இரக்கமில்லையா உங்களுக்கு? ஒரே ஒரு ரிப்ளை போடுங்களேன்..பிரபல ஹீரோயினிடம் அப்படி கெஞ்சும் ரசிகர்கள்!

By

மும்பை: தங்களுக்கு ஒரே ஒரு பதில் போடுமாறு பிரபல நடிகையிடம் ரசிகர்கள் கெஞ்சியுள்ளனர்.

Recommended Video

வைரலாகும் ஊர்வசி ரவுத்தேலாவின் தாறுமாறு வீடியோ!

கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கின்றன.

இந்தியாவிலும் இந்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

நிவாரண நிதி

நிவாரண நிதி

இதைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இருந்தும் இந்தத் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதை எதிர்த்து போராடவும் உதவி செய்யவும் பலர் நிவாரண நிதி வழங்கி வருகின்றனர். நடிகர், நடிகைகள், தொழிலதிபர்கள் உதவிகளை வழங்கி வந்த நிலையில், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலா கடந்த சில நாட்களுக்கு முன் ரூ.5 கோடி வழங்கி ஆச்சரியப்படுத்தினார்.

அமலா பால் கேரக்டர்

அமலா பால் கேரக்டர்

மாடலாக இருந்த இவர், சிங் சாப் த கிரேட்' என்ற இந்திப் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர். அடுத்து, ஷனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, காபில் ஹேட் ஸ்டோரி 4, பகல்பந்தி உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது 'திருட்டுப் பயலே 2' படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்துள்ளார். தமிழில் அமலா பால் நடித்த கேரக்டரில் அவர் நடித்திருக்கிறார்.

ஒர்க் அவுட் ஸ்டில்

ஒர்க் அவுட் ஸ்டில்

சுசி கணேசன் இயக்கும் இந்தப் படம் லாக்டவுனுக்குப் பிறகு ரிலீஸ் ஆக இருக்கிறது. தெலுங்கு படம் ஒன்றில் ஒரு பாடலுக்கு ஆட இருக்கிறார். இவர் தனது இன்ஸ்டாகிராமில் அடிக்கடி ஒர்க் அவுட் மற்றும் கிளாமர் ஸ்டில்களை வெளியிட்டு இளசுகளைச் சூடேற்றும் வேலையை செய்து வருகிறார். அதற்காகவே பல ரசிகர்கள், சமூக வலைத்தளங்களில் அவரை பின் தொடர்கின்றனர்.

ஜாலி கமென்ட்

ஜாலி கமென்ட்

கடந்த சில நாட்களுக்கு முன், இவர் பதிவிட்டிருந்த புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தன. இந்நிலையில் இப்போது புதிய ஒர்க் அவுட் போட்டோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அவர் ஒர்க் அவுட் செய்யும் இடத்துக்குப் பின்னால் புகை வருவது போல இருக்கிறது. இதற்கு ரசிகர்கள் பலர் ஜாலியான கமென்ட்களை தெரிவித்துள்ளனர்.

ஒரே ஒரு ரிப்ளை

ஒரே ஒரு ரிப்ளை

பலர் ஊர்வசியின் அழகை வர்ணித்துள்ளனர். சிலர், ப்ளீஸ் ஒரே ஒரு ரிப்ளை என்று கெஞ்சியுள்ளனர். ஒரு ரசிகர், 'நீங்க போட்டோ பதிவிட்டதுமே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கமென்ட் போடுறாங்க. ஆனா ஒரு ரிப்ளை கூட பண்றதில்லையே ஏன்?, இரக்கமே இல்லையா? என்று கேட்டுள்ளார். இன்னொருவர், இதே போல நிறைய ஒர்க் அவுட் போட்டோக்களா போடுங்க என்று கூறியுள்ளார்.

லாக்டவுன்

லாக்டவுன்

ஒருவர் உங்களால மட்டும் எப்படி இப்படியெல்லாம் எக்சர்சைஸ் செய்ய முடியுது என்றும் இன்னொருவர், உங்க வெயிட் என்ன என்றும் கேட்டுள்ளனர். எப்பவும் ஒர்க் அவுட் பண்ணிக்கிட்டே இருந்தா, லாக்டவுன் முடியறதுக்குள்ள 'லேடி ஹல்க்' மாதிரி ஆயிடுவீங்கன்னு நினைக்கிறேன் என்று ஒருவர் கிண்டலாகக் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X