"அது" எங்கே.. நயனுக்கு வாழ்த்துச் சொன்ன விக்கியிடம் கொக்கியைப் போட்ட ரசிகர்கள்!!
சென்னை : இன்று பிறந்தநாள் காணும் நயன்தாராவுக்கு திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்துகளைச் சொல்லி வருகின்றனர். #HBDLadySuperstarNayanthara எனும் ஹேஸ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
இந்நிலையில் நயன்தாராவுக்கு இயக்குநர் விக்னேஷ் சிவனும் ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பதோடு, அவருடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ப்ரொஃபைல் பிக்சராகவும் வைத்துள்ளார்.
விக்னேஷ் சிவன் நயன்தாராவை வாழ்த்தியிருக்கும் ட்வீட்டில் சூர்யா ரசிகர்கள் 'தானா சேர்ந்த கூட்டம்' டீசர் பற்றிய அப்டேட்டை வெளியிடும்படி நச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
என் தங்கமே
விக்னேஷ் சிவன் தன் ட்விட்டர் பதிவில், 'நான் பார்த்து கொண்டிருக்கும் பெண்ணுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். உன் மீது அதிக அன்பும், மரியாதையும் உள்ளது என் தங்கமே..!' என்று புகழ்ந்திருக்கிறார்.
டீசர் எங்க
அது சரி, டீசர் எங்க..? என நையாண்டியாக கேட்டிருக்கிறார் ஒரு ரசிகர்.
ஃபெயிலு ஃபெயிலு
தெலுங்கு டைட்டில் டீசர் எல்லாம் எங்க..? ஃபெயிலு ஃபெயிலு..!
டைரக்டர பார்த்தீங்களா
நவம்பர் மாதம் டீசர்னு சொல்லிட்டு தேதி சொல்லாம போய்ட்டார்.. டைரக்டர பார்த்தா சொல்லுங்க.. வச்சு செய்யணும்.
கம்முனு இரு சார்
தலைவிக்கு நாங்க விஷ் பண்ணனும். கொஞ்சம் கம்முனு இரு சார்..!
சிங்கிள்ஸ் ரியாக்ஷன்
சிங்கிள்ஸ் ரியாக்ஷன் : நாம பாட்டுக்கு கேசுவலா இருப்போம்.


Click it and Unblock the Notifications











