அப்போதே ஹாலிவுட் தரம்.. இன்னைக்கு புலம்பி என்ன பிரயோஜனம்.. பில்லா 2 ரிலீஸ் ஆகி 12 ஆண்டுகள் ஆச்சு!

சென்னை: தமிழ் சினிமாவில் இன்றைக்கு ஒரு படத்தின் இரண்டாம் பாகம் எடுப்பது என்பது மிகவும் சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. அந்த படத்தின் வசூலைப் பொறுத்து மூன்றாம் பாகம் நான்காம் பாகம் தயாரிக்கும் பணிகளில் இயக்குநரோ நடிகரோ களமிறங்கிவிடுகின்றனர். அவர்கள் அமைதியாக இருந்தாலும் ரசிகர்கள் அமைதியாக இருப்பதில்லை. தற்போது 1996ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் நேற்று அதாவது ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் ஆனது.

இதனால் இணையத்தில் நுழைந்தாலே இந்தியன் 2 தொடர்பான தகவல்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது. ஆனால் இதற்கிடையில் சைலண்டாக சம்பவம் செய்து கொண்டு உள்ளது அஜித் குமார் நடிப்பில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான பில்லா 2. இன்றுடன் இப்படம் வெளியாகி 12 ஆண்டுகள் ஆகின்றது என்பதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Ajithkumar Billa 2 Yuvan Shankar Raaja 2

1980ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பில்லா படத்தின் ரீமேக்கில் அஜித் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளியான படம் பில்லா. இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என அஜித் தரப்பில் முடிவெடுக்கப்பட்டு படம் 2012ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. முதலில் பில்லா படத்தின் ரீமேக்கினை இயக்கிய விஷ்ணு வர்தன் இயக்குவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதன் பின்னர் இந்த படத்தை சக்ரி டொலட்டி இயக்கினார். ரசிகர்கள் சரியான மனநிலையுடன் படத்திற்கு வரவேண்டும் என தி பிகினிங் என்ற டேக் லைனுடன் படத்தின் டைட்டில் கார்ட் அமைந்திருந்தது.

ஹாலிவுட் தரம்: பில்லா 2 படம், அதுவரை தமிழ் சினிமா கண்டிராத ஹாலிவுட் தரத்திற்கு உருவாக்கப்பட்டிருந்த ஒரு கேங்ஸ்டர் படம் ஆகும். இந்த படத்தின் திரைக்கதை, வசனம், பாடல்கள், பின்னணி இசை, கலர் கரக்‌ஷன்ஸ், ஆர்ட் டிப்பார்ட்மெண்ட், காஸ்டியூம் என அனைத்துமே உலகத்தரத்தில் இருந்தது. குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியைப் போல் அந்த காலகட்டத்தில் ஆகச்சிறந்த க்ளைமேக்ஸ் காட்சியாக எந்த படத்திலுமே இடம் பெறவில்லை.

Ajithkumar Billa 2 Yuvan Shankar Raaja 2

பவர்புல் டயலாக்ஸ்: மேலும் படத்தில் இடம் பெற்றிருந்த, ஆசை இல்ல அண்ணாச்சி பசி, உட்காந்து வேலை சொல்றவனுக்கும் தான் உயிரயே பணையம் வெச்சு இறங்கி வேல செய்யறவனுக்கும் வித்தியாசம் இருக்கு, என்னோட நண்பனா இருக்கறதுக்கு எந்த தகுதியும் தேவையில்லை.. ஆனால், எதிரியா இருக்க தகுதி வேணும், நாங்க அகதிங்கதான்.. ஆனாதைங்க இல்ல, பேரு என்னனு கேட்டயே.. பில்லா.. டேவிட் பில்லா" என்பது உள்ளிட்ட வசனங்களை அஜித் குரலில் கேட்கும்போது திரையரங்கமே அதிர்ந்தது.

Ajithkumar Billa 2 Yuvan Shankar Raaja 2

அண்டர் ரேட்டேட்: யுவன் ஷங்கர் ராஜா இசையில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் மெகா ஹிட் ஆனது. குறிப்பாக பாடல்கள் வலிந்து திணித்தது போல் இல்லாமல் காட்சிக்கு தேவைப்படுவதைப் போல் இருந்தது. இதனால் படம் இன்றைக்கு ரிலீஸ் ஆகியிருந்தால் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்‌ஷனில் பல நூறு கோடிகளை அறுவடை செய்திருக்கும். ஆனால் படம் ரிலீஸ் ஆன காலகட்டமான 2012ஆம் ஆண்டில் இந்த படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் வெற்றி பெற வைக்கத் தவறிவிட்டனர். இதனால் இந்த படம் மோஸ்ட் அண்டர் ரேட்டட் படத்தின் வரிசையில் இணைந்துள்ளது.

இன்றைக்கு இந்த படம் குறித்து பல இளம் சினிமா பிரபலங்கள் தொடங்கி உலக சினிமா ரசிகர்கள் வரை கொண்டாடி வருகின்றனர். இன்றுடன் படம் ரிலீஸ் ஆகி 12 ஆண்டுகள் ஆவதை ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X