ஒரு "இயற்கை" போதும்னு முடிவு பண்ணிட்டார் போல.. எஸ்பி ஜனநாதன் மறைவு.. ரசிகர்கள் கண்ணீர்!
சென்னை: இயக்குநர் எஸ்பி ஜனநாதனின் மறைவை தொடர்ந்து ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Recommended Video
இயக்குநர் எஸ்பி ஜனநாதன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை காலமானார். கடந்த வியாழக்கிழமை உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார் எஸ்பி ஜனநாதன்.
அவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில் ஐசியூவில் வைத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

ரசிகர்கள் இரங்கல்
இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி எஸ்பி ஜனநாதன் காலமானர். அவரது மறைவுக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்த நிலையில் ரசிகர்களும் அவர் குறித்து நினைவுகளை சமூக வலைதளங்களில் உருக்கமாக பகிர்ந்து வருகின்றனர்.

பேரதிர்ச்சியான ஒன்று..
எஸ்பி ஜனநாதனின் மறைவு குறித்து பதிவிட்டுள்ள இந்த ரசிகர், சினிமா என்ற மிகப்பெரிய ஊடகத்தில் பணம் பார்க்க வாய்ப்புகள் இருந்த போதிலும் கம்யூனிஸ சித்தாந்தங்களை, சமூக அக்கறையுடன் தன் படைப்புகள் வழியே தொடர்ந்து வழங்கி வந்த தோழர் ஜனநாதன் மறைவு பேரதிர்ச்சியான ஒன்று! ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

சிந்தனைக்கு ரசிகன்..
எஸ்பி ஜனநாதனின் மறைவு குறித்து பதிவிட்டுள்ள இந்த நெட்டிசன், தேற்றிக் கொள்ள முடியாத வருத்தம் உங்கள் மறைவு..
உங்கள் சிந்தனைக்கு தனி ரசிகன் நான்.. என உருக்கமாக பதிவிட்டுள்ளார்

லாபம் பார்க்காமல்
"இயற்கை" இனிப்பில்
"ஈ" போல அமர்ந்து
"பேராண்மை"யோடு ரசித்த
"புறம்போக்கு என்னும்
பொதுவுடைமை" வாதி
"பூலோகத்தில்" இருந்து
"லாபம்" பார்க்காமல்
மறைந்துவிட்டார் என எஸ்பி ஜனநாதன் மறைவு குறித்து பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

கண்ணீருடன்..
மற்றொரு நெட்டிசனான இவர், எஸ்பி ஜனநாதன் மறைவு குறித்து சமூக கருத்துள்ள பல சிறந்த படைப்புகளை அளித்ததற்கு நன்றிகள் கண்ணீருடன் என டிவிட்டியுள்ளார்.

மிகவும் வருத்தம்..
மற்றொரு நெட்டிசனான இவர், திரைப்படங்களில் கம்யூனிஸ்ட் தத்துவம் பேசிய இயக்குனர் இவர். ஐயா இறப்பு மிகவும் வருத்தத்தை தருகிறது என பதிவிட்டுள்ளார்.

அரிய நட்சத்திரம்
மற்றொரு நெட்டிசனான இவர், ஒடுக்கப்பட்டவர்களின் பக்கமாக நின்று சிந்திப்பதை எந்நாளும் கைவிடாதவர். வாழ்வை அறிவியலின் கண்கொண்டு அணுகுவதை எப்போதும் வலியுறுத்தியவர். தன் படைப்புகளிலும் விடாப்பிடியாக அதை முன்னிறுத்திய அரசியல் படைப்பாளி. தமிழ்சினிமாவின் அரிய நட்சத்திரம் ஜனநாதன். அஞ்சலிகள் என பதிவிட்டுள்ளார்.

புகழ் வணக்கம்..
மற்றொரு ரசிகரான இவர், பொதுவுடைமையின் தந்தை காரல் மார்க்சின் நினைவு நாளில் தன் மூச்சை நிறுத்திக் கொண்ட தோழர் ஜனநாதனுக்கு புகழ்வணக்கம் என குறிப்பிட்டுள்ளார்.

சமூகத்திற்கான இழப்பு
மற்றொரு நெட்டிசனான இவர் பொதுவுடமை, சமூகநீதியையும் முன்வைத்து பூரணமான அரசியல் படைப்புகளை பேசும் கலைஞர்களின் இழப்பு என்பது ஒரு சமூகத்திற்குமான இழப்பு. செவ்வணக்கம் தோழர் என பதிவிட்டுள்ளார்.

புகழ் நிலைத்து இருக்கும்..
மற்றொரு ரசிகரான இவர், எப்படியும் மீண்டு வருவார் என்று நினைத்து இருந்தேன், நம்மை எல்லாம் விட்டு பிரிந்து விட்டார். ஆன்மா அமைதி பெறட்டும். உங்கள் புகழ் என்றென்றும் நிலைத்து இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

துயரக்கடலில் ஆழ்த்துகிறது..
எஸ்பி ஜனநாதனின் மறைவை அறிந்த இந்த ரசிகர், தமிழ் சினிமாவின் அரிதிலும் அரிதான இயக்குநர், மிகச்சிறந்த மனிதர் தோழர் மறைவு, துயரக்கடலில் ஆழ்த்துகிறது. எமது இதயம் கவர்ந்த இயக்குநருக்கு கண்ணீர் அஞ்சலி என பதிவிட்டுள்ளார்.

முடிவு பண்ணிட்டார் போல
எஸ்பி ஜனநாதன் காலமானதை அறிந்த இந்த நெட்டிசன், ஒரு "இயற்கை" போதும்னு முடிவு பண்ணிட்டார் போல! என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











