கூலி பாட்டும் காப்பியா?.. ஐ எம் தி டேஞ்சரை அனிருத் இங்கிருந்து தான் ஆட்டையப்போட்டாரா?..

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கூலி படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வரும் நிலையில், அந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களை சற்றுமுன் சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது. ரத்தமாரே பாடலுக்கு போட்டியாக "உயிர்நாடி நண்பனே" பாடல் கேட்க காதுகளுக்கு இதமாக உள்ளது.

விக்ரம் படத்தில் இடம்பெற்ற Eagle is Coming பாடல் போல ஒரு செம இங்கிலிஷ் பாட்டு கூலி படத்துக்கும் போட வேண்டும் என லோகேஷ் கனகராஜ் கேட்க அனிருத் 'I am the Danger' என தரமான சம்பவத்தை செய்துள்ளார்.

Fans clamis Coolie Song I am the danger copycat by ZAYDE WOLF s KING song
Photo Credit:

ஆனால், அதற்குள் நெட்டிசன்கள் டெக்னாலஜி பையன் புடிச்சிட்டான் என்கிற ரேஞ்சில் ஆங்கில ஆல்பம் பாடல் ஒன்றில் இருந்து தான் அனிருத் ஆட்டையைப் போட்டிருக்கிறார் என பதிவிட்டு ட்ரோல் செய்து வருகின்றனர்.

ஹாரிஷ் இப்படி தான் காலியானார்: ஏகப்பட்ட வெற்றி ஆல்பங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் ஏ.ஆர். ரஹ்மான் இந்திக்கு போன கேப்பில் உச்சத்துக்கு சென்ற ஹாரிஷ் ஜெயராஜ் தொடர்ந்து பல வெளிநாட்டு பாடல்களை காப்பி செய்து புதிய பாடல்களை உருவாக்கி வருவதாக ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்து வந்த நிலையில், அவரது மார்க்கெட் கடுமையாக சரிந்து சில வருடங்கள் ஆள் அட்ரஸே இல்லாமல் காணாமல் போய்விட்டார். மீண்டும் கம்பேக் கொடுத்தாலும், பெரிய படங்களில் பணியாற்றும் வாய்ப்புகள் அவருக்கு பெரிதாக அமையவில்லை.

கூலி பாட்டும் காப்பி கேட்டா?: அனிருத் எந்தவொரு பாட்டு போட்டாலும் ஹிட்டாகி வரும் நிலையில், அதே சமயத்தில் அவரது பாடல்களும் வெளிநாட்டு பாடல்களை சுட்டு போடப்பட்டு வருவதாக தொடர்ந்து சர்ச்சைகள் வெடித்து வருகின்றன. லியோ படத்தின் ஆர்டினரி பர்சன் பாடலுக்கும் இதே பஞ்சாயத்து வெடித்த நிலையில், தற்போது ஐ எம் தி டேஞ்சர் பாடல் வெளியான சில நொடிகளிலேயே இந்த பாடலும் காப்பி தான் என நெட்டிசன் ஒருவர் ஆல்பம் பாடல் ஆதாரத்தையும் வெளியிட்டுள்ளார்.

ஐ எம் தி டேஞ்சருக்கே டேஞ்சரா?: 8 ஆண்டுகளுக்கு முன்பாக வெளியான ZAYDE WOLFன் "KING" ஆல்பம் பாடலை கொஞ்சம் பட்டி டிக்கெரிங் பார்த்து அனிருத் இந்த பாடலை கொடுத்துள்ளார் என கிருஷ் எனும் நெட்டிசன் சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ட்வீட்டுக்கு கீழ் போஸ்ட் செய்துள்ளார்.

ஏஐ மூலம் லிரிக்ஸ்: சமீபத்தில் பேட்டியளித்த அனிருத், பாடல் வரிகள் தெரியவில்லை என்பதற்காக ChatGPTல் ஏற்கனவே எழுதிய பாடல் வரிகளை போட்டு 2 வரிகள் கேட்டேன், அது ஒரு பெரிய லிஸ்ட்டே கொடுத்தது என பேசியிருந்தார். இசையமைப்பாளர்கள் புதிய பாடல்களை உருவாக்க ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால், பழைய பாடல்களில் இருந்து சாயல்களை ஏஐ எடுத்துக் கொடுக்கிறதா? அல்லது இவர்களே எடுக்கிறார்களா என்கிற கேள்விகளையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

மொத்த ஆல்பம் எப்படி: சிக்கிடு வைப் மற்றும் மோனிகா பாடல்களை தவிர உயிர்நாடி நண்பனே மற்றும் ஐ ஆம் தி டேஞ்சர் பாடல்கள் கேட்க நல்லா இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அனிருத் இசையில் அனைத்து பாடல்களுமே கூலி படத்தோடு பார்க்கும் போது தெறியாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X