ஷூட்டிங்கில் ராய் லக்ஷ்மிக்கு காயம் - ஆர் யூ ஓகே பேபிமா..?
மும்பை : நடிகை ராய் லக்ஷ்மி பாலிவுட்டில் படுகவர்ச்சியாக நடித்திருக்கும் 'ஜூலி 2' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
ராய் லக்ஷ்மி மேலும் சில மலையாளப் படங்களிலும் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில், படத்தின் ஷூட்டிங்கின்போது ராய் லக்ஷ்மிக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது.
கையில் ஏற்பட்ட காயத்தை ரத்தத்தோடு படம் பிடித்து ட்விட்டரில் பதிவேற்றி 'லேசான காயம்தான் பதறவேண்டாம்' எனக் குறிப்பிட்டிருக்கிறார் ராய் லக்ஷ்மி.
லக்ஷ்மி ராய்க்கு காயம்
நான் பயந்துட்டேன். திரும்பவும் எனக்குக் காயம். ஆக்ஷன் காட்சிகள் வந்தா நான் ஆர்வமாகிடுறேன். ஆனால், இப்படி ஆகிடுது. கவலைப்படாதீங்க. நான் நல்லா இருக்கேன். என காலில் காயம் ஏற்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவேற்றி இருக்கிறார் ராய் லக்ஷ்மி.
இதுக்கு ஒரு ட்வீட்டா
ஏதோ ரெண்டு பாட்டில் ரத்தம் போனமாதிரி... இதுக்கு ஒரு ட்வீட்டு
குயின்
ஓ மை காட். ப்ளீஸ் குயின். ப்ளீஸ் பீ கேர்ஃபுல். உடம்பை பத்திரமா பாத்துக்கோங்க. ஆபத்தை இந்தப் பிரபஞ்சத்துலேயே ரொம்ப முக்கியமானவங்க நீங்கதான்.
டோன்ட் டேக் ரிஸ்க்
மேம்... ரிஸ்க் எடுக்காதீங்க... நீங்க மட்டும்தான் உங்களோட ரசிகர்களுக்காக ரிஸ்க் எடுக்குறீங்க. ப்ளீஸ்... உங்களை நாங்க திரையில் பார்க்கணும். இனிமே ரிஸ்க் எடுக்காதீங்க.
எக்ஸ்-ரே எடுங்க
சீக்கிரம் குணமாகி வாங்க. சின்ன எலும்பு முறிவு ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கு. எக்ஸ்-ரே எடுத்ததுக்கு அப்புறம் பேண்டேஜ் போடுங்க.
ஐயகோ
என்னது... சைதை தமிழரசி தாக்கப்பட்டாரா? ஐயகோ, எங்கே, எப்போது தாக்கப்பட்டார்? ஒரு கண்ணீரில்லையா... கடையடைப்பு இல்லையா..?
குழந்தையா நீங்க
இந்த நடிகை குழந்தைங்க மாதிரி அட்டென்ஷன் சீக்கிங்குகாக பண்றாங்க.
ஆர் யூ ஓகே பேபி
மை பேபி... உன்னை கவனமா பார்த்துக்கோ. ஐ லவ் யூ சோ மச். நான் நர்ஸ் தான். நான் உன்னை எப்போதும் நல்லா பார்த்துக்கிறேன்.


Click it and Unblock the Notifications











