உங்க தங்கச்சி அங்க மானத்த வாங்குறாங்க.. நீங்க ஹாயா வொர்க் அவுட் பண்றீங்க? நடிகரை சீண்டிய ரசிகர்கள்!

Recommended Video

Bigg Boss 3 Tamil Arun Vijay: தங்கையை பற்றி புகார் தெரிவித்த ரசிகர்கள்

சென்னை: நடிகர் அருண் விஜய் தான் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் போட்டோவை போட்டு கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

நடிகர் விஜயகுமாரின் மூத்த மகன் நடிகர் அருண் விஜய். பாண்டவர் பூமி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அண்மையில் இவர் டபுள் ஆக்ஷனில் நடித்து வெளியான தடம் திரைப்படம் பெரிதும் பேசப்பட்டது.

இதைத்தொடர்ந்து தற்போது லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஷ்கரன் தயாரிப்பில், மாபியா' என்ற படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். இந்தப் படத்தை கார்திக் நரேன் இயக்குகிறார்.

ஜிம்மில் வொர்க் அவுட்

ஜிம்மில் வொர்க் அவுட்

அருண் விஜய் தான் நடிக்கும் படங்களின் கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப உடற்கட்டை அவ்வப்போது மாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் போட்டோ ஒன்றை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜெயித்து வெல்

மேலும் "நீ எதற்கும் சளைத்தவன் இல்லை என்று உன் செயலில் இவ்வுலகிற்குக் காட்டு! போராட்டமில்லா வாழ்க்கையில்லை.. எதிர்த்து நில்! ஜெயித்து வெல்! என்ற கருத்தையும் பதிவிட்டுள்ளார்.

மாஸ் வெறித்தனம்

இதனை பார்த்த ரசிகர்கள் சூப்பர், மாஸ், வெறித்தனம், அடேங்கப்பா என பாராட்டியுள்ளனர். முத்திரை பதிக்கும் உங்கள்
தனிதிறமைக்கு தல தம்பிகள் துணை நிற்போம் என்றும் கூறியுள்ளனர்.

சீண்டிய ரசிகர்கள்

ஆனால் சில ரசிகர்கள், உங்கள் சகோதரியாலேயே ஸ்ட்ராங் ஆகியிருப்பிங்க.. ப்பா என்ன ஒரு பொம்பள.. ஏன் குடும்பத்த பிரிஞ்சு இருக்காங்கன்னு இப்போ நிரூபிச்சுட்டாங்க என பிக்பாஸ் சீசன் 3யில் பங்கேற்றுள்ள வனிதாவவை இழுத்து சீண்டியுள்ளனர்.

உங்க தங்கச்சி ராக்ஸ்

ப்ரோ பிக்பாஸ் பாக்குறீங்களா? உங்க தங்கச்சி ராக்ஸ் என கிண்டலடித்திருக்கிறார் இவர்.

எப்படி புரோ சமாளிக்கிறீங்க?

எப்படி புரோ வனிதாவ சமாளிக்கிறீங்க என்று கேட்டுள்ளார் இந்த ரசிகர்.

உங்க அக்கா இருக்காங்களே..

நீங்க செம கேரக்டரா இருக்கீங்க ஆனா உங்க அக்கா இருக்காங்களே.. என தங்கை வனிதாவை அக்கா என நினைத்து டிவிட்டியிருக்கிறார் இந்த ரசிகர்.

சண்டை மூட்டி வனிதா

சண்டை மூட்டி வனிதா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் மூன்றில் பங்கேற்றுள்ள வனிதா நடிகர் அருண் விஜயின் தங்கை ஆவார். வனிதா சண்டைக்காரியாகவும் சண்டை மூட்டியாகவும் பிக்பாஸ் வீட்டில் வலம் வருகிறார். இதனால் அவரை கண்டாலே ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X