twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டெக்னிக்கலாக மிரட்டியதா பொன்னியின் செல்வன்?... Goosebumps மொமண்ட் கொடுத்த ஏஆர் ரஹ்மான்...

    |

    சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் இன்று (செப் 30) திரையரங்குகளில் வெளியானது.

    மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வனுக்கு ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது.

    பொன்னியின் செல்வன் படத்தின் மேக்கிங், டெக்னிக்கல் போன்றவை குறித்து ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

    ஐஸ்வர்யா ராய் மேல பொறாமையா இருக்கு.. பொன்னியின் செல்வன் படம் குறித்து நெகிழ்ந்த நடிகை மீனா! ஐஸ்வர்யா ராய் மேல பொறாமையா இருக்கு.. பொன்னியின் செல்வன் படம் குறித்து நெகிழ்ந்த நடிகை மீனா!

    ரசிகர்கள் கொண்டாடும் பொன்னியின் செல்வன்

    ரசிகர்கள் கொண்டாடும் பொன்னியின் செல்வன்

    தமிழ்த் திரையுலகின் மிகப் பிரம்மாண்டமான கனவுப் படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. உலகம் முழுவதும் ரிலீஸான பொன்னியின் செல்வன் படத்தை ரசிகர்கள் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் டெக்னிக்கல் பற்றியும் ரசிகர்கள் தங்களது கருத்துகளைக் கூறி வருகின்றனர்.

    மிரட்டிய ஏஆர் ரஹ்மான்

    மிரட்டிய ஏஆர் ரஹ்மான்

    ரோஜா படத்தில் கடந்த 30 ஆண்டுகளாக கலக்கி வரும் மணிரத்னம், ஏஆர் ரஹ்மான் காம்போ, பொன்னியின் செல்வன் படத்திலும் மிரட்டியுள்ளது. ஏற்கனவே ஏஆர் ரஹ்மானின் இசையில் பாடல்கள் ஹிட் அடித்துவிட்டன. இந்நிலையில் திரையரங்குகளில் பார்க்கும் போது பாடல்கள் இன்னும் சூப்பராக இருக்கு என ரசிகர்கள் கூறியுள்ளனர். அதேபோல், பின்னணி இசையில் ரஹ்மான் வேறலெவலில் Goosebumps மொமண்ட் கொடுத்துள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர்.

    ஏஆர் ரஹ்மானுக்கு தேசிய விருது?

    ஏஆர் ரஹ்மானுக்கு தேசிய விருது?

    ஏஆர் ரஹ்மானின் பின்னணி இசை மிகச் சிறந்த தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸ் எனவும் ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர். இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் இசைக்காக ஏஆர் ரஹ்மானுக்கு தேசிய விருது கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் சினிமா விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை ரோஜா, மின்சார கனவு, லகான், கண்ணத்தில் முத்தமிட்டால், மாம், காற்று வெளியிடை ஆகிய படங்களுக்காக 6 தேசிய விருதுகளை ஏஆர் ரஹ்மான் வென்றுள்ளார். இந்நிலையில், பொன்னியின் செல்வனுக்கும் தேசிய விருது கிடைக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    பெஸ்ட் சினிமோட்டோகிராபி

    பெஸ்ட் சினிமோட்டோகிராபி

    பொன்னியின் செல்வன் படத்தின் மேக்கிங்கில் ஏஆர் ரஹ்மானின் இசைக்குப் பிறகு ரவி வர்மனின் ஒளிப்பதிவு தரமாக வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. சோழர்காலத்தில் பிரம்மாண்டமான அரண்மனைகள், சண்டைக் காட்சிகள் என அனைத்தையும் தாறுமாறாக சினிமோட்டோகிராபி செய்துள்ளார் ரவி வர்மன். அதேபோல், தோட்டா தரணியின் கலை வேலைப்பாடுகளும் சோழர் காலத்தை அப்படியே கண்முன் காட்டியுள்ளதாக ரசிகர்கள் கூறியுள்ளனர். சிஜி, சண்டைக் காட்சிகள், ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங் என பொன்னியின் செல்வனில் எல்லாமே ஹாலிவுட் தரத்தில் இருப்பதாகவும் ரசிகர்கள் தரப்பில் இருந்து பாராட்டுகள் கிடைத்துள்ளன.

    English summary
    Ponniyin Selvan Part-1 technical Review by Fans'. They are excited about AR Rahman's music and Ravi Varman's cinematography.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X