நீங்க தான் கேரளத்து ஐஸ்வர்யா ராய்.. பிரபல நடிகையை புகழும் ரசிகர்கள்!

சென்னை : இவன் வேற மாதிரி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை மாளவிகா மேனன்.

இதுவரை தமிழ் மற்றும் மலையாள படங்களில் மட்டுமே நடித்து வந்த இவர் தற்போது தெலுங்கில் நடிக்க தொடங்கியுள்ளார்.

பேய் மாமா, அருவா சண்டை உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து வரும் மாளவிகா மேனன் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கேரளத்து ஐஸ்வர்யா ராய் என புகழ்ந்துள்ளனர்.

ஹீரோயினுக்கு தங்கையாக

ஹீரோயினுக்கு தங்கையாக

மலையாளத்தில் வெளியான நித்ரா என்ற திரைப்படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை மாளவிகா மேனன் தமிழ் சினிமாவிலும் பிரபலமான நடிகையாக உள்ளார். விக்ரம்பிரபு நடிப்பில் வெளியான இவன் வேற மாதிரி படத்தில் ஹீரோயினுக்கு தங்கையாக நடித்து வந்த இவருக்கு அடுத்த படமே ஹீரோயின் வாய்ப்பு கிடைத்தது.

அசுர வேகத்தில்

அசுர வேகத்தில்

விழா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான மாளவிகா மேனன் அதைத் தொடர்ந்து வெத்து வேட்டு, பிரம்மன், நிஜமா நிழலா ஆகிய படங்களில் நடித்திருந்தார். தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் மலையாளத்தில் அசுர வேகத்தில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு இப்பொழுது தெலுங்கில் பல வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

அம்மாயிலு அந்தே அதே டைப்

அம்மாயிலு அந்தே அதே டைப்

இதுவரை தமிழ் மற்றும் மலையாளத்தில் மட்டும் நடித்துக்கொண்டிருந்த மாளவிகா மேனன் அம்மாயிலு அந்தே அதே டைப் படத்தில் நடித்து டோலிவுட்டுக்கு அறிமுகமாக அதைத் தொடர்ந்து வந்தனம் என்ற மற்றொரு தெலுங்கு திரைப்படத்திலும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

கேரளத்து ஐஸ்வர்யா ராய்

கேரளத்து ஐஸ்வர்யா ராய்

தமிழில் தற்போதைக்கு பேய் மாமா, அருவா சண்டை உள்ளிட்ட படங்களில் நடித்து வரும் மாளவிகா மேனன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இப்போது வைரல் ஆகியுள்ளது. அதில் கருப்பு பாவாடை தாவணியில் சிக்கென்று இருக்கும் இடையைக் காட்டி கொண்டு எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட மாளவிகாவை ரசிகர்கள் கேரளத்து ஐஸ்வர்யா ராய் என புகழ்ந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X