நயன்தாரா படமெல்லாம் வேணாம்.. பொன்னியின் செல்வன் என்னாச்சு.. மணிரத்னம் மனைவியை நச்சரித்த ரசிகர்கள்!

சென்னை: நடிகை நயன்தாராவின் புதிய பட போஸ்டரை இயக்குநர் மணிரத்னமின் மனைவியும் நடிகையுமான சுஹாசினி மணிரத்னம் வெளியிட்டார்.

ஆனால், அந்த படத்தை கொஞ்சமும் ரசிகர்கள் கண்டு கொள்ளாமல் பொன்னியின் செல்வன் அப்டேட் எங்கே என கேள்வி எழுப்பி நச்சரித்து உள்ளனர்.

செப்டம்பர் 30ம் தேதி பொன்னியின் செல்வன் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், அதன் பிறகு எந்தவொரு அப்டேட்டும் வராதது ரசிகர்களை பயங்கர அப்செட்டில் ஆழ்த்தி உள்ளது.

நயன்தாராவின் புல்லட்

நயன்தாராவின் புல்லட்

கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான ஆறடுகல புல்லட் (ஆறடி புல்லட்) திரைப்படம் தமிழில் புல்லட் எனும் பெயரில் டப் செய்யப்பட்டு விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. டோலிவுட் நடிகர் கோபி சந்துக்கு ஜோடியாக இந்த படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். மேலும், பிரகாஷ் ராஜ், கொரட்டலா சீனிவாஸ், பிரம்மானந்தம், சுரேகா வாணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சுஹாசினி மணிரத்னம் வெளியீடு

சுஹாசினி மணிரத்னம் வெளியீடு

புல்லட் படத்தின் போஸ்டரை நடிகையும் இயக்குநர் மணிரத்னமின் மனைவியுமான சுஹாசினி மணிரத்னம் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். அவரது ட்விட்டர் பக்கத்தில், 7த் சேனல் நாராயணனின் புல்லட் படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இது. இதில், நயன்தாரா நடித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால், ரசிகர்கள் அந்த போஸ்டரையும் இந்த தெலுங்கு டப்பிங் படத்தையும் கொஞ்சம் கூட கண்டுக்கவில்லை.

பொன்னியின் செல்வன் என்னாச்சு

பொன்னியின் செல்வன் என்னாச்சு

அவரது ட்வீட்டுக்கு கீழ் பொன்னியின் செல்வன் படம் என்னாச்சு? எந்தவொரு அப்டேட்டும் ஏன் இன்னும் வெளியிடவில்லை. படம் திட்டமிட்டபடி செப்டம்பர் 30 வெளியாகுமா? இல்லையா? எதையாவது சொல்லுங்க என ரசிகர்கள் நச்சரித்து வருகின்றனர். ஆனால், ரசிகரின் எந்தவொரு கேள்விக்கும் நடிகை சுஹாசினி மணிரத்னம் பதிலளிக்கவில்லை.

ரிலீஸ் தள்ளிப் போகும்

ரிலீஸ் தள்ளிப் போகும்

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, பார்த்திபன் என நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் பொன்னியின் செல்வன் படத்தின் சில காட்சிகள் சரியில்லை என ஏ.ஆர். ரஹ்மான் சுட்டிக் காட்டியதாகவும், அந்த காட்சிகள் மீண்டும் எடுக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அதற்கு ஏற்றார்போல பொன்னியின் செல்வன் புரமோஷன் வேலைகளை மணிரத்னம் இன்னும் ஆரம்பிக்காத நிலையில், நிச்சயம் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என தெரிகிறது.

அகிலன் வருது

அகிலன் வருது

செப்டம்பர் 16ம் தேதி ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி உள்ள அகிலன் திரைப்படம் வெளியாக உள்ளது. ஆகஸ்ட் மாத இறுதியில் கார்த்தியின் விருமன், தீபாவளிக்கு சர்தார் என பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த நடிகர்களின் பல படங்கள் இந்த ஆண்டு ரிலீஸ் தேதியை அறிவித்து இருக்கின்றன. ஆனால், பொன்னியின் செல்வன் இந்த ஆண்டு வெளியாகுமா? என்பதே சந்தேகம் தான் என்றும் அடுத்த ஆண்டு ரிலீஸ் தள்ளிப் போகும் என்றும் கூறுகின்றனர். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா எப்போது வெளியிடும் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X