twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தியேட்டர்களில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதி...கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

    |

    சென்னை : வரும் பிப்ரவரி 16 ம் தேதி முதல் தமிழகத்தில் தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்கலாம் என தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் அஜித், சூர்யா ரசிகர்கள் செம கொண்டாட்டத்தில் இருக்கிறார்கள்.

    கொரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த ஆண்டு மே மாதம் முதல் தியேட்டர்கள் மூடப்பட்டன. பிறகு கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவித்த தமிழக அரசு தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது. ஆனால் 50 சதவீதம் பார்வையாளர்களை மட்டும் அனுமதிக்க உத்தரவிட்டது. இதனால் வேறு வழியின்று பல படங்கள் 50 சதவீதம் பார்வையாளர்களுடனேயே ரிலீஸ் செய்யப்பட்டன.

    அட டைரக்டர் நெல்சனுக்கு திருமணமாகி இவ்வளவு பெரிய குழந்தை இருக்கா? மனைவியும் மகனும் செம அழகு!அட டைரக்டர் நெல்சனுக்கு திருமணமாகி இவ்வளவு பெரிய குழந்தை இருக்கா? மனைவியும் மகனும் செம அழகு!

    பயமுறுத்திய கொரோனா

    பயமுறுத்திய கொரோனா

    விரைவில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2022 ம் ஆண்டின் துவக்கத்திலேயே கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரிக்க துவங்கியது. இதனால் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குகளை தமிழக அரசு அமல்படுத்தியது. மீண்டும் தியேட்டர்கள் மூடப்படுமோ, முழு லாக்டவுன் கொண்டு வரப்படுமோ என அனைவரும் கலக்கம் அடைந்தனர்.

    தள்ளிப்போன பட ரிலீஸ்

    தள்ளிப்போன பட ரிலீஸ்

    இரவு நேர ஊரடங்கு, கொரோனா அச்சம் காரணமாக மக்கள் தியேட்டர்களுக்கு வர தயங்குவார்கள் என்பதால் அஜித்தின் வலிமை, ஆர்ஆர்ஆர், ராதே ஷ்யாம் போன்ற பெரிய பட்ஜெட் படங்களின் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. ஆனால் ஜனவரி மாத இறுதியில் கொரோனா பரவல் குறைய துவங்கியதால் இரவு நேரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கை தமிழக அரசு ரத்து செய்தது. இதனால் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களை குறிவைத்து படங்களின் ரிலீஸ் தேதிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

    100% பார்வையாளர்களுக்கு அனுமதி

    100% பார்வையாளர்களுக்கு அனுமதி

    இவற்றில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் அஜித்தின் வலிமை படம் பிப்ரவரி 24 ம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்குள் தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடைக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். இதே போல் இரண்டு ஆண்டுகள் கழித்து தியேட்டரில் ரிலீசாகும் சூர்யா படம் என்பதால் மார்ச் 10 ம் தேதி ரிலீசாக உள்ள சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படமும் 100 சதவீதம் பார்வையாளர்களுடன் ரிலீஸ் செய்யப்பட வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

    கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

    கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

    ரசிகர்கள் ஆசைப்பட்டபடியே பிப்ரவரி 16 ம் தேதி முதல் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் அஜித், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய்,போன்ற டாப் ஹீரோக்களின் படங்களும், ஆர்ஆர்ஆர் போன்ற மெகா பட்ஜெட் படங்களும் 100 சதவீதம் பார்வையாளர்களுடன் ரிலீசாக உள்ளன. மாஸ்டர் படம் 50 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே 100 கோடி வசூலை கடந்தது. இந்நிலையில் ஏப்ரல் மாதம் பீஸ்ட் படம் 100 சதவீதம் பார்வையாளர்களுடன் ரிலீசாக உள்ளதால் ரசிகர்கள் செம கொண்டாட்டதத்தில் உள்ளனர்.

    வேற லெவல் கொண்டாட்டம்

    வேற லெவல் கொண்டாட்டம்

    100 சதவீதம் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு முதல் ஆளாக அஜித்தின் வலிமை படம் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தமிழக தியேட்டர்களில் 100 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதால் இதை வேற லெவலில் கொண்டாட ரசிகர்கள் திட்டமிட்டுள்ளனர்.

      English summary
      TN govt allowed 100 percent occupancy in TN theatres fron Feb 16th. Fans celebrate this permission. mega budget movies to release with 100 percent occupancy.
      உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
      Enable
      x
      Notification Settings X
      Time Settings
      Done
      Clear Notification X
      Do you want to clear all the notifications from your inbox?
      Settings X
      X