14 வருஷமா ஹீரோயினாக இருப்பது லேசு இல்ல: நயன்தாராவை கொண்டாடும் ஃபேன்ஸ் #14YearsOfNayanism
சென்னை: நயன்தாரா நடிக்க வந்து 14 ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
2003ம் ஆண்டு வெளியான மனசினக்கரே மலையாள படம் மூலம் நடிகையானார் நயன்தாரா. பின்னர் சரத்குமாரின் ஐயா படம் மூலம் கோலிவுட் வந்தார். இரண்டாவது படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியானார். யாருடா இந்த பொண்ணு சுப்ரீம் ஸ்டார், சூப்பர் ஸ்டார்னு ஜோடி சேர்கிறது என்று அப்போது கோலிவுட்காரர்கள் வியந்தார்கள்.
காதல் வாழ்க்கையில் பல அடி வாங்கிய நயன்தாரா தற்போது லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.

கொண்டாட்டம்
நயன்தாரா நடிக்க வந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டது. 14 ஆண்டுகள் ஆனாலும் இன்றும் முன்னணி நடிகையாகவே உள்ளார். இந்த நல்ல நேரத்தில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
டிரெண்ட்
#14YearsOfNayanism என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்விட்டரில் டிரெண்டாகவிட்டுள்ளனர். நயன்தாராவின் போராட்டங்கள், முன்னேற்றம் பற்றி ரசிகர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
சகாப்தம்
கதாநாயகிகளின் சகாப்தம் அதிகபட்சம் 10 வருடங்கள் என்ற கோட்பாடு தாண்டி, சினிமா உலகில் கதாநாயகர்களுக்கே சவால்விடும் வகையில் அறிமுக இயக்குநர்கள், புதிய கதைக்களங்கள் என தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்த நாயகி #நயன்தாரா
#14YearsOfNayanism
#Nayanthara
ரசிகர்கள்
#14YearsOfNayanism கடின உழைப்பிற்க்கு கிடைத்த பரிசு தலைவிக்காக தானாசேர்ந்தகூட்டம் @NayantharaLive
புகைப்படங்கள்
நயன்தாராவின் புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு உங்களை யாராலும் அடித்துக்கொள்ள முடியாது என்று அவரின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











