'நெஞ்சிக்குள்ள இன்னாருன்னு சொன்னா புரியுமா..?' நவரச நாயகனை அப்படி கொண்டாடும் ரசிகர்கள்!

By

சென்னை: நவரசன் நாயகன் கார்த்திக்கின் பிறந்த நாளை, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர.

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர்கள் பலர். அதில் மறக்கவே முடியாத ஒருவர், கார்த்திக்.

அதிகமான ரசிகைகளை கொண்டவர் என்றும் சாக்லேட் பாய் என்றும் பல நடிகர்களைச் சொன்னாலும் அந்த பெயருக்கு ஒரிஜினலாகப் பொருந்துபவர் நம்ம கார்த்திக்தான்.

ரசிகர், ரசிகைகள்

ரசிகர், ரசிகைகள்

இப்போதும் அவருக்கு இருக்கிறார்கள் ஏராளமான ரசிகர், ரசிகைகள். சினிமாவில், அனைத்து வாரிசு நடிகர்களும் அப்படியே ஜெயித்து விடுவதில்லை எளிதாக. தனித்துவமான திறமை, நிச்சயம் வேண்டும். அந்தத் தனித்துவ திறமை கார்த்திக்கிடம் இயல்பாகவே இருந்தது/இருக்கிறது. அது அவர் தந்தையிடம் இருந்து வந்திருக்கலாம்.

நவரச நாயகன்

நவரச நாயகன்

அலைகள் ஓய்வதில்லை படத்தில், 1981 ஆம் ஆண்டில் பாரதிராஜாவால் அறிமுகப் படுத்தப்பட்ட கார்த்திக், முதல் படத்திலேயே சிறந்த அறிமுகத்துக்கான அரசு விருதை பெற்றார். அந்த காதல் நாயகன், நவரச நாயகனாக மாறியது அதற்கு அடுத்து வந்த படங்களால். நிற்க நேரமில்லாமல் ஓடுவது என்பார்களே, அப்படித்தான் இருந்தார் கார்த்திக்.

மணிரத்னம்

மணிரத்னம்

ஒரு படம் முடிந்ததும் அடுத்தப் படம் என நிஜமாகவே ஓடிக்கொண்டிருந்தது வாழ்க்கை. முன்னணி இயக்குனர்களான பாரதிராஜா, கே.பாலசந்தர், மணிரத்னம், பிரியதர்ஷன், பாசில், ஆர்.வி.உதயகுமார் உள்பட பலருடன் பணியாற்றி இருக்கிறார் கார்த்திக். கமல்ஹாசன், ரஜினிகாந்த் என ஒருபக்கம் கலக்கி வந்த காலகட்டத்திலும் தனக்கென செல்ல ரசிகர்களை உருவாக்கி இருந்தார் கார்த்திக்

அக்னி நட்சத்திரம்

அக்னி நட்சத்திரம்

அவர் நடித்த, நினைவெல்லாம் நித்யா, அக்னி நட்சத்திரம், பொன்னுமணி, வருஷம் 16, கோபுர வாசலிலே, அமரன், கிழ்க்கு வாசல் உள்பட பல படங்கள் இன்னும் பல ரசிகர்களின் மனதில் அலைபாய்ந்து கொண்டிருக்கிறது பத்திரமாக. இது, ஒரு பக்கம் என்றால் அவர் நடித்த, உள்ளத்தை அள்ளித்தா உள்ளிட்ட காமெடி படங்களிலும் கச்சிதமாக நடித்திருக்கிறார்.

உள்ளத்தை அள்ளித்தா

உள்ளத்தை அள்ளித்தா

அடுத்த வாரிசாக அவர் மகன் கவுதம் கார்த்திக் வந்துவிட்டாலும் கார்த்திக்கிற்கான வரவேற்பும் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அப்படியே இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனேகன் மூலம் ரீ என்ட்ரி ஆகி, தானா சேர்ந்த கூட்டம், சந்திரமெளலி என நடித்து வருகிறார் கார்த்திக். அவருக்கு இன்று பர்த் டே.

நெஞ்சிக்குள்ள

நெஞ்சிக்குள்ள

பல நடிகர், நடிகைகளும் ரசிகர்களும் அவர் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். சமூக வலைதளங்களில் அவர் நடித்த சில சினிமா பட காட்சிகளை வெளியிட்டு கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். அதில் ஒரு பாடல், ரசிகர்களின் மனதைச் சொல்வது போலவே இருக்கிறது. அது, 'நெஞ்சிக்குள்ள இன்னாருன்னு சொன்னா புரியுமா?'.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X