'வில்லனோ, ஹீரோவோ..நீங்க வேற லெவல்ஜி' விஜய் சேதுபதி பிறந்தநாள்.. கொண்டாடும் ரசிகர்கள்!
சென்னை: நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்த நாளை முன்னிட்டு, சோசியல் மீடியாவில் #HBDVijaySethupathi என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
சினிமாவில் படிப்படியாக வளர்ந்தவர் என்பதற்கு உதாரணம், நடிகர் விஜய் சேதுபதி.
ஆரம்பத்தில், படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து, போராடி வளர்ந்தவர் அவர்.

மக்கள் செல்வன்
தமிழ் சினிமா ரசிகர்களால் மக்கள் செல்வன் என அழைக்கப்படும் விஜய் சேதுபதி, இப்போது முக்கியமான நடிகராக மாறி இருக்கிறார். 2010 ஆம் ஆண்டு வெளிவந்த 'தென்மேற்கு பருவக்காற்று' என்ற படம் அவரை நாயகனாக அறிமுகப்படுத்தியது. இந்தப் படத்தை இயக்கியவர் சீனு ராமசாமி.

நானும் ரவுடிதான்
இந்தப் படத்தைத் தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சுந்தர பாண்டியன், சூது கவ்வும், நானும் ரவுடிதான், சேதுபதி, விக்ரம் வேதா என அவர் நடித்தப் படங்கள் தொடர்ந்து ஹிட்டாக விஜய் சேதுபதி, தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக மாறியிருக்கிறார்.

ஹீரோ, வில்லன்
அலட்டல் இல்லாத அவருடைய இயல்பான நடிப்பு, தமிழ் தாண்டி பிறகு மொழிக்கும் அழைத்து சென்றிருக்கிறது. தெலுங்கு படங்களில் வில்லனாக நடிக்கும் அவருக்கு அடுத்து , மலையாளப் பட வாய்ப்பு வந்தது. ஹீரோ, வில்லன் என்றெல்லாம் இல்லை. கேரக்டர் நன்றாக இருந்தால் உடனடியாக ஓகே சொல்லும் நடிகர் அவர் என்கிறார்கள், சினிமாவில்.

பாரட்டப்படும் நடிப்பு
இப்போது ரிலீஸ் ஆகியிருக்கும் மாஸ்டரில் கூட வில்லனாக மிரட்டி இருக்கிறார் விஜய் சேதுபதி. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதியின் நடிப்பு, விஜய்க்கு சமமாகப் பாராட்டப்பட்டு வருகிறது. இதற்கிடையே, அவர் இப்போது இந்திக்கும் சென்றிருக்கிறார்.

இந்தி படங்களில்
சந்தோஷ் சிவன் இயக்கத்தில், 'மாநகரம்' ரீமேக்கான மும்பைகர், ஷாகித் கபூருடன் வெப் சீரிஸ், ஶ்ரீராம் ராகவன் இயக்கும் இந்திப் படம் என விஜய் சேதுபதியின் அடுத்தக் கட்டம் ஆரவரமாகச் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில், அவருடைய பிறந்தநாளான இன்று ட்விட்டரில் #HBDVijaySethupathi என்ற ஹேஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

வேற லெவல்ஜி
விஜய் சேதுபதி பிறந்த நாளை முன்னிட்டு ஸ்பெஷல் காமன் டிபியையும் ரசிகர்கள் உருவாக்கியுள்ளனர். சில ரசிகர்கள், வில்லனோ, ஹீரோவோ, நீங்க நடிச்சா அது வேற லெவல் ஜி என்று பாராட்டியுள்ளனர். சாதாரண நிலையில் இருந்து உண்மையான பான் இந்தியா நடிகராக மாறியிருக்கிறார் என பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











