மீண்டும் பிரச்சனையில் சிக்கும் சிம்பு...STR48 படம் என்னாகும்… கவலையில் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் சிம்பு மீண்டும் ரெட் கார்ட் பிரச்சனையில் சிக்கி உள்ளதால், சிம்பு 48 திரைப்படம் தொடங்கப்படுமா இல்லையா என்ற ஒரு சந்தேகம் எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான பத்து தல திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் கமிட்டாகி உள்ளார்.

கம்பேக் கொடுத்த மாநாடு: அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்திற்கு பிறகு பலவிதமான பிரச்சனைகளை சந்தித்த சிம்புவிற்கு மாநாடு திரைப்படம் ஒரு கம்பேக் கொடுக்கும் திரைப்படமாக இருந்தது. அந்த படத்திற்கு பிறகு கௌதம் மேனனின் வெந்து தணிந்தது காடு, பத்து தல என அடுத்தடுத்த வெற்றிப்படங்களில் நடித்து மாஸ் நடிகர் என்ற பெயரை மீண்டும் தங்க வைத்துள்ளார்.
கொரோனா குமார்: இனி சினிமா தான் எல்லாம், நோ டென்ஷன், நோ கவலை என்றிருந்த சிம்புவிற்கு மீண்டும் பிரச்சனை வந்துள்ளது வெந்து தணிந்தது காடு படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷூடன் சிம்பு கொரோனா குமார் என்ற படத்தில் நடிக்க கமிட்டாகி இருந்தார். ஆனால் சில காரணங்களால் சிம்பு இப்படத்திற்கு கால்ஷீட் கொடுக்காமல் இழுத்தடித்து கொண்டே வந்ததாக கூறப்படுகிறது.
ரெட் கார்ட்: இதுகுறித்து, பேச்சுவார்த்தை நடத்தியும் ஒத்து வராததால் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரிப்பாளர் சங்கத்திடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடுத்து தயாரிப்பாளர் சங்கம் சிம்புவிடம் உரிய விளக்கம் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. சிம்பு அளிக்கும் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்றால் அவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்படும்.
கவலையில் ரசிகர்கள்: ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் சிம்பு 48 இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், சிம்பு மீண்டும் ரெட் கார்ட் பிரச்சனையில் சிக்கி உள்ளதால், சிம்பு 48 திரைப்படம் தொடங்கப்படுமா இல்லையா என்ற ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











