நடிகர் விஜய் பர்த் டே.. ட்விட்டரை தெறிக்கவிடும் ரசிகர்கள்..டிரெண்டாகும் ஸ்பெஷல் ஹேஷ்டேக்குகள்!

By

சென்னை: நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு, ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஹேஷ்டேக்குகளை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.

Recommended Video

#HBDThalapathyVijay | விஜய் பிறந்த நாளை தெறிக்கவிடும் ரசிகர்கள்..டிரெண்டாகும் ஸ்பெஷல் போஸ்டர்கள்

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான விஜய்க்கு இன்று 46வது பிறந்த நாள். அவரது பிறந்த தினத்தை ரசிகர்கள் ஒவ்வொரு வருடமும் பிரமாண்டமாக கொண்டாடுவது வழக்கம்.

ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள், ரத்ததானம் என்று மிரட்டுவார்கள். இந்த வருடமும் அப்படி கொண்டாட அவரது ரசிகர் மன்றத்தினர் முடிவு செய்திருந்தனர்.

நலத்திட்ட உதவிகள்

நலத்திட்ட உதவிகள்

பேனர்கள் வைத்தல், தோரணங்கள் கட்டுதல், போஸ்டர்கள் ஒட்டுதல் போன்ற பணிகளில் ஈடுபட முடிவு செய்திருந்தனர். நலத்திட்ட உதவிகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்திருந்தனர்.. இது பற்றி நடிகர் விஜய்க்கு தகவல் வந்தது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன், தனது பிறந்த நாளை, பிரமாண்டமாகக் கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களுக்கு உத்தரவிட்டிருந்தார்.

அறிவுறுத்தினார்

அறிவுறுத்தினார்

கொரோனா தொற்று வேகமாகப் பரவி வரும் இந்த நேரத்தில், நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஒன்று கூடி, பிறந்த நாளை கொண்டாடினால், கொரோனா தொற்று அவர்களுக்குப் பரவ வாய்ப்பிருக்கிறது என்ற அச்சம் ஏற்பட்டதன் காரணமாக, ரசிகர்களுக்கு அவர் அப்படி வேண்டுகோள் விடுத்திருந்தார். அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்சி ஆனந்திடம், பிறந்த நாள் நிகழ்ச்சிகளை ரத்து செய்யும்படி அறிவுறுத்தி இருந்தார்.

கொண்டாட வேண்டாம்

கொண்டாட வேண்டாம்

இதையடுத்து அனைத்து மாவட்ட விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்களுக்கும் பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று தொலைபேசி மூலமாக தகவல் அனுப்பப்பட்டது. இருந்தும் மதுரை ரசிகர்கள் பிரமாண்ட போஸ்டர்கள் ஒட்டி அமர்க்களப்படுத்தினர். அதே போல பல்வேறு பகுதிகளில் விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி அவர் பிறந்த தினத்தை கொண்டாடி வருகின்றனர்.

#HBDTHALAPATHYVijay

#HBDTHALAPATHYVijay

இந்நிலையில், சமூக வலைத்தளங்களிலும் ரசிகர்கள் பிரமாண்டமாக கொண்டாடி வருகின்றனர். இதற்காக #HBDTHALAPATHYVijay, #WaitingForMaster ஆகிய ஹேஷ்டேக்குகளை உருவாக்கி, நேற்றே டிரெண்டாக்கினர். இந்த ஹேஷ்டேக்கில், ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அவரது புகைப்படங்களையும் பதிவிட்டு வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ்

இன்று #ThalaFansDay என்ற புதிய ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கியுள்ளனர். நடிகர் பிரேம்ஜி உட்பட பலர் நடிகர் விஜய் பிறந்த நாளுக்கு ஸ்பெஷல் போஸ்டரை உருவாக்கி ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ், விஜய்க்கு சிறப்பு பிறந்த போஸ்டரை உருவாக்கி, ட்விட்டரில் நேற்று வெளியிட்டிருந்தார். விஜய் ரசிகர்கள் மாஸ்டர் பட டிரைலரை ஆர்வமாக எதிர்பார்க்கிறோம் என்று கூறி வருகின்றனர்.

மாளவிகா மோகனன்

மாளவிகா மோகனன்

நடிகைகள் குஷ்பு, காஜல் அகர்வால், யாஷிகா ஆனந்த் உட்பட பலர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும் பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். விஜய், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X