ஆமா.. வயசாயிட்டே போகுதே..எப்பதான் கல்யாணம் பண்ணுவீங்க? பிரபல நடிகை தங்கையிடம் கேட்கும் ஃபேன்ஸ்!
சென்னை: எப்போது திருமணம் செய்துகொள்ள இருக்கிறீர்கள் என்று பிரபல நடிகையிடம் ரசிகர்கள் கேட்டுள்ளனர்.
ஜீவா இயக்கத்தில், வினய் ஹீரோவாக நடித்திருந்த 'உன்னாலே உன்னாலே' படத்தில் ஹீரோயினாக நடித்தவர் தனிஷா.
இந்தி நடிகை கஜோலின் தங்கையான இவர், இந்தியில், ஸ்ஸ்ஸ், சர்கார் உட்பட சில படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார்.

அன்னா ஹசாரே
'உன்னாலே உன்னாலே' படத்துக்குப் பிறகு தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மீண்டும் இந்திக்குப் போனார். சில படங்களில் நடித்தார். தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்தார். பெரிய வாய்ப்புகள் வரவில்லை. பிறகு இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் அவர் பிரபலமானாலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் வரவில்லை. கடைசியாக, அன்னா ஹசாரேவின் வாழ்க்கை கதையான 'அன்னா'வில் நடித்திருந்தார்

மழையை ரசிக்கும்
இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதற்காகவே ஸ்பெஷல் போட்டோ ஷூட் நடத்துவது வழக்கம். இந்நிலையில் மும்பையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. மழையை ரசித்துக் கொண்டிருப்பது போல போட்டோ ஒன்றை இப்போது பதிவிட்டுள்ளார், 42 வயதான தனிஷா.

சரியான நாள்
அதற்கு கேப்ஷனாக, காபியோ டீயோ அல்லது ஒயினோ குடிப்பதற்கும் விழுகிற மழையை ரசிப்பதற்கும் இது சரியான நாள்' என்று கூறியுள்ளார். இதற்கு ஏராளமானவர்கள் தங்கள் கமெண்ட்களை பதிவிட்டுள்ளனர். ஒருவர், இந்த மழை நேரத்தில் சாய் சிறப்பானது என்று கூறியுள்ளார். அருமையான கிளிக் என்று கூறியுள்ள சிலர், செம லுக் என்று தெரிவித்துள்ளனர்.

ஒழுங்கா போடுங்க
இது பழைய போட்டோ மாதிரி தெரியுதே.. புது ஸ்டில் போடுங்க என்று ஒருவர் தெரிவித்துள்ளார். சிலர் டிரெஸ்சை ஒழுங்கா போடுங்க என்று விளாசியுள்ளனர். இன்னும் சிலர், ஆமா, வயசாயிட்டே போகுதே. எப்ப கல்யாணம் பண்ணிக்கிறாப்ல திட்டம்? என்று கேட்டுள்ளனர்.
இயற்கை அழகு, நீங்க இயற்கையாகவே அழகு என்று சிலர் கூறியுள்ளனர்.
Recommended Video

அப்படியே இருக்கீங்களே
உங்கள் அழகு என் ஆன்மாவையும் இதயத்தையும் டச் பண்ணிவிட்டது, மழைக்கு நன்றி என்று ஒருவர் கூறியுள்ளார். ஒரு ரசிகை, இந்த மழைக்கு சாய்-யும் பகோடாவும் சிறப்பு என்று தெரிவித்துள்ளார். இன்னும் சிலர் அவரை ஹாட், செம, சூப்பர், அப்படியே இருக்கீங்களே, உங்க அழகுக்கு முன்னே எதுவுமே இல்லை என்று வர்ணித்துள்ளனர். இந்த போட்டோ வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











