சிங்கம் மாதிரி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே.. விஜயகாந்த்தின் லேட்டஸ்ட் புகைப்படம்.. ரசிகர்கள் கவலை
சென்னை: Vijayakanth (விஜயகாந்த்) தீபாவளி கொண்டாட்டத்தின்போது வெளியான விஜயகாந்த்தின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கவலையடைந்திருக்கின்றனர்.
ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகிய இரண்டு பேரும் கோலிவுட்டில் பீக்கில் இருந்த சமயத்தில் அவர்களுக்கு பயங்கரமாக டஃப் கொடுத்த ஹீரோக்களில் முதன்மையானவர் விஜயகாந்த். கறுப்பான உருவம், சாமானிய உடல்மொழி, சிறந்த நடிப்பு, ஆக்ஷன் என ரசிகர்களை தன் பக்கம் வெகுவாக கவர்ந்தார். அவரை பார்த்த அனைவருமே நம்ம ஊர்க்காரர்போல் இருக்கிறாரே என்றுதான் பேசிக்கொண்டார்கள்.

கேப்டன் விஜயகாந்த்: ரசிகர்களால் கேப்டன் என்று அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோவாகவே இருந்தவர் அவர். ஈழ மக்களுக்காக நடிகர் சங்கம் சார்பில் முதன்முதலில் விஜயகாந்த்தான் உண்ணாவிரத போராட்டத்தை முன்னின்று நடத்தினார். அதேபோல் நடிகர் சங்க தலைவராக இருந்தும் ஏகப்பட்ட நல்ல காரியங்களை செய்திருக்கிறார்.
பசி ஆற்றிய மனிதர்: அதேபோல் தன்னுடைய அலுவலகத்தில் அனைத்து நாட்களும் இலவசமாக உணவு வழங்கினார். விஜயகாந்த்தின் ஆஃபிஸுக்கு போனால் போதும் கண்டிப்பாக வயிறு நிறைய சாப்பிட்டு வரலாம் என்ற எண்ணம்தான் விஜயகாந்த் பீக்கில் இருந்தபோது பலருக்கும் இருந்தது. அதேபோல் இப்போது வளர்ந்து மிகப்பெரிய ஸ்டாராக இருக்கும் விஜய், சூர்யா உள்ளிட்டோருக்காக எந்தக் கேள்வியும் கேட்காமல் கெஸ்ட் ரோலில் நடித்து அவர்களுக்கு ஒரு அடையாளத்தையும் கொடுத்தவர்.
அரசியல்: விஜயகாந்த் என்றாலே தைரியம் என்று அனைவரும் சொல்வார்கள். தன் எதிரில் எந்த தவறு நடந்தாலும் தைரியமாக தட்டி கேட்டவர். யாருக்கும் பயப்படாத விஜயகாந்த் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு பேருமே அரசியலில் படு ஆக்டிவ்வாக இருந்தபோதே தேமுதிக என்ற கட்சியை தொடங்கி முதல் தேர்தலிலேயே கணிசமான வாக்குகளையும் பெற்று இருவரையுமே புருவம் உயர்த்த செய்தார். ஒருகட்டத்தில் கருணாநிதிகூட பழம் நழுவி பாலில் விழும் நிலையில் இருக்கிறது என்று கூறி விஜயகாந்த்தின் கூட்டணிக்காக காத்திருக்கும் நிலை உருவானது.
உடல்நலக் குறைவு: அரசியலிலும் பெரும் ரவுண்டு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் சில காரணங்களால் அரசியல் தளத்தில் அவரது மவுசு குறைய ஆரம்பித்தது. கூடவே உடல்நலக்குறைவும் ஏற்பட்டது. அமெரிக்கா சென்று சிகிச்சை எடுத்து திரும்பிய அவர் கடந்த சில வருடங்களாகவே ஆக்டிவ் அரசியலிலிருந்து ஒதுங்கி இருக்கிறார். அவரது உடல்நிலையும் முன்னர் போல் இல்லை. எப்படியாவது அவர் மீண்டும் வந்துவிட வேண்டுமென்று பலரும் ஆசைப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.
புதிய புகைப்படம்: விஜயகாந்த் ஆக்டிவ்வாக இல்லாவிட்டாலும் அவரது புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன. அந்தவகையில் நேற்று தீபாவளி பண்டிகையின் போது தன்னுடைய குடும்பத்துடன் விஜயகாந்த் தீபாவளி கொண்டாடும் ஃபோட்டோ வெளியாகியிருக்கிறது. அதில் இரண்டு மகன்களுக்கு நடுவே உடல் ரொம்பவே இளைத்து துரும்பாக கையில் கம்பி மத்தாப்புடன் காட்சியளித்தார். இதனை பார்த்த ரசிகர்கள் சிங்கம் மாதிரி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே என்று கவலையுடன் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











