»   »  குஷியாக 'கமல் ஹாஸன் திருவிழா'வை கொண்டாடும் ரசிகர்கள்

குஷியாக 'கமல் ஹாஸன் திருவிழா'வை கொண்டாடும் ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: உத்தம வில்லனை அடுத்து பாபநாசம் படம் ரிலீஸாக உள்ளது. இதனால் கமல் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

விஸ்வரூபம் படத்தை அடுத்து உலக நாயகன் படம் எதுவுமே ரிலீஸாகவே இல்லையே என்ற கவலையில் கமல் ஹாஸன் ரசிகர்கள் இருந்தனர். உத்தம வில்லன் படம் ரிலீஸானதை அடுத்து அவர்களின் கவலை தீர்ந்துள்ளது.

அப்பாடா எங்கள் உலக நாயகனை திரையில் பார்த்துவிட்டோம் என்று ரசிகர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

உத்தமவில்லன்

உத்தமவில்லன்

கமல் ஹாஸன், பூஜா குமார், ஆண்ட்ரியா, நாசர், கே. பாலசந்தர் உள்ளிட்டோர் நடித்துள்ள உத்தம வில்லன் படம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது. அதனால் படத்தை திரும்பத் திரும்ப பார்த்து கொண்டாடி வருகின்றனர்.

பாபநாசம்

பாபநாசம்

உத்தமவில்லன் காய்ச்சல் அடங்கும் முன்பு கமல் ஹாஸன் நடித்துள்ள பாபநாசம் படம் ரிலீஸாக உள்ளது. மலையாளத்தில் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் படத்தின் ரீமேக் தான் பாபநாசம்.

கௌதமி

கௌதமி

பல காலம் படங்களில் நடிக்காமல் இருந்த கௌதமி பாபநாசம் மூலம் மீண்டும் பெரிய திரைக்கு வந்துள்ளார். நடுத்தர குடும்பத்து அம்மாவாக அழகாகத் தெரிகிறார். மலையாளத்தில் மீனா நடித்த கதாபாத்திரத்தில் கௌதமி நடித்துள்ளார்.

கமல் திருவிழா

கமல் திருவிழா

உத்தமவில்லன் ரிலீஸைத் தொடர்ந்து அடுத்த மாதம் அல்லது ஜூலையில் பாபநாசம் ரிலீஸாக உள்ளது. விஸ்வரூபம் 2 படத்தையும் விரைவில் ரிலீஸ் செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் கமல் திருவிழாவை கொண்டாடத் துவங்கியுள்ளனர் ரசிகர்கள்.

ஒப்பீடு

ஒப்பீடு

பாபநாசம் டிரெய்லரை பார்த்த ரசிகர்கள் கமல் நடிப்பு நன்றாக உள்ளதா இல்லை மோகன்லாலின் நடிப்பு நன்றாக உள்ளதா என்று ஒரு குட்டி பட்டிமன்றம் நடித்தி இருவரும் அவரவர் பாணியில் அசத்தியுள்ளனர் என்ற தீர்ப்பை அளித்துள்ளனர்.

English summary
Ulaga Nayagan fans are celebrating Kamal Haasan festival with the release of Uthama Villain.
Please Wait while comments are loading...