ஒத்த டிவிட்டை போட்டு சிக்கிய நடிகை.. 'அதைக்' கேட்டு நச்சரிக்கும் ஃபேன்ஸ்.. என்ன மேட்டருன்னு பாருங்க!
சென்னை: நடிகை ரெபா மோனிக்கா பதிவிட்ட ஒரு டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள் அவரது போன் நம்பரை கேட்டு வருகின்றனர்.
மாடலிங் துறையில் இருந்து சினிமாவுக்கு வந்தவர் நடிகை ரெபா மோனிக்கா. இவர் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்து வருகிறார்.
தமிழில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான ஜருகண்டி படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து பிகில், தனுசு ராசி நேயர்களே ஆகிய படங்களில் நடித்தார்.

அப்ளாஸை அள்ளும் ரெபா
அவரது நடிப்பில் உருவான மழையில் நனைகிறேன் என்ற படம் ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. எஃப்ஐஆர் படத்திலும் நடித்து வருகிறார். ரெபா மோனிக்கா சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது, தனது க்யூட் போட்டோஸை ஷேர் செய்து அப்ளாஸை அள்ளி வருகிறார்.

முடிந்ததும் எழுப்புங்கள்
இந்நிலையில் ரொம்பவே அழகான தன்னுடைய போட்டோவை டிவிட்டரில் பதிவிட்டுள்ள ரெபா மோனிக்கா, செப்டம்பர் முடியும் போது என்னை எழுப்புங்கள் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார். அதனை பார்த்த நெட்டிசன்கள், டிசம்பர் முடியட்டும் மொத்தமாக போய்விடும் என கூறியுள்ளனர்.

போன் நம்பரை கொடுங்க
இன்னும் சில நெட்டிசன்கள் ப்ளீஸ் எப்படி எழுப்ப வேண்டும் என்று சொல்லுங்க என ஜிஐஎஃப் வீடியோவை போட்டு கிண்டலாக கேட்டுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் உங்களின் போன் நம்பரை கொடுங்கள் செப்டம்பர் முடிந்ததும் எழுப்புகிறோம் என கூறி நச்சரித்து வருகின்றனர்.

காந்த கண்ணி
சில நெட்டிசன்கள், நைஸ் லுக்கிங் என்றும், காந்தக் கண்ணி என்றும் பதிவிட்டுள்ளனர். பலர் ரொம்ப அழகா இருக்கீர்கள் என்றும், சூப்பர், க்யூட் என்றும் வாய்க்கு வந்தப்படி வர்ணித்துள்ளனர்.

ரிலீஸ் லிஸ்ட்
நடிகை ரெபா மோனிக்கா சகலகலா வல்லபா என்ற கன்னட படத்திலும் நடித்துள்ளார். அந்த படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகளும் தற்போது நடைபெற்று வருகின்றன. அந்தப் படம் ரெபா மோனிக்காவின் அடுத்த ரிலீஸ் லிஸ்ட் வரிசையில் இடம் பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications











