நோன்னா நோ தான்...ஒரே டயலாக்கில் ஹீரோ ரேஞ்சிற்கு உயர்ந்த வருண்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ல் நேற்று கமல் கூறியதை போல், ஆரம்பத்தில் டெஸ்ட் மேட்ச் போல் சென்று கொண்டிருந்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது டி டுவென்டி வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இந்த சீசனில் காதல் இல்லை என்றாலும், முந்தைய சீசன்களை விட காதல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

இந்த சீசனில் அக்ஷரா, நிரூப் போன்ற ஒரு சிலரை தவிர மற்ற அனைவரும் திருமணம் ஆனவர்கள். அனைவரும் இந்த சீசனில் ஜாலியாக பேசி வந்ததால் காதல் இருக்காது, குரூப்பிசம் இருக்காது என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில், அபினய்யிடம் நீ என்னை லவ் பண்ணுறியா என கேட்டு பிரச்சனைக்கு பிள்ளையார்சுழி போட்டார் பாவனி.

பெரிதான காதல் விவகாரம்

பெரிதான காதல் விவகாரம்

அவ்வப்போது பேசப்பட்டு வந்த அபினய் - பாவனி காதல் விவகாரம், நீ பாவனியை லவ் பண்ணுறியா என அபினய்யிடம் நேரடியாக கேட்ட பிறகு மிகப் பெரிய விவாதப் பொருளானது. அதிலும் அமீரின் என்ட்ரிக்கு பிறகு அபினய், பாவனி, அமீர் இடையேயான காதல் டிராக் அப்பட்டமாக தெரிந்து அனைவரையும் கேள்வி கேட்க வைத்தது. கடந்த சில வாரங்களாக இந்த பிரச்சனை பெரிதானது.

குழம்பிப் போன கமல்

குழம்பிப் போன கமல்

இந்த காதல் விவகாரம், அதனால் வீட்டில் ஏற்பட்ட சண்டை பற்றி கமல் விசாரித்து, பாவனிக்கு ஆதரவாக பேசி மற்ற போட்டியாளர்களுக்கு அட்வைஸ் செய்தார். ஆனால் அடுத்த நாளே கமலை குழப்புவதை போல் தனக்கும் அபினய் மீது அப்படி ஒரு எண்ணம் இருப்பதாக சொல்லி கடுப்பேற்றினார் பாவனி.

வருண் கொடுத்த பேண்ட்

வருண் கொடுத்த பேண்ட்

இந்நிலையில் நேற்று, தைரியசாலிகள், தொடை நடுங்கிகள் Band வழங்கும் கேமை நடத்தினார் கமல். அதில் பலரும் மாறி மாறி இந்த band ஐ வழங்கிக் கொண்டனர். அப்போது வருண், தைரியசாலி பேண்டை சிபிக்கும், தொடை நடுங்கி பேண்டை பாவனிக்கும் கொடுத்தார். அதற்கு வருண் கூறிய காரணம் அனைவரையும் கவர்ந்து, அவரை ஹீரோ ரேஞ்சிற்கு உயர வைத்துள்ளது.

அஜித் ஸ்டைலில் அட்வைஸ்

அஜித் ஸ்டைலில் அட்வைஸ்

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் கூறும், நோன்னா நோ தான் என்ற டயலாக்கை பேசிய வருண், இதை பலமுறை நான் பாவனியிடம் கூறி உள்ளேன். நோ என்றால் நோ என்று அன்பாகவோ அல்லது கண்டிப்பாகவோ சொல்லி இருக்க வேண்டும். அதை அவள் செய்யாததால் அவளுக்கு இந்த பேண்டை தருகிறேன் என்றார். அதே போல் இன்று அபினய் தான் வெளியேற போகிறார் என்பதையும் வருண் சரியாக கணித்து சொன்னார்.

ஆதரித்து கொண்டாடும் வருண்

ஆதரித்து கொண்டாடும் வருண்

வருண் பேசிய வார்த்தைகளை குறிப்பிட்டு நெட்டிசன்கள் பலர் பாவனியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வருண் பேசியதையும், அஜித் பேசிய வீடியோ க்ளிப்பிங்கையும் வைத்து மீம்ஸ் தயார் செய்து, அதை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X