மாஸ்டரின் ஓராண்டு போராட்டம்...வேற லெவல் ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டு அசத்தல்

சென்னை : விஜய் நடித்த மாஸ்டர் படம் வெளியாகி இன்றோடு ஓராண்டு நிறைவடைந்து விட்டது. இதனை கொண்டாடும் விதமாக, ஓராண்டு போராட்டத்திற்கு பிறகு மாஸ்டர் படம் வெளியிடப்பட்டதையும், அதற்காக இந்த படம் சந்தித்த பிரச்சனைகளையும் ஸ்பெஷல் வீடியோவாக வெளியிட்டு அசத்தி உள்ளது செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம்.

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்டிரியா உள்ளிட்டோர் நடித்திருந்த படம் மாஸ்டர். 2019 ம் ஆண்டின் துவக்கத்திலேயே துவங்கப்பட்ட மாஸ்டர் படம் தளபதி 64 என்ற பெயரில் அதிக எதிர்பார்ப்புகளுடன் உருவாக்கப்பட்டது. படத்தை முழுவதுமாக முடித்த பிறகு 2019 டிசம்பரில் தான் படத்தின் டைட்டிலையே அறிவித்தனர்.

செம ஹிட்டான பாடல்கள்

செம ஹிட்டான பாடல்கள்

படத்தின் ஃபஸ்ட் சிங்கிளாக அனிருத் இசையில் அமைந்த குட்டி ஸ்டோரி பாடலும், செகண்ட் சிங்கிளாக வாத்தி கம்மிங் பாடலும் வெளியிடப்பட்டன. இந்த இரண்டு பாடல்களும் செம ஹிட்டாகின. இதனால் படம் எப்போது வரும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக காத்திருந்தனர்.

ஓராண்டு காத்திருந்த மாஸ்டர்

ஓராண்டு காத்திருந்த மாஸ்டர்

2020ம் ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மாஸ்டர் படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் லாக்டவுடன் போடப்பட்டு, தியேட்டர்கள் மூடப்பட்டன. இதனால் மாஸ்டர் படம் ஓடிடி.,யில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக கூட தகவல்கள் பரவின. ஆனால் தியேட்டரில் மட்டுமே ரிலீஸ் செய்ய உள்ளதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்தார்.

 100 கோடி வசூல் சாதனை

100 கோடி வசூல் சாதனை

50 சதவீத பார்வையாளர்களுடன் தியேட்டர்கள் மீண்டும் திறக்கப்பட்ட நிலையில், பல எதிர்ப்புகளை மீறி மாஸ்டர் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. 2021ம் ஆண்டு பொங்கல் ஸ்பெஷல் படமாக இந்த படம் ரிலீஸ் செய்யப்பட்டு, பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்று, வசூலை அள்ளி குவித்தது. 2021ல் 100 கோடி வசூல் கிளப்பில் இணைந்த முதல் தமிழ் படம் மாஸ்டர் தான்.

ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டு அசத்தல்

இந்த படம் ரிலீசாகி இன்று ஓராண்டு நிறைவடைந்ததை முன்னிட்டு ரசிகர்கள் அதை கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் பிரேக்கிங் நியூஸ் வடிவில் மாஸ்டரின் ஓராண்டு போராட்டம் பயணம் என்ற பெயரில் ஸ்பெஷல் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது.

வேற லெவல் பயண வீடியோ

வேற லெவல் பயண வீடியோ

இதில் மாஸ்டர் படத்தின் போது விஜய் வீட்டில் நடத்தப்பட்ட ஐடி ரெய்டு, கொரோனாவால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது. ஆடியோ வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பஞ்ச் டயலாக், வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆடியது, வாத்தி கம்மிங் பாடலுக்கு குழந்தைகள் முதல் பிரபலங்கள் வரை தோளை குலுக்கி ஆடியது, 50 சதவீத பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையிலும் வசூல் சாதனை படைத்தது, மாஸ்டர் படத்தை ரசிகர்கள் கொண்டாடியது, திரையுலகமே பாராட்டியது என பல விஷயங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

Recommended Video

Thalapathy Vijay's 10 Years of NANBAN |Jiiva, Shankar #Vijayism #JAN12
வேகமாக பகிரப்படும் வீடியோ

வேகமாக பகிரப்படும் வீடியோ

இணையத்தில் காட்டு தீ போல் பரவி வரும் இந்த வீடியோவை இதுவரை கிட்டதட்ட 5 லட்சம் பேர் பார்த்துள்ளனர். பிரபலங்கள் பலரும் ரீட்வீட் செய்து வருகின்றனர். மேக்கிங் வீடியோவை விட அசத்தலாக வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோ ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. லைக்குகளும் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X