twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தா ஆரம்பிச்சிட்டாங்கள்ல... சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி பெயரில் ரசிகர் மன்றம்

    By
    |

    சென்னை: சினிமாவில் நடித்துவரும் சரவணா ஸ்டோர்ஸ் அதிபர் சரவணன் அருள் பெயரில் உருவாகியுள்ள ரசிகர் மன்றம் போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லெஜண்ட் சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள், கதாநாயகனாக நடித்து வருகிறார். இவர் ஹீரோவாக நடிக்கும் படத்தின் தொடக்க விழா சமீபத்தில் சென்னையில் நடந்தது. சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரப் படங்களில் சரவணன் அருளை ஆட வைத்த, இயக்குநர்கள் ஜேடி - ஜெர்ரி இணைந்து இந்தப் படத்தை இயக்குகின்றனர். இவர்கள் உல்லாசம், விசில் படங்களை ஏற்கனவே இயக்கியவர்கள்.

    Fans association started for sarava Stores saravanan arul

    வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். சரவணன் ஜோடியாக, கீத்திகா திவாரி எனும் மாடல் அறிமுகமாகிறார். இதன் ஷூட்டிங் சென்னையில் தொடங்கி நடந்துவருகிறது. அதற்குள் சரவணன் அருள் பெயரில் ரசிகர் மன்ற போஸ்டர்கள் சென்னையில் சில இடங்களில் ஒட்டப்பட்டுள்ளன.

    அதில், உழைப்பின் கதாநாயகன் அருள் சரவணன் மாநில தலைமை ரசிகர் மன்றம் என்றும், தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் பெயர்களும் உறுப்பினர் சேர்க்கைக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய நம்பரையும் குறிப்பிட்டுள்ளனர். இந்த போஸ்டர், சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகிறது.

    அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ள எண்ணில் தொடர்பு கொண்டபோது தமிழ்வேந்தன் என்பவர் பேசினார்.

    அவர் கூறும்போது, நான் வழக்கறிஞர். அண்ணாச்சி, உழைப்பால் உயர்ந்தவர். யார், யாரோ சினிமா, அரசியலில் வரும்போது, இவர் சிறப்பாக வரவேண்டும் என்று இந்த ரசிகர் மன்றத்தைத் தொடங்கியிருக்கிறோம். இதில் சாதி, மதம் கடந்து இணைந்திருக்கிறோம். எங்கள் அலுவலகம் சைதாபேட்டையில் இருக்கிறது. அண்ணாச்சியால் 15 ஆயிரம் குடும்பங்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறது. அந்த அன்பின் அடிப்படையில் மன்றத்தைத் தொடங்கியிருக்கிறோம். இதுவரை தமிழகம் முழுவதும் இருந்து மூவாயிரம் பேர் சேர்ந்திருக்கிறார்கள். வரும் ஞாயிற்றுக்கிழமை ரசிகர் மன்றம் சார்பில் நிலவேம்பு கஷாயம் கொடுக்க இருக்கிறார் என்றார்.

    English summary
    Fans association has been சstarted for saravanan arul in chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X