Shivani Narayanan: ஷிவானி புருவத்துக்கு என்ன ஆச்சு? புது லுக்கை பார்த்து ஃபீல் செய்யும் ரசிகாஸ்!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மனதில் சட்டென ஒட்டிக் கொண்ட நடிகை ஷிவானி நாராயணன் சினிமாவில் என்ட்ரி கொடுத்து வரிசையாக பல படங்களில் நடித்து வருகிறார்.
முதல் படமே உலக நாயகன் கமல்ஹாசன் நடித்த விக்ரம் என்பது அவருக்கு கிடைத்த மிகப்பெரிய பாக்கியம் என அவரே பேட்டி ஒன்றில் பேசி உள்ளார்.

விஜய்சேதுபதியின் மனைவியாக விக்ரம் படத்தில் நடித்த ஷிவானி நாராயணன் டிஎஸ்பி படத்தில் விஜய்சேதுபதியின் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸாக நடித்து அசத்தினார். இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் என்ன லுக் புதுசா இருக்கே என கேள்விகளை எழுப்பி உள்ளனர்.
பிக் பாஸ் மூலம் கிடைத்த பிரபலம்: சீரியல்களில் நடித்து வந்த ஷிவானி நாராயணன் அப்பவே இன்ஸ்டாகிராமில் ஹாட் போட்டோக்களை தினமும் 5 மணிக்கு போட்டு ரசிகர்களை கவர்ந்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு செல்லும் போதே சீசன் 4ல் அவருக்கு 2 மில்லியன் ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் இருந்தனர். அந்த சீசனில் டைட்டிலை வென்ற ஆரி அர்ஜுனன் உள்ளிட்ட பலரும் ஷிவானி நாராயணனின் சோஷியல் மீடியா செல்வாக்கை கண்டு அஞ்சினர். பாலாஜி முருகதாஸ் உடன் நெருங்கி பழகி வந்த ஷிவானி நாராயணன் அழகை ரசிக்கவே பலர் அந்த சீசனை பார்த்தனர்.
சில்வர் ஸ்க்ரீனில் கலக்கும் ஷிவானி: கமல்ஹாசனின் செல்ல போட்டியாளராக மாறிய ஷிவானிக்கு விக்ரம் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து ஆர்ஜே பாலாஜியின் வீட்ல விசேஷம் படத்திலும் சின்ன ரோலில் நடித்துச் சென்றார்.
விஜய்சேதுபதியின் டிஎஸ்பி, வடிவேலு கம்பேக் கொடுத்த நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என அடுத்தடுத்து 4 படங்களில் நடித்து சில்வர் ஸ்க்ரீனில் கலக்கிய ஷிவானி ஹீரோயினாக பம்பர் படத்தில் நடித்துள்ளார்.
ஷிவானியின் நியூ லுக்: இந்நிலையில், தனது அடுத்த படத்திற்காக ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ரொம்பவே உடல் எடையை குறைத்து முகத்திலும் ஒரு சில மாற்றங்களை நடிகை ஷிவானி செய்துள்ள நிலையில், தனது லேட்டஸ்ட் போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் குடும்பத்துக்காக தற்போது ஷேர் செய்துள்ளார்.
அந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் இது எந்த படத்துக்கான லுக் ஷிவானி என்றும் ஓவரா மெலிஞ்சிட்ட ஷிவு என்றும் நலம் விசாரித்து வருகின்றனர்.

புருவத்துக்கு என்ன ஆச்சு?: நடிகை ஷிவானியின் புருவங்கள் அவருக்கு நேச்சுரல் அழகை கொடுத்து வந்த நிலையில், தற்போது அந்த புருவத்தை டோட்டலாக மாற்றி உள்ளதை கண்ட ரசிகர்கள், ஷிவானி உங்க புருவத்துக்கு என்ன ஆச்சு? முதலில் இருந்தது ரொம்ப நல்லா இருந்துச்சே.. இது ஆர்ட்டிஃபிஷியலா இருக்கு என கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
மேலும், நடிகை ஷிவானி அந்த போட்டோக்களை பதிவிட்டு Moods என கேப்ஷன் கொடுத்த நிலையில், ஆபாச கமெண்ட்டுகளும் அத்துமீறிய வார்த்தைகளும் நடிகை ஷிவானியின் கமெண்ட் பாக்ஸில் அதிகமாக விழுந்து வருகின்றன.

நடிகர் வெற்றியுடன் ஷிவானி இணைந்து நடித்துள்ள பம்பர் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக ஷிவானி எந்த படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறித்த ஹாட் அப்டேட்களையும் ஷிவானி விரைவில் வெளியிடுவார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











