»   »  பட்டையைக் கிளப்பும் கபாலி பாடல்கள்... உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்!

பட்டையைக் கிளப்பும் கபாலி பாடல்கள்... உற்சாகத்தில் ரஜினி ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி ரசிகர்கள் வாழ்க்கையில் இத்தனை உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் இதற்கு முன் அனுபவித்திருக்க மாட்டார்கள்.

நேற்று மாலை தொடங்கிய அவர்களின் சந்தோஷக் கொண்டாட்டம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.


Fans celebrating Kabali audio launch as a festival

எல்லாம் கபாலி படத்தின் புது ஸ்டில்கள், இசை, பாடல்கள் வெளியாகத் தொடங்கியதுமே ரசிகர்கள் மனதில் தீப் பிடிக்கத் தொடங்கிவிட்டது.


கபாலியின் முதல் பாடலை நேற்று இரவு 12 மணிக்கு வெளியிடுவதாக முதலில் அறிவித்தார் தயாரிப்பாளர் தாணு. ஆனால் ரசிகர்களை அவ்வளவு நேரம் காக்க வைக்க விரும்பவில்லை என்று கூறி 10 மணிக்கே 'உலகம் ஒருவனுக்கா' பாடலை வெளியிட்டார்கள். ஆங்கில ராப் வரிகளுடன் அமைந்த அந்த தமிழ்ப் பாடலைக் கேட்டு ஆனந்தத் தாண்டவம் ஆடித் தீர்த்தார்கள் ரசிகர்கள்.


அதன் பிறகு படிப்படியாக அனைத்துப் பாடல்களையுமே வெளியிட்டுவிட்டது, திங் மியூசிக் நிறுவனம்.


மொத்தம் 5 பாடல்கள்.


இந்தப் பாடல்கள் வெளியாகும்போதே, படத்தின் புதுப்புது ஸ்டில்களையும் வெளியிட ஆரம்பித்தது திங் மியூசிக். அந்தப் படங்களைப் பார்த்து மிகுந்த உற்சாகமடைந்த ரசிகர்கள், அவற்றை ட்ரெண்டாக்கி இணைய வெளியை அதிர வைத்தனர்.


சமூக வலைத் தளங்கள் அனைத்திலும் ஒன்றிலிருந்து பத்து இடங்களை கபாலி, ரஜினி, கபாலி பாடல்கள், மகிழ்ச்சி போன்ற ஹேஷ் டேக்குகளே ஆக்கிரமித்து ட்ரெண்டிங்கில் புது சாதனைப் படைத்தது.


ரஜினி படங்களில் இதுவரை இப்படி ஒரு வீச்சைப் பார்த்ததில்லை என்று பலரும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.


இன்று தமிழகம், மும்பை, ஹைதராபாத் போன்ற பல இடங்களில் கபாலியின் ஆடியோ வெளியீட்டை தங்கள் சொந்த செலவில் விழாவாக எடுத்துக் கொண்டாடி வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.

English summary
Rajinikanth's fans celebrating the audio launch and songs of Kabali movie worldwide as a festival.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil