twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பர்த் டே ஸ்பெஷல்.. கோயில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ..? மறக்க முடியாத மலேசியா வாசுதேவன்!

    By
    |

    சென்னை: பாடகர், நடிகர், மலேசியா வாசுதேவனின் பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

    ஒவ்வொரு திரை இசை பாடகருக்கும் ஒவ்வொரு ஸ்டைல், குரல். அதில் தனித்துவமானது, மலேசியா வாசுதேவனுடையது. தமிழை சரியாக உச்சரிக்கும் சில பாடகர்களில், மலேசியா வாசுதேவனுக்கும் நிச்சயம் இருக்கிறது இடம்.

    அவரது ஒவ்வொரு பாடலிலும் தமிழ் உச்சரிப்புகள் தெறித்துவிழும். அதற்காகவே அவர் பாடல்களை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

    முதன் முதலாக கிளாமர் இல்லாத கேரக்டர்.. தமிழ் ரீமேக்கில் நடிக்கும் பிரபல ஹீரோயின் மகிழ்ச்சி! முதன் முதலாக கிளாமர் இல்லாத கேரக்டர்.. தமிழ் ரீமேக்கில் நடிக்கும் பிரபல ஹீரோயின் மகிழ்ச்சி!

    கோயில் மணி ஓசை

    கோயில் மணி ஓசை

    சிவப்பு ரோஜாக்கள் படத்தின் 'இந்த மின்மினுக்கி கண்ணில் ஒரு..' நிறம் மாறாத பூக்கள் படத்தின், ஆயிரம் மலர்களே மலருங்கள்.. கிழக்கே போகும் ரயில் படத்தின், கோயில் மணி ஓசைதன்னை கேட்டதாரோ?, ஒருவர் வாழும் ஆலயம் படத்தில், மலையோரம் மயிலே, பன்னீர் புஷ்பங்கள் படத்தின் கோடை கால காற்றே என ஒவ்வொரு பாடலிலும் தனது குரலை மாற்றி, ஏற்றி, இறக்கி பாடியிருக்கும் மலேசியா வாசுதேவன், இப்போது தாலாட்டுகிறார் பாடல்களில்.

    சினிமாவின் இசை

    சினிமாவின் இசை

    சினிமாவில் அப்படித்தான். 'நேரம்' முக்கியம். அது மிஸ்சானால் சில வாய்ப்புகள் திசை மாறலாம். அப்படி திசைமாறி, ஓர் அற்புத கலைஞனை அள்ளிக்கொண்டது சினிமாவின் இசை, நேரம். அது மலேசியா வாசுதேவன்! வாய்ப்புத் தேடிக்கொண்டிருந்தார் மலேசியா வாசுதேவன். அப்போது, அவ்வளவு ஈசியில்லை சினிமா வாய்ப்பு. '16 வயதினிலே' படத்தின் பாடல் ரெக்கார்டிங்.

    நன்றாக இருந்தால்

    நன்றாக இருந்தால்

    பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பாரதிராஜாவுக்கும் இளையராஜாவுக்கும் நன்றாகத் தெரிந்தவர். ரெக்கார்ட்டிங்கிற்கு வரவேண்டிய அவரால் அன்று வரமுடியவில்லை. பாரதிராஜா தவித்துக்கொண்டிருக்க, இளையராஜா, மலேசியா வாசுதேவனுக்கு போன் செய்தார். 'ஒரு பாடல் டிராக் பாடணும்.. கமல் ஹீரோ. நன்றாக இருந்தால் படத்தில் இடம்பெறும்' என்றார் ராஜா. ஓடோடி வந்து பாடினார் மலேசியா.

    தவிர்க்க முடியாத

    தவிர்க்க முடியாத

    அந்த பாடல், 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு..'. பட்டித்தொட்டி எங்கும் இந்தப் பாடல், பரவல் ஹிட்டடிக்க, மலேசியா வாசுதேவன், தமிழ் சினிமா இசையில் தவிர்க்க முடியாத ஆளுமையானார். ஆரம்பத்தில் குத்துப்பாடல்களாகப் பாடிக்கொண்டிருந்த மலேசியா வாசுதேவன், பின்னர் என்றும் நிலைத்திருக்கும் பல மெலடி பாடல்களையும் பாடினார். ஜப்பானில் கல்யாண ராமன் படத்தில் வரும், காதல் வந்திடுச்சு பாடலை போல, குரலை மாற்றியும் பல பாடல்களை பாடியுள்ளார்.

    ஒரு கைதியின் டைரி

    ஒரு கைதியின் டைரி

    பாரதிராஜாவின் முதல் மரியாதை படத்தில் அனைத்துப் பாடலையும் பாடியிருந்தார் மலேசியா. அவரது குரல், சிவாஜிக்கு அப்படியே பொருந்தி இருந்தது படத்தில். ரஜினி, கமல் இருவருக்கும் குரலை அவரவர் ஸ்டைலுக்கு மாற்றி பாடி, ரசிக்கக் கொடுத்த மலேசியா, நடிப்பிலும் தன்னை நிரூபித்தவர். பாரதிராஜா இயக்கிய ஒரு கைதியின் டைரி மூலம் நடிகரான அவர், பல படங்களில் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்திருக்கிறார்.

    குவிகிறது பாராட்டுகள்

    குவிகிறது பாராட்டுகள்

    சாமந்தி பூ, பாக்கு வெத்தலை, ஆயிரம் கைகள் போன்ற சில படங்களுக்கு இசை அமைப்பாளராக பணிபுரிந்திருக்கும் மலேசியா வாசுதேவனுக்கு இன்று பிறந்தநாள். இசையாலும் நடிப்பாலும் தமிழக ரசிகர்களை மகிழ்வித்த வைத்த அவருக்கு, சமூக வலைத்தளங்களில் குவிகிறது பாராட்டுகள். அவரது மறக்க முடியாத பாடல்களை ரசிகர்கள் அதில் குறிப்பிட்டு வருகின்றனர்.

    English summary
    Fans celebrate Singer/ Actor Malaysia Vasudevan birthday on social media
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X