ச்சே, 6 மணி ஆக மாட்டேங்குதே: விஜய் 62 தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக்கிற்காக ரசிகர்கள் மரண வெயிட்டிங்

By Siva

Recommended Video

பிறந்தநாளன்று விஜய் 62 படத்தின் பெயர் அறிவிப்பு- வீடியோ

சென்னை: விஜய் 62 படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியாக உள்ளது.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் நடித்து வரும் படம் விஜய் 62. முன்பெல்லாம் இயக்குனர் சிவா தான் படத் தலைப்பை சொல்லாமல் இழுத்தடிப்பார். தற்போது சிவா பாணியை முருகதாஸும் பின்பற்றுகிறார்.

முருகதாஸ், விஜய் படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்று யோசித்து யோசித்து ரசிகர்கள் குழம்பிவிட்டனர்.

ஃபர்ஸ்ட் லுக்

ஃபர்ஸ்ட் லுக்

விஜய் 62 படத்தின் தலைப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக்கை இன்று மாலை 6 மணிக்கு சன் டிவியில் வெளியிட்டார்கள். படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதால் சன் டிவியில் வெளியிட்டார்கள்.

எதிர்பார்ப்பு

தலைப்பு என்ன வைத்திருக்கிறார்களோ, ஃபர்ஸ்ட் லுக் எப்படி மாஸாக இருக்குமோ என்பதை தெரிந்து கொள்ள விஜய்யின் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். ச்சே நேரமே போக மாட்டேங்குதே, சீக்கிரம் 6 மணி வந்தால் நன்றாக இருக்குமே என்று தளபதி ரசிகர்கள் உள்ளனர்.

தெறிக்கிறது

ஃபர்ஸ்ட் லுக்கை எதிர்பார்த்து விஜய் ரசிகர்கள் ட்வீட்டி ட்விட்டரை தெறிக்க விடுகிறார்கள். #Thalapathy62FLToday என்ற ஹேஷ்டேக்குடன் ட்வீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆன்லைன்

மாலை 6 மணிக்கு தான் விஜய் படத்தின் தலைப்பு வெளியாகும் என்று தெரிந்தும் மகிழ்ச்சியை, ஆவலை அடக்க முடியாமல் ரசிகர்கள் விடிந்தும் விடியாமலும் ஆன்லைன் வந்துவிட்டனர். மரண வெயிட்டிங்

தளபதி

தளபதி

விஜய் 62 படம் தீபாவளிக்கு ரிலீஸாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டனர். இந்த தீபாவளி தளபதி தீபாவளி என்பதால் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X