44வது பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கார்த்தி.. ட்விட்டரில் ரசிகர்கள் கொண்டாட்டம்

சென்னை: தமிழ் சினிமாவின் முக்கிய நடிகரான சிவக்குமாரின் இளையமகன் கார்த்தி இன்று பிறந்தநாள் காண்கிறார்.

தமிழ் நாட்டில் பிறந்து உயர் படிப்புக்காக வெளிநாட்டுக்கு சென்று படித்தவர் கார்த்தி. அங்கேயே சினிமா சார்ந்தவற்றையும் கற்று தேர்ந்தார்.

அப்பாவும் நடிகர், அண்ணனும் நடிகர் என்ற பின்புலத்துடன் நடிக்க வந்தாலும் தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை தற்போது வைத்துள்ளார் கார்த்தி.

நடிகராக அறிமுகம்

நடிகராக அறிமுகம்

ஆரம்பத்தில் இயக்குனர் மணி ரத்தினத்திடம் உதவி இயக்குனராக பணி புரிந்த கார்த்தி நடிகராக அமீரின் பருத்திவீரன் படத்தில் அறிமுகமானார். முதல் படமே கார்த்திக்கு பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதன் காரணமாக கார்த்திக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வர தொடங்கின.

வரிசையாக வெற்றி

வரிசையாக வெற்றி

பின்னர் ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கார்த்தி நடித்தார். அதன் பின்னர் பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை, சகுனி, அலெக்ஸ் பாண்டியன் என படங்கள் வரிசையாக வெற்றி பெற்றன. இது வரை 20 படங்களில் நடித்துள்ளார் கார்த்தி. 20 படங்களும் வெவ்வேறு இயக்குனர்களுடன் பணியாற்றியுள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

இந்த ஆண்டு கார்த்தியின் நடிப்பில் வெளியான சுல்தான் ஹிட் அடித்து கார்த்திக்கு சிறப்பான தொடக்கமாக அமைந்துள்ளது. பொன்னியின் செல்வன், சர்தார், கைதி 2 என கார்த்தியின் அடுத்தடுத்த படங்கள் மீது வேற ஒரு லெவலில் எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவி வருகிறது.

ட்விட்டர் கொண்டாட்டம்

ட்விட்டர் கொண்டாட்டம்

கார்த்தியின் 44வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் காமன் DP வெளியிட்டு #HappyBirthdayKarthi என்ற hastag உடன் தங்களது வாழ்த்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர். திரையுலக பிரபலங்களும் கார்த்திக்கு தொடர்ந்து வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

More from Filmibeat

Read more about: karthi கார்த்தி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X