படையப்பா ரீ ரிலீஸ்.. 26 வருடத்திற்கு பிறகும் குறையாத மவுசு.. கொண்டாடும் ரசிகர்கள்!

சென்னை: ரஜினிகாந்தின் 75வது பிறந்தநாளில் அவர் நடித்து பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த படையப்பா திரைப்படம் 26 வருடங்கள் கழித்து புது பொலிவுடன் திரையில் மீண்டும் இன்று வெளியாகியுள்ளது. ரஜினியின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் படையப்பா படத்துடன் கொண்டாடி வருகின்றனர். படையப்பா படத்தை திரையில் பார்த் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

படம் பார்த்த இளம் ரசிகர் ஒருவர், படையப்பா திரைப்படம் வெளியாகும் போது எனக்கு ஒரு வயது, என்னால் அந்த படத்தை தியேட்டரில் பார்த்து ரசிக்க முடியவில்லை. 26 வருடங்களுக்கு பிறகு அப்போது படத்தை தியேட்டரில் பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. படம் சூப்பராக இருக்கிறது. நான் நீலாம்பரியின் தீவிர ரசிகன். நீலாம்பரி ரஜினியோடு சேர்ந்து இருக்கலாம் புதிதாக படத்தில் எதுவும் சேர்க்கப்படவில்லை.

Rajinikanth birthday Padayappa
Photo Credit:

படையப்பா ரீ ரிலீஸ்: பழைய படம் போலவே தெரியவில்லை, பல முறை டிவியில் பார்த்து இருந்தாலும், தியேட்டரில் பபடத்தை பார்க்கும்போது மாஸ் ஆக இருக்கிறது. ரஜினி சினிமாவிற்கு வந்து 50 வருடங்கள் ஆவதை கொண்டாடும் வகையில் ட்ரீட்டாக இந்த திரைப்படத்தை ரீலீஸ் செய்து இருக்கிறார்கள். 26 வருடத்திற்கு பிறகு படம் ரீ ரிலீஸாகி இருந்தாலும், முதல் முறை படம் வெளியாகும் போது, எந்த அளவிற்கு கொண்டாட்டம் இருந்ததோ அதே அளவிற்கு இப்பொழுதும் ரசிகர்கள் படத்தை கொண்டாடுகிறார்கள். எத்தனை படங்கள் ரீ ரிலீஸ் ஆனாலும் படையப்பா திரைப்படம் நிச்சயமாக வசூலில் சாதனை படைக்கும் என்றார்.

ரசிகர்கள் மகிழ்ச்சி: இதைத் தொடர்ந்து பேசிய கமலா தியேட்டரின் உரிமையாளர். அன்றும் இன்றும் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினி மட்டும்தான். அவரிடத்திற்கு வேறு யாரும் வரவே முடியாது. படையப்பா ரிலீஸ் ஆகும் போது அந்த படத்தை கமலா தியேட்டரில் போடவில்லை, உதயம் தியேட்டரில் தான் படம் வெளியானது என்று அப்பா சொல்லுவார். படைப்பா படம் கமலா தியேட்டரில் வெளியிட முடியவில்லையே என்கிற வருத்தம் எனக்கு இருந்து கொண்டே இருந்தது, தற்போது படையப்பா திரைப்படம் ரீலீஸ் ஆக இருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறேன். கடந்த ஆண்டு ரஜினியின் பிறந்தநாளில் தளபதி திரைப்படம் வெளியானது. தற்போது படையப்பா திரைப்படத்தை வெளியிட்டு இருக்கிறோம். இந்த படம் வெளியாகவில்லை என்றால் அண்ணாமலை திரைப்படம் வெளியாகி இருக்கும். தலைவர் தான் படையப்பா படத்தை வெளியிடலாம் என்று சொன்னார். இந்த மாதம் பெரிய படங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதனால், படையப்பா தொடர்ந்து ஓடும் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X