25ஆம் தேதியும்.. மாநாடு படத்தில் பணியாற்றியவர்கள் மரணமும்.. ரசிகர்கள் போடும் முடிச்சு..
சென்னை: இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜாவின் மரணத்தில் இருந்து இன்னும் ஒட்டுமொத்த திரையுலகமும் மீண்டு வரவில்லை. மனோஜ் பாரதிராஜாவின் மொத்த குடும்பமும் தங்களது சந்தோஷத்தை இழந்து துக்கத்தில் தவித்து வருகிறார்கள். இப்படியான நிலையில் அவர்களின் குடும்பத்தில் உள்ளவர்களை பாரதிராஜாவின் சிஷ்யர்களும் உறவினர்களும் ஆறுதல் சொல்லி மீட்டு வருகிறார்கள். இப்படியான நிலையில் இளையராஜாவின் மகள் பவதாரிணி மரணம், மனோஜ் பாரதிராஜாவின் மரணம் மற்றும் மாநாடு படத்தின் ரிலீஸ் தேதி ஆகியவற்றை முடிச்சுப்போட்டு ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.
அதாவது, பவதாரிணி மற்றும் மனோஜ் பாரதிராஜா ஆகியோர் கடைசியாக இணைந்து பணியாற்றிய படம் என்றால் அது, மாநாடு படம் தான். சிலம்பரசன், எஸ்.ஜே. சூர்யா, எஸ்.ஏ. சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இந்த படத்தில், மனோஜ் பாரதிராஜா சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடலை பவதாரிணி பாடியுள்ளார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வெற்றிப் படமாக மாறி, சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
மாநாடு படத்தை பொறுத்தவரையில் இந்த படம் கடந்த 2021 ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்திற்கு பின்னர் வெளியானது. சரியாக படம் வெளியான தேதி என்று பார்த்தால், நவம்பர் மாதம் 25ஆம் தேதி ரிலீஸ் ஆனது. இப்படியான நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியும், பவதாரிணி மற்றும் மனோஜ் பாரதிராஜாவின் மரண தேதிகளையும் இணைத்து வைத்து பேசி வருகிறார்கள்.

25 ஆம் தேதி: அதாவது மாநாடு படம் வெளியானது, நவம்பர் மாதம் 25ஆம் தேதி, பவதாரிணி மறைந்தது, ஜனவரி மாதம் 25ஆம் தேதி, அதேபோல் மனோஜ் பாரதிராஜா மறைந்தது மார்ச் மாதம் 25ஆம் தேதி. இதனால் ரசிகர்கள், இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றிய கடைசி படம் மாநாடு. இந்த படத்தின் ரிலீஸ் தேதியும், பவதாரணி மற்றும் மனோஜ் பாரதிராஜா ஆகியோர் மரண தேதிகளும் ஒரே தேதியாக இருப்பதால், ரசிகர்கள் இது தொடர்பாக பரவலாக பேசி வருகிறார்கள்.
மரணம்: பாடகி மற்றும் இசையமைப்பாளர் பவதாரிணி கடந்த ஆண்டு அதாவது 2024ஆம் ஆண்டு புற்றுநோய் ஏற்பட்டு, சிகிச்சைக்காக இலங்கைக்குச் சென்றிருந்த போது இலங்கையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் பின்னர் அவரது உடல் இலங்கையில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, சென்னையில் உள்ள இளையராஜாவின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதன் பின்னர் அவர்களின் சொந்த ஊரான, தேனி மாவட்டம், பண்ணையபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.

தகப்பனார்கள்: இப்படி இருக்கும்போது, நடிகர் மற்றும் மனோஜ் பாரதிராஜா 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். இவர் இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஓப்பன் ஹார்ட் சர்ஜரி செய்து கொண்டார். அவரது உடல் சென்னையில் உள்ள பெசன்ட் நகர் மின் மயானத்தில் எரிக்கப்பட்டது. அவர்களின் தகப்பனார்களான, அதாவது, பவதாரிணியின் தகப்பனார் இசைஞானி இளையராஜாவும், மனோஜ் பாரதிராஜாவின் தகப்பானார் இயக்குநர் இமயம் பாரதிராஜாவும் நெருங்கிய நண்பர்கள், மேலும் இருவரும் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் சினிமா வாய்ப்பு தேடி இருவரும் ஒரே நேரத்தில் சென்னைக்கு வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications











