வருங்கால முதல்வரே..வருங்கால ஜனாதிபதியே.. திருச்சியில் மாஸ் காட்டிய அஜித்.. கோஷம்போட்ட ரசிகர்கள்!

சென்னை: நடிகர் அஜித் துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்காக திருச்சி சென்ற தகவல் காட்டுத்தீயாய் பரவிய நிலையில், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அவரை காண அங்கே குவிந்தனர்.

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறினர். நடிகர் அஜித்தை பார்க்காமல் செல்ல மாட்டோம் என ரசிகர்கள் அடம்பிடித்த நிலையில், வேறு வழியில்லாமல் தனது ரசிகர்களை பார்த்து கையசைத்தும், ஃபிளையிங் கிஸ் கொடுத்தும் உற்சாகப்படுத்தினார் அஜித்.

சில ரசிகர்கள் நடிகர் அஜித்தை பார்த்து போட்ட அரசியல் கோஷங்கள் தான் தற்போது பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

திருச்சியில் அஜித்

திருச்சியில் அஜித்

நடிகர் அஜித் மாநில அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டிக்காக திருச்சிக்கு சென்ற தகவல் கசிந்த நிலையில், ஏகப்பட்ட ரசிகர்கள் அந்த மையத்தை சூழ்ந்து கொண்டனர். சாதாரண பைக் ரேஸர்களுக்கே கூட்டம் கூடி வரும் நிலையில், அஜித் வந்திருப்பதை அறிந்ததும் ஒட்டுமொத்த ஊர் மக்களும் திரண்டு சென்று அஜித்தை காண காத்திருந்தனர்.

திணறிய போலீஸார்

திணறிய போலீஸார்

கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸார் திணறிய நிலையில், கூட்டத்தை கலைக்க பல முயற்சிகளை செய்தும் யாரும் அஜித்தை பார்க்காமல் அங்கிருந்து நகர்ந்து செல்வதாக தெரியவில்லை. இதன் காரணமாக போலீஸார் நடிகர் அஜித்திடம் கோரிக்கை வைத்த நிலையில், அவர் ரசிகர்களை வந்து சந்தித்தார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

வருங்கால முதல்வர்

வருங்கால முதல்வர்

நடிகர் அஜித்தை பார்க்க வந்திருந்த சில தீவிர ரசிகர்கள், வருங்கால முதல்வரே என்றும் வருங்கால பிரதமரே, வருங்கால ஜனாதிபதியே என கோஷமிட்டது அங்கே பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. தனது படங்களில் கூட அரசியல் வாடை வரக் கூடாது என பார்த்து பார்த்து நடித்து வரும் நடிகர் அஜித்தை ரசிகர்கள் இப்படி அழைத்தது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

ரியலான சிட்டிசன் காட்சி

ரியலான சிட்டிசன் காட்சி

சிட்டிசன் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் நடிகர் அஜித் வெளியே வந்து மக்களை பார்த்து கையசைப்பார். அதே போன்றதொரு சம்பவம் இன்று ரியலாக நடந்துள்ளது என சோஷியல் மீடியாவில் அஜித் ரசிகர்கள் டிரெண்டிங்கை தெறிக்க விட்டு வருகின்றனர்.

குழந்தையுடன்

குழந்தையுடன்

கூட்டத்தில் ஒரு பெண் கைக்குழந்தையுடன் நடிகர் அஜித்தை பார்க்காமல் நகர மாட்டேன் எனக் கூறிய நிலையில், இரவு நேரத்திலும், மீண்டும் ஒரு முறை ரசிகர்களை சந்தித்து சென்றிருக்கிறார் நடிகர் அஜித். தற்போது அந்த வீடியோக்களும், புகைப்படங்களும் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X