Ajith - நன்றி மறந்துவிட்டாரா அஜித்குமார்?.. இப்படி செய்யலாமா ஏகே.. ரசிகர்கள் ஆதங்கம்

சென்னை: Ajith (அஜித்) நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி உயிரிழந்திருக்கும் சூழலில் அதுதொடர்பாக நடிகர் அஜித்தை ரசிகர்களில் ஒருதரப்பினர் விமர்சிக்க தொடங்கியிருக்கின்றனர்.

சினிமாவில் யாரின் துணையுமின்றி நுழைந்து இன்று தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருப்பவர் அஜித்குமார். அவரது கேரியர் ஆரம்பத்தில் அஜித்திற்கு துணையாக நின்றவர்களில் தயாரிப்பாளர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி முக்கியமானவர். அஜித்தின் ராசி, வாலி, வில்லன், வரலாறு, சிட்டிசன், ரெட், முகவரி, ஆஞ்ச்நேயா, ஜீ உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் சக்கரவர்த்தி. இரண்டு பேரும் நெருங்கி பழகியவர்கள்.

Fans Condemns To Actor Ajith Kumar For he not attending Nic arts chakravarthu funeral

நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி மரணம்: காலம் செல்ல செல்ல நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி சினிமாவிலிருந்து ஒதுங்கினார். கடைசியாக அவர் விலங்கு வெப் சீரிஸில் சிறிய வேடம் ஒன்றில் நடித்திருந்தார். சூழல் இப்படி இருக்க புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த அவர் சில நாள்களுக்கு முன்பாக உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு ஒட்டுமொத்த திரையுலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் சிறந்த தயாரிப்பாளர் இறந்துவிட்டார் என பலரும் கூறிவருகின்றனர்.

நம்பிக்கையை விதைத்தவர்: அஜித்தை வைத்து பத்துக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர் நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி., அதுமட்டுமின்றி யாரின் துணையில்லாமல் அஜித் தவித்தபோது அவருக்கு துணையாக இருந்தது சக்கரவர்த்தி மட்டுமே. அதேபோல் அஜித்தை நம்பி பணம் போடலாம் என்ற நம்பிக்கையை பிற தயாரிப்பாளர்களிடம் விதைத்ததும் சக்கரவர்த்தி மட்டும்தான் என பலர் கூறுவதுண்டு.

இப்படி செய்யலாமா அஜித்?: இந்தச் சூழலில் அஜித்தை சிலர் விமர்சிக்க தொடங்கியிருக்கின்றனர். அதாவது நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி உயிரிழப்புக்கு அஜித் எங்கிருந்தாலும் நேரில் வந்திருக்க வேண்டும் என சிலர் கூறிவருகின்றனர். தன்னுடைய வழிகாட்டியாகவும், தனது நண்பராகவும் இருந்த சக்கரவர்த்தி இறந்த செய்தி எப்படியும் அஜித்துக்கு சென்றிருக்கும். ஆனால் நேரில் வராமல் இருக்க அவருக்கு எப்படி மனம் வந்தது என கேள்வி எழுப்பிவருகின்றனர்.

Fans Condemns To Actor Ajith Kumar For he not attending Nic arts chakravarthu funeral

இரங்கல்கூடவா தெரிவிக்கக்கூடாது?: அஜித் இப்போது வேர்ல்ட் டூரில் இருப்பதால் அவரால் வர முடியவில்லை என ஏகே ரசிகர்களில் சிலர் கூறுகின்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தன்னை வளர்த்துவிட்டவரின் மரணத்திற்கு வருவதைவிடவா வேர்ல்ட் டூர் அவசியம் என கேள்வி எழுப்பும் அவர்கள், சரி நேரில்தான் வர முடியவில்லை குறைந்தபட்சம் ஒரு இரங்கலை தெரிவித்திருக்கக்கூடாதா. அவரது இந்த செயலை பார்க்கும்போது அஜித் நன்றி மறந்துவிட்டாரோ என நினைக்க தோன்றுவதாக காட்டமாக பதிலடி கொடுத்துவருகின்றனர்.

விடாமுயற்சி: இதற்கிடையே அஜித்தின் பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அதனையொட்டி அவரது அடுத்த படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. அதன்படி படத்துக்கு விடாமுயற்சி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார் லைகா தயாரிக்கிறார். படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கவிருப்பதாகவும், 50 நாள்களுக்குள் ஷூட்டிங்கை முடிக்க மகிழ் திட்டமிட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X