ஒரு நிமிடம்.. ஒரே ஒரு நிமிடம் போதும்.. இது விஜய் ரசிகரின் லட்சியம்!

சென்னை: விஜய் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. ஆனால் ரசிகர்கள் நீண்ட நாட்களுக்கு முன்பே இதற்காக தயாராகி விட்டனர். இன்று வழக்கம் போல தடபுடல்படுத்தி வருகின்றனர்.

ஒன்இந்தியா தமிழ் மூலமாக கடந்த 3 நாட்களாக வாழ்த்துகளைக் குவித்து விட்டனர் ரசிகர்கள். இன்னும் அது தொடர்ந்து வருகிறது.

நம் மூலமாக விஜய்க்கு வாழ்த்துச் சொன்ன மேலும் சில ரசிகர்களின் வாழ்த்துகள்...

ஒரு நிமிடம் செலவிட்டால் போதும் - பரத் ஸ்ரீராம், கோவை

ஒரு நிமிடம் செலவிட்டால் போதும் - பரத் ஸ்ரீராம், கோவை

நீங்கள் வெறும் நடிகர் மட்டுமல்ல, எங்களது ரத்தத்தில் கலந்த சகோதரன். எனக்குப் பிடித்தது உங்களோட டான்ஸ், அழகு. தினசரி தெறி படம் தியேட்டரில் ஓடுகிறதா என்று பார்ப்பேன். நான் உங்கள் பக்தன். என்னோட லட்சியம், வாழ்க்கையில் ஒரு நிமிடாவது உங்களுடன் செலவிட வேண்டும் என்பதே. உங்களை நேரில் சந்திக்கனும். ஏற்கனவே 2004ல் கோவை வஉசி பூங்கவில் உங்களைப் பார்த்துள்ளேன். என்னோட இந்த ஆசை நி்றைவேறுமா.. ஏக்கத்துடன் உங்கள் பக்தன்.

அமைதியின் அடையாளம் - சந்திரமூர்த்தி

அமைதியின் அடையாளம் - சந்திரமூர்த்தி

சந்திரமூர்த்தி- விஜய் அண்ணா ஓர் அமைதியான மனிதர் அவர் எல்லாம் புகழையும் பெறவேண்டும் என்று கடவுளிடம் வேண்டுகிறேன்.

எல் ஆப்ரகாம் - Happy Birthday Vijay Anna.. Many many many more Happy returns of the day Anna.... May God Bls u... You are the Hero Anna You are the only Hero Anna....!

எப்பவும் கில்லி - ஜானகிராமன்

எப்பவும் கில்லி - ஜானகிராமன்

ஜானகிராமன் - என் பெயர் ஜானகிராமன். நான் விஜய் அண்ணாவின் தீவிர ரசிகன். விஜய் அண்ணா அன்று முதல் இன்று வரை கில்லி தான். அவருக்கு எப்பவும் 100/100 மார்க் தான். அவரை ஒரே ஒரு முறை நேரில் பார்க்க நானும் என் குடும்பமும் காத்திருக்கிறோம். அவர் என்றும் எங்கள் இளைய தளபதியாக இருக்க இறைவனை வேண்டுகிறேன். அவருக்கு என் சார்பாகவும் எங்கள் குடும்பம் சார்பாகவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

திருச்சி வினோத் - இளையதளபதி விஜய் அண்ணாவுக்கு ஹேப்பி பர்த்டே. விஜய் எப்போதும் மாஸ்தான். அவருக்கு நான் தரும் மதிப்பெண் 10க்கு 10.

ஒன்றுமே தெரியாத மாதிரி இருப்பார் - சுபாஷ்

ஒன்றுமே தெரியாத மாதிரி இருப்பார் - சுபாஷ்

விஜயிடம் பிடித்தது: எல்லாமே செய்துவிட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி இருப்பது, மற்றும் நம்மள சுத்தியிருப்பவர்களும் நல்லா இருக்கனும்னு நினைக்கும் மனசு. நடிப்பு ரோல்: கத்தி போல சமூக அக்கறையானப் படம். மார்க்: 10 க்கு 10

"Happy returns of the day" - நெல்லை முருகன், மும்பை

Hi Vijay, Wishing you a "Happy Many more returns of the day".
1. He is helpful to others and He is always smart. I very much like his dancing step.
2.Police Role.........Like "Pokkiri" a super hit action film.
3. I will always give him a score 10 out of 10.

சூப்பர் மாஸ் ஹீரோ - ஜெயபால்

சூப்பர் மாஸ் ஹீரோ - ஜெயபால்

நான் விஜய்யின் மிகப் பெரிய ரசிகன். அவர் சூப்பர் மாஸ் ஹீரோ. சிவகாசி, காதலுக்கு மரியாதை, குஷி, பிரண்ட்ஸ் போன்ற படங்களில் நடித்த ரோல் சூப்பர். அவருக்கு என்னோட மார்க் 10க்கு 10.

ஆர். ஸ்ரீகுமரன், சேலம் - விஜய்யின் எளிமை, குழந்தையின் மனம், அழகிய முகம், உதவும் தன்மை பிடிக்கும். டான், கேங்ஸ்டர் ரோலில் அவர் நடிக்க வேண்டும். விஜய் அண்ணாவுக்கு நான் 10க்கு 10 மார்க் தருவேன். உங்களுடன் செல்பி எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை.

என்னுடைய ரோல் மாடல்... பிரபாகரன்

என்னுடைய ரோல் மாடல்... பிரபாகரன்

என்னோட ஹீரோ, ரோல் மாடல் எல்லாமே என்னோட அப்பாதான். அப்பா எவ்ளவு பிடிக்குமோ அந்த அளவுக்கு விஜய் அண்ணாவைப் பிடிக்கும். ஸ்கிரீன்ல அவரை பார்த்தா அவ்வளோ சந்தோஷம். ஏன் இப்படின்னு தெரியலை. எனக்கு எந்திரன் மாதிரி படத்துல விஜய் அண்ணாவைப் பார்க்கனும்.

கே.தாஸ் - விஜய் அழகான நடிகர், 20 வருடங்களாக அவர் தான் என்னோட ஹீரோ. ரொமான்ஸ், சண்டைக் காட்சிக்கு அவர்தான் பெஸ்ட். பாலா, மணிரத்தினம் படங்களில் விஜய் நடிக்க வேண்டும். முருததாஸ் படத்தில் மீண்டும் நடிக்க வேண்டும்.

ரபியுல் ஹக்

ரபியுல் ஹக்

நான் திருச்சியைச் சேர்ந்த ரபியுல் ஹக். வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன். நான் விஜய்யின் மிகப் பெரிய ரசிகன். விஜய்க்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். விஜய்யை எனக்குப் பிடிக்கும். அவர் அமைதியானவர். பொறுமையானவர். அவரது டான்ஸ், முகபாவனை பிடிக்கும். அவரது நடிப்புக்கு நான் தரும் மார்க் 9.5 ஆகும். இரட்டை வேடம், சமூகக் கருத்துகளுடன் கூடிய படங்களை விஜய் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும். எனது நண்பர்கள் கெளதம், கிருஷ்ணா, சீனிவாசன், சதீஷ்வரன், பஷீர், சுதீஷ், ராம் பிரசாத் ஆகியோருடன் இணைந்து விஜய்க்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X