அஜீத் பிறந்த நாள்... ரசிகர்கள் கோலாகல கொண்டாட்டம்!

By Shankar

சென்னை: அஜீத்தின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் இன்று கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் சினிமா நடிகர்களில் ரசிகர் மன்றங்களைக் கலைத்தவர் அஜீத். ரசிகர் மன்றங்களால் தேவையில்லாத அரசியல் சச்சரவு மற்றும் சண்டைகள் வருவதைத் தவிர்க்க அவர் மேற்கொண்ட நடவடிக்கை இது.

ஆனால் இப்போதும் அவரது ரசிகர்கள், அமைப்பு ரீதியாக இல்லாமல் தன்னார்வத்தில் குழுக்களாக இணைந்து அவரது பட வெளியீட்டை, பிறந்த நாளைக் கொண்டாடி வருகின்றனர்.

Fans celebrate Ajith birthday statewide

அவரது பிறந்த நாளையொட்டி, கோயில்களில் காலையிலேயே சிறப்பு பிரார்த்தனை செய்தனர் ரசிகர்கள். சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அஜீத் பிறந்த நாளையொட்டி இலவச உதவிகள், அன்னதானங்கள், மாணவர்களுக்கு எழுது பொருள் உதவி என செய்து வருகிறார்கள் ரசிகர்கள்.

இது பள்ளிகள் தொடங்கும் நேரம் என்பதால் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவி, நோட்டுப் புத்தகங்கள் வழங்குதல் போன்றவற்றை அதிகமாக செய்து வருகின்றனர்.

மதுரையில் பல இடங்களில் ரசிகர்கள் அஜீத் பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

ஜெயா, சன் தொலைக்காட்சிகளில் இன்று அஜீத் பிறந்த நாள் ஸ்பெஷலாக ஆரம்பம், வீரம் படங்கள் ஒளிபரப்பாகின்றன.

15 ஆண்டுகளுக்கு முன் அஜீத் நடித்து வெளியான அமர்க்களம் படத்தை டிஜிட்டலில் புதுப்பு 100-க்கும் மேற்பட்ட அரங்குகளில் வெளியிட்டுள்ளனர் இன்று.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X