ஓவர் நைட்டில் பிரதீப் ரங்கநாதன் படத்துக்கு என்ன ஆச்சு?.. சொன்ன வாக்கை காப்பாத்தலையே பாஸ்!
சென்னை: கோட் படத்தை தயாரித்து வரும் ஏஜிஎஸ் நிறுவனம் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதனை வைத்து புதிய படம் தயாரித்து வருகின்றனர். அந்தப் படத்தின் டைட்டில் அறிவிப்பு இன்று காலை 9:00 மணிக்கு வெளியாகும் என நேற்று ஏகப்பட்ட போஸ்ட்டுகளை சோசியல் மீடியாவில் வெளியிட்டனர். ஆனால், இன்னமும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லையே என்ன பிரச்சனை என ரசிகர்கள் கேட்டிருக்கின்றனர்.
ஜெயம் ரவியை வைத்து கோமாளி படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படம் அவருக்கு மிகப்பெரிய வெற்றி படமாக மாறிய நிலையில், அடுத்து லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

அர்ச்சனா கல்பாத்தி தயாரிப்பில் வெளியான லவ் டுடே திரைப்படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்திருந்தார். சத்யராஜ், ராதிகா, இவானா, யோகி பாபு, ரவீனா உள்ளிட்ட பலர் அந்தப் படத்தில் நடித்திருந்தனர். 75 கோடி ரூபாய் வரை அந்த படம் வசூல் சாதனை படைத்தது.
பிரதீப் ரங்கநாதன்: பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கிறார் என்றதுமே துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன் படங்களில் நடித்த தனுஷ் சினிமாவுக்கு வரும்போது எந்த அளவுக்கு விமர்சனங்களை சந்தித்தாரோ அந்த அளவுக்கு விமர்சனங்களை பிரதீப் ரங்கநாதனும் சந்தித்தார். ஆனால் லவ் டுடே படத்தை பார்த்த பலரும் பிரதீப் ரங்கநாதனுக்கு ஃபேன் ஆக மாறிவிட்டனர்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில்: லவ் டுடே படத்தை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐசி படத்தில் நடித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். எஸ் ஜே சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் அந்த படம் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஓ மை கடவுளே இயக்குநர்: அசோக் செல்வன், விஜய் சேதுபதி, ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அடுத்ததாக பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளார். அந்த படத்தில் டைட்டில் அறிவிப்பு இன்று காலை 9:00 மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தனர்.
ஃபயர் விட்டதெல்லாம் என்ன ஆச்சு?: நேற்று சோசியல் மீடியாவில் அர்ச்சனா கல்பாத்தி ஃபயரான டைட்டில் வேண்டும் என கேட்டு இருந்தார். ஃபயராத்தானே வேணும் வச்சிடுவோம் என அஸ்வத் மாரிமுத்து பதிவிட்டிருந்தார். பிரதீப் ரங்கநாதன் தனது ட்விட்டர் பக்கத்தில் தீப்பொறி திருமுகம் வைக்கலாமா? என ஜாலியாக பேசி வந்தார். இந்நிலையில், 9 மணியை கடந்த நிலையில், இன்னமும் டைட்டில் ரிலீஸ் ஆகாதது ஏன் என்றும் ஏதாவது ஓவர் நைட்டில் பிரச்சனை ஏற்பட்டு விட்டதா? டைட்டில் போஸ்டர் இன்னுமா ரெடியாகவில்லை? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர்.

ஃபிளேம்ஸ்: FLAMES என்கிற டைட்டில் தான் படத்திற்கு வைக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிடும் எனது பார்க்கப்படுகிறது. ரசிகர்கள் தொடர்ந்து அர்ச்சனா கல்பாத்தி, பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து என்று பலரது ட்வீட்டுக்கு கீழ் கமெண்ட் போட்டு டைட்டில் என்ன ஆச்சு, இரவு 9 மணிக்கு வருமா? என பங்கம் பண்ணி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











