மொத்தமா வரவன் கேங்ஸ்டர்.. ஒத்தையா வரவன் மான்ஸ்டர்.. கேஜிஎஃப் டீசர் அப்படியே ஆரிக்கு பொருந்துதே!
சென்னை: மீண்டும் முதல் ஆளாக அதிக ஓட்டுக்களை பெற்று சோமை தொடர்ந்து இரண்டாவதாக இறுதிச்சுற்றுக்குள் சென்று கெத்துக் காட்டியுள்ளார் ஆரி.
போட்ட சவால்ல தான் ஜெயிச்சிட்டேன்னு ஆரி தரையில் ஓங்கி தட்டியதை, சசிகலா செய்த சத்தியத்துடன் ஒப்பிட்டு ஒரு பக்கம் கலாய்த்து வருகின்றனர்.
மறுபக்கம் கேஜிஎஃப் டீசர் வசனங்களுடன் ஆரியின் காட்சிகளை பொருத்தி ஆரியின் சாதனையை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

நேர்மை வெற்றிக்கு முதல் படி
பிக் பாஸ் கேமை எப்படி வேண்டுமானாலும் விளையாடலாம். போட்டியாளர்களின் குணங்களை வெளிப்படுத்தவும், மெருகேற்றவும், முடியாதவர்கள் வெளியேறுவதுமாகவே இந்த மைண்ட் கேம் நடைபெற்று வருகிறது. இதில், நேர்மையாக இருந்தால் வெற்றி பெறலாம் என ஆரி செயல்பட்டு வருகிறார் என்றும், அவரது நேர்மை தான் வெற்றிக்கு முதல் படி என்றும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

மக்கள் பலம்
பிக் பாஸ் வீட்டில் பாட்ஷா படத்தின் மாணிக்கம் மாதிரி அடிவாங்கினாலும், அம்பி மாதிரி மற்ற ஹவுஸ்மேட்களால் ஒதுக்கப்பட்டாலும், மன வலிமையை விடாமல் இருந்து மக்கள் பலத்தை மற்ற போட்டியாளர்களை விட கூடுதலாக அள்ளி உள்ளார் ஆரி. இதுவே அவருக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக அவரே உணர்கிறார்.
டைட்டில் கிடைக்குமா
மக்கள் ஓட்டுத் தான் பிக் பாஸ் டைட்டிலை கொடுக்கும் என்பது உறுதியானால், இத்தனை வாரங்களாக முதல் ஆளாக அதிக ஓட்டுக்களை பெற்ற ஆரி அர்ஜுனன் தான் இந்த சீசனின் டைட்டில் வின்னர் என்று இப்போதே முடிவு செய்து விடலாம். ஆனால், இடையே விஜய் டிவியின் லீலைகள் நடந்தால், வேறு யாருக்காவது டைட்டில் போகவும் வாய்ப்புகள் உள்ளதாகவும் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.
மான்ஸ்டர் ஆரி
கேஜிஎஃப் இரண்டாம் பாக டீசர் 100 மில்லியன்களை கடந்து ஏகப்பட்ட சாதனைகளை முறியடித்து வருகிறது. இந்நிலையில், கேஜிஎஃப் படத்தின் முதல் சாப்டர் டீசரை அப்படியே ஆரி பிக் பாஸ் வீட்டில் இருந்த காட்சிகளோடு ஒப்பிட்டு உருவாக்கியுள்ள ஃபேன் மேட் மாஷ் அப் எடிட் ரசிகர்களை வியக்க வைத்து வருகிறது.

சிங்கம் சிங்கிளா தான் வரும்
மொத்தமா வரவன் கேங்ஸ்டர்.. ஒத்தையா வரவன் மான்ஸ்டர், அடிபட்ட சிங்கத்தோட வலி கர்ஜனையை விட பெருசா இருக்கும் என கேஜிஎஃப் டீசரின் ஒவ்வொரு வசனத்தையும் நல்லாவே பொருத்தியுள்ளனர். மேலும், பன்னிங்க தான் கூட்டமா வரும், சிங்கம் சிங்கிளா தான் வரும் என சிவாஜி பட வசனத்தையும் ஆரிக்கு போட்டு அவரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

திகைத்துப் போவார்
பிக் பாஸ் வீட்டை விட்டு அடுத்த வாரம் ஆரி வெளியே வந்து பார்க்கும் போது மக்கள் அவர் மீது சமூக வலைதளங்களில் காட்டியுள்ள அன்பை பார்த்து நிச்சயம் திகைத்துப் போய் ஆனந்த கண்ணீர் விடுவார். இத்தனை கோடி ஓட்டுக்கள் வார வாரம் தொடர்ந்து வருவதை பார்த்தே மக்கள் தன் பக்கம் உள்ளனர் என்பதை ஆரி இப்பவே புரிந்து கொண்டு நன்றியும் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











