Just In
- 1 hr ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 2 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
- 3 hrs ago
விஜய்யைத் தொடர்ந்து பூனையுடன் போஸ் கொடுக்கும் மோகன்லால்... வைரலாகும் பிக்ஸ்!
- 3 hrs ago
சிலம்பாட்டத்தில் இத்தனை வகைகளா.. பிரமிக்க வைத்த பெண்கள்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!
Don't Miss!
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- News
தற்சார்பு பாரதம் தந்த கொரோனா தடுப்பூசி- அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Automobiles
எப்போ தாங்க மாருதி ஸ்விஃப்ட் ஃபேஸ்லிஃப்ட் கார் அறிமுகமாகும்? வெளிவந்த நம்பும்படியான தகவல்...
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நீங்க ஏன் பிக்பாஸ தொகுத்து வழங்குறீங்க.. கமலிடம் காலர் கேட்ட கேள்வி.. ஏதோ இடிக்குதே!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற காலர் கமலிடம் கேட்ட கேள்வியை பார்த்த ரசிகர்கள், இந்த வாரம் காலர் கமலுக்குதானோ என்று கேட்க தொடங்கிவிட்டனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கும் போட்டியார்களிடம் கடந்த சில வாரங்களாக பொது மக்களில் ஒருவர் காலராக கேள்வி கேட்டு வருகிறார்.
அந்த வகையில் ஷிவானி, ஆஜித் ஆகியோரிடம் இதுவரை கேள்வி கேட்டுள்ளனர். இந்நிலையில் இன்றைய எபிசோடில் சோமிடம் பேச விரும்பினார் காலர் ஒருவர். சோமிடம் கேள்வி கேட்பதற்கு முன்பாக, கமலிடம் கேட்டார்.
கடைசியா மொத்தப் பேருக்கும் சுத்திப் போட்டு கிளம்பிய அர்ச்சனா.. விர்ட்சுவல் ஹக் கொடுத்த பிக்பாஸ்!

எதற்கு உங்களுக்கு பிக்பாஸ்?
அதாவது, சினிமாவில் நீங்கள் பார்க்கா புகழ் இல்லை பெறாத அவார்டு இல்லை பண்ணாத ரோல் இல்லை. இவ்ளோ சாதனைகள் செய்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உங்களுக்கு எப்படி ஆர்வம் வந்தது என்று கேட்டார்.

நானாக நான் பார்க்க
அதற்கு பதில் சொன்ன கமல், இங்கு அரசியல் பேசினால் மக்களை சென்றடையும் என்பதற்காக மட்டுமில்லை. என்னை பல மாதிரி பார்த்திருக்கிறீர்கள் என்பதை கேட்கும்போதே புல்லரிக்குது.என்னை நானாக நான் பார்க்கும் ஒரு நிகழ்ச்சி இது. 5 வயதில 50 என்னை பார்க்கிறீர்கள் பாராட்டுகிறீர்கள்.

அதில் இல்லாத மகிழ்ச்சி
அதில் எல்லாம் இல்லாத மகிழ்ச்சி. நீங்கள் நான் வேனில் வரும் போது நீங்கள் கொடுக்கும் வரவேற்பு கொடுக்கிறது. இந்த நிகழ்ச்சியை நான் தொகுத்து வழங்கும் போது என் குடும்பத்துடன் இருந்து உங்களின் நானாக என்னை பார்ப்பதாக உள்ளது.

அரிய வாய்ப்பு
இந்த நிகழ்ச்சிக்கு ஒரு வயதுக்கு என்று இல்லாமல் பாட்டிமார்கள், சகோதரிகள், சின்னப்பிள்ளைகள் என பல தரப்பு ரசிகர்களும் உள்ளனர். சினிமா பார்க்காட்டியும் கூட சிறு பிள்ளைகள் என்னை தெருவில் பார்த்ததும் பிக்பாஸ் என்று கூறுகின்றனர்.. ஆகையால் இந்த நிகழ்ச்சி எனக்கு கிடைத்த அரிய வாய்ப்பு என்றார்.

சோமிடம் கேள்வி
தொடர்ந்து சோமிடம் பேசிய காலர், உங்களின் தனித்துவம் தெரியவில்லை என்றார். அதற்கு பதில் சொன்ன சோம் நான் என்னுடைய 100% சதவீதம் என்னுடைய தனித்துவத்தை காட்டியிருக்கிறேன். நீங்கள் எங்கு பார்க்கவில்லை என்று தெரியவில்லை. நான் பேச வேண்டிய இடத்தில் பேசியிருக்கிறேன். நல்லா விளையாடுகிறேன் என்று கூறி முடித்துக் கொண்டார்.

எங்கேயே இடிக்கிறது
இதனை பார்த்த ரசிகர்கள் இந்த காலர் பகுதி சோம சேகருக்கானதா? அல்லது கமலுக்கானதா? என்று கேட்டு வருகின்றனரர். அரசியல் கட்சி தொடங்கி தீவிரமாக உள்ள கமல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்துக்குள்ளாகி வரும் நிலையில் இன்றைய காலர் பகுதி எங்கேயோ இடிப்பதாக கூறி வருகிறர்கள் ரசிகர்கள்.