கன்னாபின்னா ஹிட், சாதனைகள் தகர்ப்பு.. 50வது நாளில் அல்லு அர்ஜுன் படம்.. அமர்க்களப்படுத்தும் ஃபேன்ஸ்

By

சென்னை: பல ரெக்கார்டுகளை தகர்த்து வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கும், அலா வைகுந்தபுரம்லோ படத்தின் 50 நாளை ரசிகர்கள் அமர்க்களமாகக் கொண்டாடி வருகின்றனர்.

தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜுன் நடித்து கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆன படம், 'அலா வைகுந்தபுரம்லோ'.

இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடித்துள்ளார். ஜெயராம், தபு, நிவேதா பெத்துராஜ், நவ்தீப் உட்பட பலர் நடித்துள்ளனர்.

முன்னாள் ஹீரோயின்

முன்னாள் ஹீரோயின்

த்ரிவிக்ரம் இயக்கியுள்ள இந்தப் படம், சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்தப் படம் ரிலீஸ் ஆன ஒரு நாளுக்கு முன்பாக தெலுங்கு சினிமாவின் பிரின்ஸ் மகேஷ்பாபு நடித்த, சரிலேரு நீக்கெவ்வரு படம் ரிலீஸ் ஆனது. ராணுவ வீரராக மகேஷ் பாபு நடித்துள்ளார். முன்னாள் ஹீரோயின் விஜயசாந்தி, 13 வருடத்துக்குப் பிறகு இதில் நடித்துள்ளார். இந்தப் படமும் ஹிட்டானது.

ரசிகர்களுக்கு

அனில் ரவிபுடி இயக்கியுள்ள இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயின். இந்தப்படம் நேற்று ஐம்பதாவது நாளை எட்டியது. இதையடுத்து நடிகர் மகேஷ்பாபு, இந்தப் படத்தை மெகா வெற்றி பெற வைத்த படக்குழுவுக்கும் ரசிகர்களுக்கும் சமூக வலைத்தளத்தில் நன்றி தெரிவித்திருந்தார். இது தெலுங்கில் நேற்று டிரெண்டானது.

அலா வைகுந்தபுரம்லோ

இந்நிலையில், அல்லு அர்ஜுனின் 'அலா வைகுந்தபுரம்லோ' படம் இன்று 50 வது நாளை எட்டியுள்ளது. ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர். இந்தப் படம் இப்போதுவரை ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது. பல படங்களின் சாதனைகளை உடைத்துள்ளதாகவும் பாகுபலி படத்துக்குப் பிறகு இந்தப் படம் வசூலில் பெரிய சாதனை படைக்கும் என்கின்றனர்.

பழைய கதை

பழைய கதை

இதன் பாடல்கள் யுடியூப்பில் இப்போதும் டிரெண்டிங்கில் இருக்கிறது. சாதாரண பழைய கதைதான் என்றாலும் அதை சொன்ன விதத்தில் இந்தப் படம் பெரிய ஹிட்டாகியுள்ளது. திரைக்கதை சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கூறுகின்றனர். மீண்டும் மீண்டும் தியேட்டர்களுக்கு வந்து ரசிகர்கள் படத்தைப் பார்ப்பதாக வினியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.

இந்தியில் ரீமேக்

இந்தியில் ரீமேக்

இந்தப் படத்தை அல்லு அர்ஜூனின் தந்தை அல்லு அரவிந்த் தயாரித்திருந்தார். இந்தப் படத்தை அவர் இந்தியிலும் ரீமேக் செய்ய இருக்கிறது. இந்தியில் நடிக்கும் நடிகர்கள் இன்னும் முடிவாகவில்லை. அல்லு அர்ஜுனும் இந்தப் படத்தின் இயக்குனர் த்ரிவிக்ரமும் இதற்கு முன் ஜூலாய், சன் ஆப் சத்யமூர்த்தி ஆகிய ஹிட் படங்களைக் கொடுத்துள்ளனர். இப்போது சுகுமார் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் அல்லு அர்ஜுன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X