமாறன் இடம் பேசி ஆடியோ வெளியீட்டை செய்ய விடாமல் தடுத்தார் என்ற தகவலும் பரவலாக பேசப்படுகிறது.

 பீஸ்ட் படத்திற்கு பிரமோஷன் தேவையில்லை விஜய் போதும்

பீஸ்ட் படத்திற்கு பிரமோஷன் தேவையில்லை விஜய் போதும்

பீஸ்ட் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்காமல் போனது மட்டுமில்லாமல் பீஸ்ட் படத்திற்கான பிரமோஷன் வேலைகளும் மந்தம் ஆகின. படத்தின் பிரமோஷன் வேலைகள் எதுவும் நடக்காதது தெரிந்ததும் விஜய் ரசிகர்கள் மத்தியில் ஒருவித கோபம் மற்றும் சிறிய சலசலப்பு ஏற்பட்டு விஜய் படத்திற்கு ப்ரமோஷன் தேவையில்லை விஜய் முகமே போதுமென சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். பீஸ்ட் படம் பிரமோட் ஆகும் வகையில் அவரது ரசிகர்கள் படத்தைத் தொடர்ந்து ஏதாவது ஒரு டாக் உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X