லியோ அப்டேட் கொடுத்த மிஷ்கின்.. பிசாசு 2 அப்டேட் எப்ப சார் கொடுப்பீங்க.. ரசிகர்கள் கேள்வி!
சென்னை : லியோ படத்தில் நடித்துவந்த இயக்குநர் மிஷ்கின் தன்னுடைய போர்ஷனை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளார்.
தன்னுடைய சூட்டிங், இயக்குநர் லோகேஷ், நடிகர் விஜய் உள்ளிட்ட படத்தின் சிறப்பான அம்சங்கள் குறித்து அறிக்கை மூலம் செய்தி வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து பிசாசு 2 படம் குறித்து ரசிகர்கள் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விஜய்யின் லியோ படம்
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாஸ்டர் படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக லியோ படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் டைட்டில் உள்ளிட்டவை இந்த மாதத்தின் முதல் நாளிலேயே வெளியான நிலையில், படத்தின் சூட்டிங் காஷ்மீரில் துவங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வயதான கேங்ஸ்டர்
வயதான கேங்ஸ்டராக விஜய் இந்தப் படத்தில் களமிறங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில், அவருக்கு படத்தில் 6 வில்லன்கள் எனவும் முன்னதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் படத்தில் மிஷ்கினும் ஒரு வில்லன் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை உறுதிப்படுத்தும் வகையில், தன்னுடைய சண்டை போர்ஷனை படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் சிறப்பான முறையில் படமாக்கியுள்ளதாக மிஷ்கின் தெரிவித்துள்ளார்.

சூட்டிங்கை முடித்த மிஷ்கின்
லியோ படத்தில் தன்னுடைய போர்ஷனை முடித்துக்கொண்டு மிஷ்கின் காஷ்மீரிலிருந்து சென்னை திரும்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் படம் குறித்தும் இயக்குநர் லோகேஷ் மற்றும் துணை இயக்குநர்களின் அன்பு குறித்தும் விஜய்யின் பண்பு மற்றும் அன்பு குறித்தும் அவர் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.

பிசாசு 2 குறித்து கேள்வி
படத்தில் தன்னுடைய போர்ஷனை 500 பேர் இணைந்து நடத்தி முடித்துள்ளதாகவும் அவர் அப்டேட் தெரிவித்துள்ளார். படம் கண்டிப்பான வெற்றியைக் கொடுக்கும் என்றும் அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். இதனிடையே லியோ அப்டேட் இருக்கட்டும் பிசாசு 2 படத்தோட அப்டேட் எப்ப சார் சொல்வீங்க என்று இணையதளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். வலைப்பேச்சு ஆனந்தனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்த கேள்வியை கேட்டுள்ளார்.

ரிலீஸ் தள்ளிப் போகும் பிசாசு 2
பிசாசு படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து ஆன்ட்ரியா, பூர்ணா உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்து மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ளது பிசாசு 2. இந்தப் படத்தின் ரிலீஸ் கடந்த ஆண்டிலேயே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்னும் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படாமல் காலம் தாழ்த்தப்பட்டு வருகிறது. இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











