Dragon vs NEEK: சைலண்ட் மோடில் NEEK.. தெறிக்கவிடும் பிரதீப்பின் Dragon.. கோட்டை விட்டாரா தனுஷ்?

சென்னை: காதலர் தினத்திற்கு, அல்லது அதற்கு முன்னர் அல்லது பின்னர் ரிலீஸ் செய்யலாம் என திட்டமிட்டு உருவாக்கப்பட்ட படங்கள் டிராகன் மற்றும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்கள். ஆனால், பிப்ரவரி 6ஆம் தேதி அஜித்தின் விடாமுயற்சி படம் ரிலீஸ் ஆனதால், இந்த இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியில் மாற்றம் ஏற்பட்டது. இதனால் இரண்டு படங்களும் ஒரே நாளில், அதாவது, இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இரண்டு படங்களையும் பார்த்த ரசிகர்கள் பலரும் படம் குறித்து தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். அதில் பலரும் NEEK படத்திற்கு கலவையான விமர்சனத்தை முன் வைத்து வருகிறார்கள். டிராகன் படத்திற்கு பாசிடிவான விமர்சனங்கள் வருகிறது.

NEEK படத்தை பொறுத்தவரை தனுஷ் இயக்கத்தில் உருவாகி வெளியாகியுள்ளது. தனுஷின் இயக்கத்தில் வெளியாகியுள்ள மூன்றாவது படம் இது. படத்தை தனுஷ் தயாரிக்கவும் செய்துள்ளார். இளம் நட்சத்திர பட்டாளங்களை கொண்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். தனுஷ் இயக்கத்தில் வெளியாகும் மூன்றாவது படம் என்பதால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் படத்திற்கு புக்கிங் என்பது அந்த அளவுக்கு இல்லை. வெளியான தியேட்டர்களில் கணிசமான அளவிலான தியேட்டரில்தான் பல காட்சிகள் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக புக் ஆனது.

NEEK Dragon Dhanush Pradeep Ranganathan

ஆனால் படம் பார்த்த ரசிகர்கள் பலருக்கும் படம் திருப்தியைக் கொடுக்கவில்லை எனக் கூறி வருகிறார்கள். தனுஷின் அக்கா மகன் பவிஷை கதாநாயகனாக மாற்ற தனுஷ் முயற்சி எடுத்துள்ளாரா என சில ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள். மேலும் பவிஷ் தனது நடிப்பு திறமையை மேலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று விமர்சிக்கிறார்கள். படத்தின் பலம் என்றால் அது ஜி.வி. பிரகாஷ் குமார் இசை மட்டும் தான். பாடல்கள் பின்னணி இசை என அனைத்திலும் ஜி.வி. பிரகாஷ் அட்டகாசமாக ஸ்கோர் செய்துள்ளார். அவரால்தான் படத்தை ஓரளவிற்காவது பார்க்க முடிகிறது எனக் கூறுகிறார்கள். மேலும் மேஷ்யூ தாமஸின் நடிப்பு சிறப்பாக உள்ளது. வழக்கமான காதல் கதை என்றாலும் படத்தை இன்னும் ஜாலியாக, கொடுத்திருக்கலாம் எனக் கூறுகிறார்கள்.

NEEK Dragon Dhanush Pradeep Ranganathan

மாஸ் ஹிட்: அதே நேரத்தில், இன்று வெளியான படம் டிராகன். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகி பிரதீப் ரங்கநாதன் நடித்து உருவான படம். ஏ.ஜி.எஸ் தயாரித்துள்ள இந்த படமும் இன்று வெளியாகியுள்ளது. டிரைலர் வெளியானதிலிருந்து படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இதனால் ரசிகர்கள் படத்தின் புக்கிங் தொடங்கியதுமே ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு புக் செய்தார்கள். படத்தின் டிரைலரை பார்த்த போது பலரும் இதை சிவகார்த்திகேயனின் டான் படத்தை போல் இருக்கும் போலயே எனக் கூறினார்கள்.

NEEK Dragon Dhanush Pradeep Ranganathan

டிராகன்: ஆனால் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து படத்தின் கதைக்களம் கல்லூரி என்பதால் பலரும் இப்படி நினைக்கிறார்கள், ஆனால் படத்தின் திரைக்கதை மொத்தமாக வேறு எனக் கூறினார். படம் பார்த்த ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகிறார்கள் என்றுதான் கூறுகிறார்கள். படத்தின் முதல் பாதியில் சிரித்து சிரித்து வயிறு வலியே எடுத்து விட்டது எனக் கூறுகிறார்கள். மேலும் இரண்டாவது பாதியில் செண்டிமெண்ட் காட்சிகளுடன் படம் திருப்திகரமாக இருப்பதாக கூறி வருகிறார்கள்.

NEEK Dragon Dhanush Pradeep Ranganathan

சொதப்பல்: ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளதால், படத்திற்கான டிக்கெட்டுகள் வேகமாக புக் ஆகி வருகிறது. இது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது . மேலும் வசூல் ரீதியாக இந்த படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறும் என படக்குழு நம்பிக்கையில் உள்ளது. டிராகன் படத்துடன் NEEK ரிலீஸ் ஆனது தான், NEEK படத்தை டிராகன் படத்துடன் ஒப்பிட்டு வருகிறார்கள். இதுவே தனுஷ் ராயன் படத்தைப்போல் சோலோ ரிலீஸ் செய்திருந்தால், படம் கவனிக்கப்படும் படமாக மாறியிருக்கும் என சினிமா வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X